இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் குறிப்புகள் செயலியில் சூத்திரங்களையும் சமன்பாடுகளையும் உள்ளிடுதல்

iPhoneஇல் குறிப்புகள் செயலியில் உள்ள கணித அம்சத்தின் மூலம் வரைபடங்களை வரையலாம், சமன்பாடுகளைத் தீர்க்கலாம், மாறிகளை ஒதுக்கலாம் மற்றும் கிராஃப்களில் மதிப்புகளைக் குறிக்கலாம். “சமன்” குறியீட்டை எழுதினால் அல்லது டைப் செய்தால், கணிதக்கோவைகள் அங்கேயே தீர்க்கப்படும்.

குறிப்பு: மேற்கத்திய அரபு எண்கள் மற்றும் பொதுவான கணிதக் குறியீடுகளைப் பயன்படுத்தி எழுதப்படும் அல்லது அரபு (கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய) மற்றும் தேவநாகரி எண்கள் மற்றும் பொதுவான கணிதக் குறியீடுகளைப் பயன்படுத்தி டைப் செய்யப்படும் கணிதத்தை “குறிப்புகள்” செயலி ஆதரிக்கிறது.

பயணச் செலவுகளின் கணக்கீடு மற்றும் புகைப்படத்துடன் கூடிய ஒரு பயணத்தைத் திட்டமிடுவதற்கான குறிப்பு.

குறிப்பில் கணிதக்கோவைகளைச் சேர்த்தல்

  1. iPhoneஇல் குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. ஒரு குறிப்பைத் திறக்கவும் அல்லது புதிய குறிப்பைத் தொடங்க “புதிய குறிப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யுங்கள்:

    • கணிதக்கோவையை டைப் செய்து “சமன்” குறியீட்டைச் சேர்க்கவும்.

    • “மார்க்-அப்” பட்டன்-ஐத் தட்டி கணிதக்கோவையைக் கிடைமட்டமாக எழுதிய பிறகு “சமன்” குறியீட்டைச் சேர்க்கவும்.

    • “மார்க்-அப்” பட்டன்-ஐத் தட்டி எண்களின் அடுக்கை எழுதிய பிறகு அடுக்கில் எண்களைச் சேர்க்க எண்களுக்குக் கீழே ஒரு கிடைமட்டக் கோடை வரையவும். நீங்கள் வேறொரு செயல்பாட்டைச் செய்ய விரும்பினால், ஒவ்வொரு இலக்கத்தின் இடதுபுறத்திலும் வேறொரு குறியீட்டை எழுதவும்.

  4. நீங்கள் எழுதியதில் “குறிப்புகள்” செயலி என்ன புரிந்துகொண்டது என்பதைப் பார்க்க “சமன்” குறியீட்டைத் தட்டவும். தவறுகளைச் சரிசெய்ய, பின்வருவனவற்றில் ஒன்றை நீங்கள் சரிசெய்யலாம்:

    • அடையாளம் காணப்படாத கணிதம் மற்றும் தீர்க்கமுடியாத கணிதக்கோவைகள்: பிழையைப் பற்றிய விவரங்களைப் பார்க்க, புள்ளியிடப்பட்ட சிவப்பு கோடுகளைத் தட்டவும்.

    • தெளிவற்ற எழுத்துகள்: நீங்கள் எழுதியதை தெளிவுபடுத்திக்கொள்ள புள்ளியிடப்பட்ட நீலக் கோடுகளைத் தட்டவும்.

கிராஃபை உருவாக்குதல்

  1. iPhoneஇல் குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. ஒரு குறிப்பைத் திறக்கவும் அல்லது புதிய குறிப்பைத் தொடங்க “புதிய குறிப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. சமன்பாட்டின் இடது பக்கத்தில் y மாறி இருக்கும் வகையில் x மற்றும் y மாறிகள் கொண்ட சமன்பாட்டை டைப் செய்யவும் அல்லது எழுதவும். எடுத்துக்காட்டாக, y = 5x + 3.

    நீங்கள் ஏற்கனவே எழுதிய சமன்பாட்டில் உள்ள “=“ குறியீட்டையும் தட்டலாம்.

  4. நீங்கள் சமன்பாட்டை எழுதி முடித்ததும், மெனு ஒன்று காட்டப்படும். “கிராஃபைச் சேர்” என்பதைத் தட்டவும்.

    y மாறி செங்குத்து அச்சிலும், x மாறி கிடைமட்ட அச்சிலும் குறிப்பிடப்படுகின்றன.

அதே கிராஃபில் மற்றொரு சமன்பாட்டைச் சேர்க்க, புதிய சமன்பாட்டை டைப் செய்து அல்லது எழுதி “தற்போதுள்ள கிராஃபில் சேர்” என்பதைத் தட்டவும்.

iPhoneஇல் கால்குலேட்டர் செயலியில் கணிதக் குறிப்புகளில் உள்ள கிராஃப்களில் செயல்களை மேற்கொள்ளுதல் என்ற பிரிவையும் பார்க்கவும்.

கால்குலேட்டர் செயலியில் உருவாக்கப்பட்ட கணிதக் குறிப்புகளை அணுகுதல்

  1. iPhoneஇல் குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. கோப்புறைகள் பட்டியலில், “கணிதக் குறிப்புகள்” என்பதைத் தட்டவும்.

கால்குலேட்டரில் கணிதக் குறிப்புகள் மூலம் கணிதத்திற்குத் தீர்வைப் பெறுதல் என்ற பிரிவைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.