இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் Apple TV+, MLS சீஸன் பாஸ் அல்லது Apple TV சேனலுக்கு சந்தா சேருதல்

Apple TV செயலியில் Apple TV+, MLS சீஸன் பாஸ்,Apple TV சேனல்கள் ஆகியவற்றுக்கு சந்தா சேரலாம். சந்தா சேர்வதன் மூலம் iPhone, iPad, Mac, Apple TV, Apple Vision Pro, ஆதரிக்கப்படும் ஸ்மார்ட் டிவிக்கள், ஸ்ட்ரீமிங் சாதனங்கள் ஆகியவற்றில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளடக்கத்திற்கான அணுகலைப் பெறலாம். ஆஃப்லைனில் பார்க்க iPhone, iPad, Mac சாதனங்களில் வீடியோவைப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

Apple One சந்தா சேர்வதன் மூலம் உங்கள் Apple TV+ சந்தாவை பிற Apple சேவைகளுடன் இணைப்பதை நீங்கள் தேர்வு செய்யலாம். Apple One மூலம் Apple சந்தாக்களைத் தொகுத்தல் என்ற Apple ஆதரவு கட்டுரையைப் பார்க்கவும்.

குறிப்பு: Apple TV+, MLS சீஸன் பாஸ், Apple TV சேனல்கள், Apple One ஆகியவை அனைத்து நாடுகள் அல்லது வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை. Apple மீடியா சேவைகள் கிடைக்கும் தன்மை என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

Apple TV+க்குச் சந்தா சேருதல்

Apple TV+ என்பது Apple Originals வழங்கும் விருது பெற்ற தொடர்கள், கவனம் ஈர்க்கும் நாடகங்கள், அற்புதமான ஆவணப்படங்கள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு, நகைச்சுவை மற்றும் பலவற்றைக் கொண்ட சந்தா ஸ்ட்ரீமிங் சேவையாகும்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள Apple TV செயலிக்குச் செல்லவும்.

  2. Apple TV+ என்பதைத் தட்டி “சந்தா சேர்க” பட்டனைத் தட்டவும்.

  3. இலவச ட்ரயல் (தகுதி பெற்றிருந்தால்) மற்றும் சந்தா விவரங்களைச் சரிபார்த்த பிறகு திரையில் உள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றவும்.

MLS சீசன் பாஸுக்குச் சந்தா சேருதல்

MLS சீசன் பாஸ் என்பது மேஜர் லீக் சாக்கர் சீசனின் போட்டிகள் அனைத்தையும் ஒரே இடத்தில், நிலையான போட்டி நேரங்களுடன், பிளாக்அவுட்கள் இல்லாமல் பார்க்க உதவும் ஸ்ட்ரீமிங் சந்தா சேவை ஆகும்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள Apple TV செயலிக்குச் செல்லவும்.

  2. தேடலைத் தட்டி “MLS சீஸன் பாஸ்” என்பதைத் தட்டவும்.

  3. “சந்தா சேர்க” பட்டனைத் தட்டவும்.

  4. சந்தா விவரங்களைச் சரிபார்த்து, சந்தா விருப்பத்தைத் தட்டிய பிறகு திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

Apple TV சேனல்கள் மற்றும் செயலிகளுக்கு சந்தா சேருதல்

Apple TV சேனல்களில் நீங்கள் சந்தா சேர்வதன் மூலம் செயலிகள் எதையும் பதிவிறக்காமலேயே நீங்கள் விரும்பும் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள Apple TV செயலிக்குச் செல்லவும்.

  2. “ஸ்டோர்” என்பதைத் தட்டி “சேனல்கள் & செயலிகளைச் சேர்” வரிசைக்கு கீழே ஸ்க்ரால் செய்யவும்.

  3. உலாவ, இடதுபக்கம் ஸ்வைப் செய்த பிறகு ஐட்டத்தைத் தட்டவும்.

