இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் விட்ஜெட்களைச் சேர்த்தல், திருத்துதல் மற்றும் அகற்றுதல்

iPhone முகப்புத் திரையில் உள்ள வானிலை, நினைவூட்டல்கள் மற்றும் ஹோம் விட்ஜெட்கள். பயன்படுத்தக்கூடிய அம்சங்களை நினைவூட்டல்கள் மற்றும் ஹோம் விட்ஜெட்கள் காட்டுகின்றன.

விட்ஜெட்கள் என்றால் என்ன?

இன்றைய தலைப்புச் செய்திகள், வானிலை, நினைவூட்டல்கள், பேட்டரி நிலைகள் மற்றும் பலவற்றைப் பற்றிய தற்போதைய தகவல்களை ஒரே பார்வையில் பார்க்க விட்ஜெட்டுகள் உங்களுக்கு ஓர் எளிய வழியை வழங்குகின்றன. “இன்றைய பார்வையில்” விட்ஜெட்களைக் காணலாம், இந்தத் தகவலை உங்கள் விரல் நுனியில் வைத்திருக்க அவற்றை உங்கள் முகப்புத் திரை அல்லது பூட்டுத் திரையில் சேர்க்கலாம்.

செயலியைத் திறக்காமலேயே முகப்புத் திரை அல்லது பூட்டுத் திரையில் உள்ள விட்ஜெட்களைப் பயன்படுத்தலாம். இசை, பாட்காஸ்ட்கள், Safari, ஹோம், தொடர்புகள் மற்றும் பலவற்றுக்காக விட்ஜெட்களில் செயல்களை மேற்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஒரு தேர்வை பிளே செய்ய, இசை அல்லது பாட்காஸ்ட் விட்ஜெட்டில் “பிளே செய்” பட்டன்-ஐத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: “ஸ்மார்ட் ஸ்டேக்” (அதற்கு அடுத்து புள்ளிகள் இருக்கும்) என்பது விட்ஜெட்களின் ஒருங்கிணைந்த தொகுப்பாகும். மிகத் தொடர்புடைய விட்ஜெட்டை ஒரு குறிப்பிட்ட நாளில் உகந்த நேரத்தில் தானாகக் காட்ட, நேரம், உங்கள் இருப்பிடம், செயல்பாடு போன்ற தகவல்களை இது பயன்படுத்தும். விட்ஜெட் கேலரியில் இருந்து ஒரு ஸ்மார்ட் ஸ்டேக்கை முகப்புத் திரையில் சேர்த்து, அதில் உள்ள விட்ஜெட்டுகளைப் பார்க்க அதை மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் ஸ்வைப் செய்யலாம்.

உங்கள் முகப்புத் திரையில் விட்ஜெட்டைச் சேர்த்தல்

  1. முகப்புத் திரைக்குச் செல்லவும்.

  2. விட்ஜெட்டைச் சேர்க்க விரும்பும் முகப்புத் திரைப் பக்கத்தைக் கண்டறிந்து, செயலிகள் ஜிகிள் ஆகத் தொடங்கும் வரை முகப்புத் திரையின் பின்னணியைத் தொட்டுப் பிடிக்கவும்

  3. திரையின் மேலே உள்ள “திருத்து” என்பதைத் தட்டி விட்ஜெட் கேலரியைத் திறக்க “விட்ஜெட்டைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  4. ஸ்க்ரால் செய்து அல்லது தேடி விட்ஜெட்டைக் கண்டறிந்து, அதைத் தட்டி, அளவு விருப்பங்களில் ஸ்வைப் செய்யவும்.

    வெவ்வேறு அளவுகள் வெவ்வேறு தகவல்களைக் காட்டுகின்றன.

  5. நீங்கள் சேர்க்க விரும்பும் அளவைப் பார்க்கும்போது, “விட்ஜெட்டைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  6. செயலிகள் ஜிகிள் ஆகிக் கொண்டிருக்கும்போது, திரையில் நீங்கள் விரும்பும் இடத்திற்கு விட்ஜெட்டை நகர்த்தி, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

உங்கள் பூட்டுத் திரையில் விட்ஜெட்டை எப்படிச் சேர்ப்பது என்று தெரிந்துகொள்ள, புதிய பூட்டுத் திரையைப் பிரத்தியேகப்படுத்துதல் பிரிவைப் பார்க்கவும்.

விட்ஜெட்களைப் பயன்படுத்துதல்

உங்கள் முகப்புத் திரை, பூட்டுத் திரை அல்லது காத்திருப்புப் பயன்முறையில் உள்ள விட்ஜெட்களைத் தட்டுவதன் மூலம் பணிகளைச் செய்யலாம். நினைவூட்டல்களில் உள்ள ஐட்டத்தைச் சரிபார்க்க அதைத் தட்டவும், ஒரு எபிசோடை பிளே செய்ய பாட்காஸ்ட் விட்ஜெட்டில் உள்ள “பிளே செய்” பட்டனைத் தட்டவும் அல்லது லிவ்விங் ரூம் விளக்குகளை ஆன் செய்ய ஹோம் விட்ஜெட்டைத் தட்டலாம். இவை அனைத்தையும் செயலியைத் திறக்காமலேயே செய்யலாம்.

