இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் Apple Cardஐப் பயன்படுத்துதல்

Apple Card (அமெரிக்காவில் கிடைக்கும்) என்பது Apple உருவாக்கிய கிரெடிட் கார்டாகும். இது நீங்கள் ஆரோக்கியமான நிதி வாழ்க்கையை வாழ உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. iPhoneஇல் உள்ள வாலெட் செயலியில் சில நிமிடங்களிலேயே Apple Cardக்குப் பதிவுசெய்து, Apple Pay மூலம் அதை உடனடியாக உலகெங்கிலும் ஸ்டோர்களில், செயலிகளில் அல்லது ஆன்லைனில் பயன்படுத்தத் தொடங்கலாம். உங்கள் வாலெட்டில் உள்ள பேலன்ஸ் மற்றும் சமீபத்திய பரிவர்த்தனைகள் குறித்த நிகழ்நேர காட்சியை எளிதில் புரிந்துகொள்ளத்தக்க வகையில் Apple Card உங்களுக்கு வழங்குகிறது. மெசேஜஸ் செயலியில் இருந்து மெசேஜ் அனுப்புவதன் மூலம் Apple Card உதவியை எப்போது வேண்டுமானாலும் எளிதில் பெறலாம்.

வாலெட்டில் உள்ள Apple Card, மேல் வலதுபக்கம் உள்ள “மேலும்” பட்டனைக் காட்டுகிறது. கார்டின் படத்திற்குக் கீழே கார்டு பேலன்ஸ், வாராந்தரச் செயல்பாடு மற்றும் பேமெண்ட் பட்டன் ஆகியவை உள்ளன. சேமிப்புக் கணக்கின் தற்போதைய பேலன்ஸ், சமீபத்திய கார்டு பரிவர்த்தனைகள் ஆகியவை கீழே உள்ளன.

Apple Cardக்கு விண்ணப்பித்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள வாலெட்  செயலிக்குச் செல்லவும்.

  2. “கார்டைச் சேர்” பட்டன்-ஐத் தட்டி, “Apple Cardக்கு விண்ணப்பிக்கவும்” என்பதைத் தட்டவும்.

மேலும் தகவலுக்க, Apple Cardக்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

Apple Card மூலம் வாங்குதல்

Apple Card மூலம் நீங்கள் பின்வரும் வழிகளில் வாங்கலாம்:

  • Apple Pay மூலம்: கான்டாக்ட்லெஸ் பேமெண்ட் டெர்மினல்களில் மற்றும் செயலிகளில் அல்லது இணையத்தில்.

  • விர்ச்சுவல் கார்டு எண் மூலம்: வாலெட்  செயலியில், Apple Card என்பதைத் தட்டி, கார்டு எண், காலாவதி தேதி, பாதுகாப்புக் குறியீடு ஆகியவற்றைப் பார்க்க “கார்டு எண்” பட்டன் என்பதைப் பார்க்கவும்.

  • டைட்டானியம் கார்டு மூலம்: Apple Pay இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாத கடைகள், உணவகங்கள் மற்றும் பிற இடங்களில் கார்டைப் பயன்படுத்தவும்.

பரிவர்த்தனைகளைப் பார்த்தல், பேமெண்ட்டுகளைச் செய்தல், உங்கள் Apple Cardஐ நிர்வகித்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள வாலெட்  செயலிக்குச் செல்லவும்.

  2. Apple Cardஐத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • உங்கள் செலவுகளைச் சரிபார்க்க: சமீபத்திய பரிவர்த்தனைகளைப் பார்க்க கீழே ஸ்க்ரால் செய்யவும் அல்லது தேடிப்பார்க்க “தேடல்” பட்டன்-ஐத் தட்டவும். “வாராந்தரச் செயல்பாடு” அல்லது “மாதாந்தரச் செயல்பாடு” என்பதைத் தட்டுவதன் மூலம் அந்தக் காலகட்டத்தில் நீங்கள் செய்த செலவைப் பார்க்கலாம்.

      உங்கள் Apple Cardஇன் செலவு வரலாறு என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

    • பேமெண்ட்டை ஒரே தவணையாகச் செலுத்துங்கள் அல்லது தானியங்கு பேமெண்ட் தவணைகளைத் திட்டமிடுங்கள்: பேமெண்ட் பட்டனைத் தட்டவும். Apple Card பேமெண்ட்களைச் செய்யும் விதம் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

    • விர்ச்சுவல் கார்டு எண்ணைப் பார்க்க: கார்டு எண், காலாவதி தேதி மற்றும் பாதுகாப்புக் குறியீட்டைப் பார்க்க, “கார்டு எண்” பட்டன்-ஐத் தட்டவும்.

    • உங்கள் கணக்கை நிர்வகிக்க: வெகுமதிகள் மற்றும் சலுகைகளைச் சரிபார்க்க “மேலும்” பட்டன்-ஐத் தட்டவும். கணக்கு விவரங்கள், தொடர்பு ஆதரவு, அறிவிப்புகளை நிர்வகித்தல் மற்றும் பலவற்றைப் பார்க்கவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் பேலன்ஸ், மீதமிருக்கும் கிரெடிட், செலவழிக்கும் செயல்பாடுகள் ஆகியவற்றை ஒரே பார்வையில் பார்க்க உங்கள் முகப்புத் திரையில் Apple Card விட்ஜெட்டைச் சேர்க்கவும்.

1. Apple Cashக்கும் சேமிப்புக் கணக்கிற்கும் இடையே Daily Cash பிரிக்கப்படாமல் இருக்கலாம். Apple Card உரிமையாளர்களும் இணை உரிமையாளர்களும் தங்கள் Daily Cash டெபாசிட் செய்யப்பட்ட இடத்தை எப்போது வேண்டுமானாலும் தனித்தனியாக மாற்றலாம். “சேமிப்புக் கணக்கு” என்பதைத் திறக்க, சமீபத்திய iOS அல்லது iPadOS பதிப்பைக் கொண்ட iPhone அல்லது iPad சாதனத்தில் உள்ள வாலெட்டில் Apple Cardஐச் சேர்க்க வேண்டும். Apple ஒரு நிதி நிறுவனம் அல்ல. Apple Card, சேமிப்புக் கணக்கு ஆகிய இரண்டும் Goldman Sachs Bank USA, Salt Lake City Branch மூலம் வழங்கப்படுகின்றன. Member FDIC.
2. Apple Cash ஆனது Green Dot Bank, Member FDIC.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.