இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள மேப்ஸில், பார்க் செய்த காருக்குச் செல்வதற்கான வழிகளைப் பெறுதல்

iPhoneஐ உங்கள் காரின் CarPlay அல்லது Bluetooth® சிஸ்டத்தில் இருந்து துண்டித்துவிட்டு வாகனத்தில் இருந்து வெளியேறியதும், கார் பார்க் செய்யப்பட்டுள்ளதைக் குறிக்கும் ஒரு மார்க்கர் செயலியில் காட்டப்படும், அதன் மூலம் காருக்குச் செல்வதற்கான வழியை நீங்கள் எளிதில் கண்டறியலாம்.

பார்க் செய்த காரைக் கண்டறிதல்

  1. உங்கள் iPhoneஇல் மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. Siri பரிந்துரைகளுக்குக் கீழே “பார்க் செய்த கார்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

பார்க் செய்த உங்கள் காரை மேப்ஸில் கண்டறிய முடியவில்லை என்றால்

உங்கள் காரில் உள்ள CarPlay அல்லது Bluetooth உடன் iPhone இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்த பிறகு, பின்வரும் அமைப்புகள் இயக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ளுங்கள்:

  • அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு என்பதில் “இருப்பிடச் சேவைகள்” அம்சம் ஆன் செய்யப்பட்டிருப்பது.

  • அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > சிஸ்டம் சேவைகள் என்பதில் “முக்கியமான இருப்பிடங்கள்” அம்சம் ஆன் செய்யப்பட்டிருப்பது.

  • அமைப்புகள் > செயலிகள் > மேப்ஸ் என்பதில் “பார்க் செய்த இடத்தைக் காட்டு” அம்சம் ஆன் செய்யப்பட்டிருப்பது.

குறிப்பு: வீடு, பணியிடம் போன்ற இடங்களில் நீங்கள் வழக்கமாக பார்க் செய்யும் இடத்தில் காருக்கான மார்க்கர் காட்டப்படாது.

பார்க் செய்த காருக்கான இடத்தைக் காட்ட வேண்டாம்

  1. உங்கள் iPhoneஇல் மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. உங்கள் காரின் தற்போதைய இருப்பிடத்திற்கான “பார்க் செய்த கார்” மார்க்கரை அகற்ற, மார்க்கரைத் தொட்டு பிடித்து “காரை அகற்று” என்பதைத் தட்டவும்.

நீங்கள் பார்க் செய்த இடம் எப்போதும் காட்டப்படாமல் இருக்க, அமைப்புகள்  > செயலிகள் > மேப்ஸ் என்பதற்குச் சென்று, “பார்க் செய்த இடத்தைக் காட்டு” என்பதை ஆஃப் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.