இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உள்ள Safari செயலியில் தாவல்களைத் திறந்து மூடுதல்

திறந்துள்ள பல இணையப் பக்கங்களுக்கு இடையில் செல்ல உதவும் வகையில் தாவல்களைப் பயன்படுத்தவும்.

குறிப்பு: நீங்கள் ஒற்றைத் தாவல் லே-அவுட்டைப் பயன்படுத்தினால், மெனுக்களும் பிற ஐட்டங்களும் இந்த வழிகாட்டியில் விவரிக்கப்பட்டதிலிருந்து வேறுவிதமாகக் காட்டப்படலாம். Safari லே-அவுட்டை மாற்றுதல் கட்டுரையைப் பார்க்கவும்.

புதிய தாவலில் இணைப்பைத் திறக்கும் விதம்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள Safari செயலிக்குச் செல்லவும்.

  2. இணைப்பைத் தொட்டு பிடித்து, “புதிய தாவலில் திற" என்பதைத் தட்டவும்.

தனிப்பட்ட தாவலில் புதிய இணைப்புகளைத் திறக்கும்போது தற்போதைய இணையப் பக்கத்தில் இருக்க, அமைப்புகள்  > செயலிகள் > Safari > இணைப்புகளைத் திற என்பதற்குச் சென்று “பின்னணியில்” என்பதைத் தட்டவும்.

தாவலில் இதுவரை பார்த்தவற்றைக் காட்டுதல்

இந்தத் தாவலில் நீங்கள் முன்பு பார்வையிட்ட இணையப் பக்கங்களைக் காணலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள Safari செயலிக்குச் செல்லவும்.

  2. “பின்செல்” பட்டன் அல்லது “முன்னனுப்பு” பட்டன்-ஐத் தொட்டு பிடிக்கவும்.

தாவல்களை மூடுதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள Safari செயலிக்குச் செல்லவும்.

  2. “தாவல்கள்” பட்டன்-ஐத் தட்டி ஒரு தாவலின் மேல் வலது மூலையில் உள்ள “மூடுக” பட்டன்-ஐத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: இந்த தாவல் குழுவில் உள்ள அனைத்துத் தாவல்களையும் ஒரே நேரத்தில் மூட “முடிந்தது” என்பதைத் தொட்டுப்பிடித்து, “அனைத்துத் தாவல்களையும் மூடு” என்பதைத் தட்டவும்.

சமீபத்தில் மூடப்பட்ட தாவலைத் திறக்கும் விதம்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள Safari செயலிக்குச் செல்லவும்.

  2. “தாவல்கள்” பட்டன்-ஐத் தட்டி “புதிய தாவல்” பட்டன்-ஐத் தட்டிப் பிடித்து சமீபத்தில் மூடப்பட்ட தாவல்களின் பட்டியலில் இருந்து தேர்வுசெய்யவும்.

திறந்திருக்கும் தாவல்களின் முன்னோட்டங்கள் திரையில் காட்டப்படும். திரையின் கீழ் இடதுபுறத்தில், “புதிய தாவல்” பட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, அதில் சமீபத்தில் மூடப்பட்ட தாவல்களின் பட்டியல் காட்டப்பட்டுள்ளது.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.