இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் Apple Intelligence மூலம் பட மந்திரக்கோலைப் பயன்படுத்துதல்

குறிப்புகள் செயலியில் Apple Intelligence* மூலம் பட மந்திரக்கோலைப் பயன்படுத்தி, நீங்கள் உருவாக்கும் தோராயமான ஸ்கெட்ச்களின் அடிப்படையில் படங்களை உருவாக்கலாம். காலி இடத்தைத் தேர்ந்தெடுத்து அதைச் சுற்றியிருக்கும் சொற்கள், படங்களின் அடிப்படையிலும் படத்தை உருவாக்கலாம்.

குறிப்பு: Apple Intelligence அம்சம் அனைத்து iPhone மாடல்களிலும் கிடைப்பதில்லை. அத்துடன் சில மொழிகள் மற்றும் வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை. ** கிடைக்கக்கூடிய மிகச் சமீபத்திய அம்சங்களை அணுக வேண்டுமெனில், நீங்கள் iOSஇன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துவதையும் Apple Intelligence ஆன் செய்யப்பட்டிருப்பதையும் உறுதிசெய்யவும்.

தோராயமான ஸ்கெட்ச்சில் இருந்து படத்தை உருவாக்குதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. ஏற்கனவே உள்ள குறிப்பைத் திறக்கவும் அல்லது புதிய குறிப்பைத் தொடங்க “புதிய குறிப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. “கையெழுத்துக் கருவிகள்” பட்டன்-ஐத் தட்டி, உங்கள் விரலைப் பயன்படுத்தி ஸ்கெட்ச்சை உருவாக்கி, பட மந்திரக்கோலைத் தட்டவும்.

  4. உங்கள் ஸ்கெட்ச்சை வட்டமிட்டு, விவரிப்பை உள்ளிட்டு, “அனுப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

  5. உருவாக்கப்படும் படங்களை ஸ்வைப் செய்து அதில் உங்களுக்குப் பிடித்ததைக் கண்டறியவும்.

  6. அனிமேஷன், விளக்கப்படம், ஸ்கெட்ச் போன்ற வெவ்வேறு ஸ்டைல்களைத் தேர்வுசெய்ய “சேர்” பட்டன்-ஐத் தட்டவும்.

உங்கள் படத்தைச் செம்மைப்படுத்த, விவரிப்பைத் தட்டி, அதைத் திருத்தவும். அதைச் சேமிக்க, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

சுற்றியுள்ள உள்ளடக்கத்திலிருந்து ஒரு படத்தை உருவாக்குதல்

சுற்றியுள்ள சொற்கள் மற்றும் படங்களின் அடிப்படையில் படங்களை Apple Intelligence உருவாக்க முடியும்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. குறிப்பைத் திறந்து, “கையெழுத்துக் கருவிகள்” பட்டன்-ஐத் தட்டி, பட மந்திரக்கோலைத் தட்டவும்.

  3. நீங்கள் வரைய விரும்பும் உள்ளடக்கத்திற்கு அருகிலுள்ள பகுதியைச் சுற்றி வட்டமிடவும்.

ஹைலைட் செய்த உரையில் இருந்தும் நீங்கள் படத்தை உருவாக்கலாம். பட மந்திரக்கோலைத் தட்டி, ஓர் உரைத் தொகுதியைத் தேர்ந்தெடுத்து, “ஃபார்வேர்டு செய்” பட்டன்-ஐத் தட்டி, “படத்தை உருவாக்கு” என்பதைத் தேர்வுசெய்யவும்..

ஏற்கனவே உள்ள படத்தை மீண்டும் உருவாக்குதல்

நீங்கள் Image Playground மூலம் ஒரு படத்தை உருவாக்கும்போது, அதை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட அனைத்து கூறுகளும் (ஸ்கெட்ச்கள், விவரிப்புகள், எழுத்துகள், நபர்கள்) சேமிக்கப்படும். ஏற்கனவே உருவாக்கிய படத்தில் உள்ள கூறுகளை நீங்கள் மாற்றலாம், சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.

  1. உருவாக்கிய படத்தைத் தட்டவும்.

  2. “மீண்டும் உருவாக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

    படத்தை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட கூறுகள் காட்டப்படும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • புதிய கூறைச் சேர்த்தல்: விவரிப்பை உள்ளிட்டு, “அனுப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

    • ஒரு கூறை மாற்றியமைத்தல்: விவரிப்பைத் தட்டி, அதிலுள்ள உரையைத் திருத்தி, “அனுப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

    • ஒரு கூறை அகற்றுதல்: “மைனஸ்” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. நிறைவுசெய்த பிறகு, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

*Apple Intelligence ஜெனரேட்டிவ் மாடல்களைப் பயன்படுத்துவதால் அது வழங்கும் தகவல்கள் மாறுபடலாம். முக்கியமான தகவல்களின் துல்லியத்தன்மையைச் சரிபார்க்கவும்.
**Siri மற்றும் சாதனத்தின் மொழி எளிமைப்படுத்தப்பட்ட சீனம், ஆங்கிலம் (ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா, அயர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, UK அல்லது U. S.), ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானீஸ், கொரியன், போர்ச்சுகீஸ் (பிரேசில்), ஸ்பானிஷ் போன்ற மொழிகளில் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து iPhone 16 மாடல்களிலும், iPhone 15 Pro, iPhone 15 Pro Max ஆகியவற்றிலும் Apple Intelligence பீட்டா பதிப்பில் கிடைக்கிறது. சில அம்சங்கள் அனைத்து வட்டாரங்கள் அல்லது மொழிகளில் கிடைக்காமல் போகக்கூடும். மேலும் தகவல்களுக்கு, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.