இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உள்ள Safari செயலியில் தாவல் குழுக்களைப் பகிர்தல் மற்றும் கூட்டுப்பணியாற்றுதல்

நீங்கள் ஒரு தாவல் குழுவைப் பகிரலாம் மற்றும் iCloudஐப் பயன்படுத்தும் நபர்களுடன் கூட்டுப்பணியாற்றலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தாவல் குழுவில் நபர்களைச் சேர்க்கலாம் அல்லது அதிலிருந்து நீக்கலாம், மேலும் Safari செயலியில் இருந்து வெளியேறாமல் மெசேஜ் உரையாடல், ஃபோன் அழைப்பு அல்லது FaceTime அழைப்பைத் தொடங்கலாம். கூட்டுப்பணியாற்றுபவர்கள் தாவல் குழுவில் தாவல்களைச் சேர்க்கலாம் மற்றும் அதிலிருந்து அகற்றலாம். அனைவரும் நிகழ்நேரத்தில் மாற்றங்களைப் பார்க்க முடியும்.

நீங்கள் கூட்டுப்பணியாற்றும் ஒவ்வொருவரும் கட்டாயமாக அவர்களின் Apple கணக்கில் உள்நுழைந்திருக்க வேண்டும், iCloud அமைப்புகளில் Safariஐ ஆன் செய்திருக்க வேண்டும், இரு-காரணி அங்கீகாரத்தை ஆன் செய்திருக்க வேண்டும்.

தாவல் குழுவைப் பகிர்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள Safari செயலிக்குச் செல்லவும்.

  2. தாவல் குழுவில் திறந்துள்ள தாவல்களைப் பார்க்க “தாவல்கள்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. தாவல் குழுவின் மேல் வலது மூலையில் உள்ள “பகிர்” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. மெசேஜஸைத் தட்டி, அதைப் பகிர விரும்பும் நபர் அல்லது குழுவைத் தேர்வுசெய்யவும்.

    பகிரப்பட்ட தாவல் குழுவில் யாராவது மாற்றங்களைச் செய்யும்போது மெசேஜஸ் செயலியில் உள்ள உரையாடலில் செயல்பாட்டு புதுப்பிப்புகளைப் பெறுவீர்கள். பகிரப்பட்ட தாவல் குழுவிற்குச் செல்ல, புதுப்பிப்புகளைத் தட்டவும்.

பகிரப்பட்ட தாவல் குழுவில் நபர்களைச் சேர்த்தல் மற்றும் குழுவிலிருந்து அகற்றுதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள Safari செயலிக்குச் செல்லவும்.

  2. மேல் வலது மூலையில் உள்ள “கூட்டுப்பணியாற்றுக” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. “பகிரப்பட்ட தாவல் குழுவை நிர்வகி” என்பதைத் தட்டி பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • ஒருவரை அகற்ற: ஒரு பெயரைத் தட்டி அணுகலை அகற்று என்பதைத் தட்டவும்.

    • ஒருவரைச் சேர்க்க: “அதிக நபர்களுடன் பகிர்” என்பதைத் தட்டி அவர்களை அழைக்கவும்.

    • அனைவருடனும் பகிர்வதை நிறுத்த: “பகிர்வதை நிறுத்து” என்பதைத் தட்டவும்.

Safari செயலியிலிருந்து மெசேஜ்கள், ஆடியோ அல்லது வீடியோ உரையாடலைத் தொடங்குதல்

Safari செயலியில் இருந்து வெளியேறாமல் தாவல் குழுவில் பகிரும் அனைவருடனும் நீங்கள் மெசேஜஸ், FaceTime ஆடியோ அல்லது FaceTime வீடியோவைப் பயன்படுத்தி உரையாடலைத் தொடங்கலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள Safari செயலிக்குச் செல்லவும்.

  2. Safari செயலியில் உரையாடலைத் தொடங்க, “கூட்டுப்பணியாற்றுக” பட்டன்-ஐத் தட்டி மெசேஜ், ஆடியோ அல்லது வீடியோவைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.