  4. சந்தா சேர் பட்டனைத் தட்டி இலவச ட்ரயல் (தகுதி பெற்றிருந்தால்) மற்றும் சந்தா விவரங்களைச் சரிபார்த்த பிறகு திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

ஆதரிக்கப்படும் ஸ்ட்ரீமிங் செயலிகளை இணைப்பு நீக்க, மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் படம் அல்லது பெயரின் முதலெழுத்துக்களைத் தட்டி “இணைக்கப்பட்ட செயலிகள்” என்பதைத் தட்டி ஸ்ட்ரீமிங் செயலிக்கு அடுத்துள்ள “இணைப்பு நீக்கு” பட்டனைத் தட்டவும்.

உங்கள் சந்தாக்களை Apple TV+, MLS சீசன் பாஸ் அல்லது Apple TV சேனல்களுக்கு மாற்றுதல் அல்லது ரத்துசெய்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள Apple TV செயலிக்குச் செல்லவும்.

  2. முகப்பைத் தட்டி மேல் வலதுபக்கம் உள்ள உங்கள் படம் அல்லது முதலெழுத்துக்களைத் தட்டவும்.

  3. சந்தாக்களை நிர்வகி என்பதைத் தட்டவும்.

  4. உங்கள் சந்தாவை மாற்ற அல்லது ரத்துசெய்ய திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

Apple TV+, MLS சீசன் பாஸ் மற்றும் Apple TV சேனல் சந்தாக்களைக் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்தல்

நீங்கள் Apple TV+, MLS சீசன் பாஸ், Apple TV சேனல்கள் அல்லது Apple Oneக்குச் சந்தா சேரும்போது ஐந்து குடும்ப உறுப்பினர்கள் வரை உங்கள் சந்தாக்களைப் பகிர குடும்பப் பகிர்வைப் பயன்படுத்தலாம். உங்கள் சந்தாத் திட்டம் தொடங்கிய பிறகு உங்கள் குடும்பக் குழு உறுப்பினர்கள் Apple TV செயலியை முதலில் திறக்கும் போது அவர்களுக்கு பகிரப்பட்ட சந்தா கிடைக்கும். அவர்கள் வேறெதுவும் செய்ய வேண்டியதில்லை.

Apple TV+, MLS சீசன் பாஸ், Apple TV சேனல்கள் அல்லது Apple One ஆகியவற்றுக்கு சந்தா சேர்ந்துள்ள குடும்பக் குழுவில் நீங்கள் சேரும்போதும் ஏற்கெனவே சந்தா சேர்ந்திருந்தாலும் பில்லிங் தேதியில் உங்கள் சந்தா புதுப்பிக்கப்படாது. அதற்கு பதிலாக, குழுவின் சந்தாவைப் பயன்படுத்துவீர்கள். சந்தா சேர்ந்திருக்காத குடும்பக் குழுவில் நீங்கள் சேர்ந்தால், அந்தக் குழுவில் உள்ளவர்கள் உங்கள் சந்தாவைப் பயன்படுத்துவார்கள்.

குறிப்பு: உங்கள் சந்தாவைக் குடும்பக் குழுவுடன் பகிர்வதை நிறுத்த, சந்தாவை ரத்துசெய்யலாம், குடும்பப் பகிர்வு குழுவிலிருந்து ஒரு உறுப்பினரை நீக்கலாம் அல்லது அகற்றலாம் அல்லது (நீங்கள் குடும்பக் குழு ஒருங்கிணைப்பாளராக இருந்தால்) குடும்பப் பகிர்வைப் பயன்படுத்துவதை நிறுத்தலாம்.

Apple TV+ (சில நாடுகள் மற்றும் வட்டாரங்களில், இதில் வெள்ளி இரவு நடைபெறும் பேஸ்பால் விளையாட்டு, ஞாயிறு இரவு நடைபெறும் சாக்கர் விளையாட்டு அல்லது இரண்டுமே அடங்கும்) மற்றும் MLS Season Passக்கு (இதில் ஞாயிறு இரவு நடைபெறும் சாக்கர் விளையாட்டு அடங்கும்) சந்தா தேவை. MLS Season Pass, ஞாயிறு இரவு நடைபெறும் சாக்கர் விளையாட்டு மற்றும் வெள்ளி இரவு நடைபெறும் பேஸ்பால் விளையாட்டிற்கு iOS 16.2 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள் தேவை. அனைத்து அம்சங்களும் உள்ளடக்கமும் அனைத்து நாடுகளிலும் வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.