உங்கள் முகப்புத் திரையில் விட்ஜெட்டைத் திருத்துதல்

பெரும்பாலான விட்ஜெட்களை உங்கள் முகப்புத் திரையிலிருந்தே பிரத்தியேகப்படுத்தலாம் என்பதால் அவை நீங்கள் பார்க்க விரும்பும் தகவல்களைக் காட்டும். எடுத்துக்காட்டாக, Mail விட்ஜெட்டிற்கு, விட்ஜெட்டில் காட்டப்படும் அஞ்சல் பெட்டியைத் தட்டி, வேறொரு அஞ்சல் பெட்டியைத் தேர்வுசெய்யலாம் என்பதால் அந்த அஞ்சல்பெட்டியில் உள்ள மெசேஜ்கள் விட்ஜெட்டில் காட்டப்படும். அல்லது உங்கள் செயல்பாடு, இருப்பிடம், நாளின் நேரம் மற்றும் பலவற்றின் அடிப்படையில் ஸ்மார்ட் ஸ்டேக் அதன் விட்ஜெட்களில் சுழற்றப்படும் வகையில் நீங்கள் பிரத்தியேகப்படுத்தலாம்.

  1. முகப்புத் திரைக்குச் செல்லவும்.

  2. விரைவுச் செயல்கள் மெனுவைத் திறக்க விட்ஜெட்டைத் தொட்டுப் பிடிக்கவும்.

  3. “விட்ஜெட்டைத் திருத்து” என்பதைத் தட்டி (ஸ்மார்ட் ஸ்டேக்காக இருந்தால் “ஸ்டேக்கைத் திருத்து” என்பதைத் தட்டி), விருப்பங்களைத் தேர்வுசெய்யவும்.

    ஸ்மார்ட் ஸ்டேக்கிற்கு, “ஸ்மார்ட் சுழற்றல்” அல்லது “விட்ஜெட் பரிந்துரைகளை” (விட்ஜெட்டிற்குக் கீழே) ஆன் அல்லது ஆஃப் செய்யலாம், ஸ்டேக்கிற்குள் விட்ஜெட்களை இழுப்பதன் மூலம் அவற்றை மறுவரிசைப்படுத்தலாம், ஸ்மார்ட் ஸ்டேக்கில் இருந்து முகப்புத் திரைக்கு விட்ஜெட்டை இழுக்கலாம் அல்லது விட்ஜெட்டின் மேல் இடது மூலையில் உள்ள “அகற்று” பட்டன்-ஐத் தட்டுவதன் மூலம் அதை அகற்றலாம்.

    “விட்ஜெட் பரிந்துரைகளை” ஆன் செய்தால், நீங்கள் ஏற்கெனவே பயன்படுத்தும் செயலிகளுக்கான விட்ஜெட்கள் உங்கள் முந்தைய செயல்பாட்டின் அடிப்படையில் சரியான நேரத்தில் உங்கள் ஸ்மார்ட் ஸ்டேக்கில் தானாகவே காட்டப்படும். விட்ஜெட்டை உங்கள் ஸ்டேக்கில் சேர்க்க ஒரு விருப்பம் உங்களை அனுமதிக்கிறது என்பதால் உங்களுக்குத் தேவைப்படும்போது அது எப்போதும் இருக்கும்.

    ஸ்டேக்கில் விட்ஜெட்டின் மேல் இடது மூலையில் உள்ள “அகற்று” பட்டன் மூலம் ஸ்மார்ட் ஸ்டேக் திருத்தப்படுகிறது. கீழே இருப்பவை “ஸ்மார்ட் சுழற்றல்” பட்டன் மற்றும் ஸ்டேக்கில் விட்ஜெட்களைச் சேர்ப்பதற்கான “விட்ஜெட் பரிந்துரைகள்” பட்டன் ஆகும்.
  4. “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

முகப்புத் திரையில் இருந்து விட்ஜெட்டை அகற்றுதல்

  1. முகப்புத் திரைக்குச் செல்லவும்.

  2. விரைவுச் செயல்கள் மெனுவைத் திறக்க விட்ஜெட்டைத் தொட்டுப் பிடிக்கவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • விட்ஜெட்டை அகற்றுதல்: “விட்ஜெட்டை அகற்று” என்பதைத் தட்டவும்.

    • ஸ்மார்ட் ஸ்டேக்கை அகற்றுதல்: “ஸ்டேக்கை அகற்று” என்பதைத் தட்டவும்.

“இன்றைய பார்வையில்” விட்ஜெட்களைக் காட்டுதல்

“இன்றைய பார்வையில்” விட்ஜெட்களைக் காண, முகப்புத் திரையின் இடது விளிம்பில் இருந்து வலதுபுறமாக ஸ்வைப் செய்து, மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் ஸ்க்ரால் செய்யவும்.

நினைவூட்டல்கள், ஃபோட்டோஸ், பேட்டரி, கேலண்டர் மற்றும் உதவிக்குறிப்புகள் போன்றவை உட்பட “இன்றைய பார்வையில்” காட்டப்படும் விட்ஜெட்கள்.

குறிப்பு: முகப்புத் திரையில் வலதுபுறமாக ஸ்வைப் செய்தால் விட்ஜெட்கள் காட்டப்படவில்லை எனில், iPhone லாக் செய்யப்பட்டிருக்கும் போது “இன்றைய பார்வை” மற்றும் தேடலில் விட்ஜெட்களைக் காட்டுதல் என்ற அடுத்த பணியைப் பார்க்கவும்.

iPhone லாக் செய்யப்பட்டிருக்கும்போது “இன்றைய பார்வை” மற்றும் தேடலில் விட்ஜெட்களைக் காட்டச் செய்தல்

  1. அமைப்புகள்  > Face ID & பாஸ்கோடு (Face ID உடன் கூடிய iPhoneஇல்) என்பதற்கு அல்லது Touch ID & பாஸ்கோடு (பிற iPhone மாடல்களில்) என்பதற்குச் செல்லவும்.

  2. உங்கள் பாஸ்கோடை உள்ளிடவும்.

  3. “இன்றைய பார்வை” மற்றும் தேடலை ஆன் செய்யவும் (“லாக் செய்யப்பட்டிருக்கும்போது அணுக அனுமதி” என்பதற்குக் கீழே).

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.