இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneக்கான பவர் அடாப்டர்கள்

iPhoneஐ அதன் சார்ஜிங் கேபிள் (மொபைலுடன் வழங்கப்படுவது), இணக்கமான பவர் அடாப்டர் (தனித்தனியாக விற்கப்படுகிறது) ஆகியவற்றைப் பயன்படுத்தி பவர் அவுட்லெட்டில் இணைக்கலாம்.

iPhoneஐ சார்ஜ் செய்ய பின்வரும் Apple USB பவர் அடாப்டர்களைப் பயன்படுத்தலாம். நாடு அல்லது வட்டாரத்தைப் பொறுத்து அளவு மற்றும் ஸ்டைல் மாறுபடலாம்.

Apple 20W USB-C பவர் அடாப்டர்

Apple 20-வாட் USB-C பவர் அடாப்டர்.

குறிப்பு: வேகமான சார்ஜிங்கிற்கு iPhone 12, iPhone SE (3வது தலைமுறை) மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்களுக்கு Apple 20W USB பவர் அடாப்டர் போன்ற குறைந்தபட்சம் 20 வாட் பவர் அவுட்புட்டுடன் கூடிய பவர் அடாப்டர் தேவை. நீங்கள் மூன்றாம் தரப்பு பவர் அடாப்டரைப் பயன்படுத்தினால், அது இந்த பரிந்துரைக்கப்படும் விவரக்குறிப்புகளின்படி இருக்கவேண்டும்:

  • அலைவரிசை: 50 முதல் 60 Hz வரை, சிங்கிள் ஃபேஸ்

  • வழங்கப்படவேண்டிய மின்னழுத்தம்: 100 முதல் 240 VAC வரை

  • அவுட்புட் மின்னழுத்தம்/மின்சாரம்: 9 VDC/2.2 A

  • குறைந்தபட்ச பவர் அவுட்புட்: 20 W

  • அவுட்புட் போர்ட்: USB-C

Apple 18W USB-C பவர் அடாப்டர்

Apple 18-வாட் USB-C பவர் அடாப்டர்.

Apple 5W USB பவர் அடாப்டர்

Apple 5-வாட் USB பவர் அடாப்டர்.

iPhoneஐ சார்ஜ் செய்ய iPad மற்றும் Mac நோட்புக்குகளுக்கான Apple USB பவர் அடாப்டர்களையும் நீங்கள் பயன்படுத்தலாம், மேலும் நாட்டின் பொருந்தக்கூடிய விதிமுறைகளுக்கும் சர்வதேச மற்றும் வட்டாரப் பாதுகாப்புத் தரநிலைகளுக்கும் இணங்கக்கூடிய மூன்றாம் தரப்பு பவர் அடாப்டர்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.