இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் திருத்துதல்

நீங்கள் புகைப்படம் அல்லது வீடியோவை எடுத்த பிறகு, உங்கள் iPhone சாதனத்தில் அதைத் திருத்த ஃபோட்டோஸ் செயலியில் உள்ள கருவிகளைப் பயன்படுத்தவும். ஒளி மற்றும் நிறத்தை நீங்கள் சரிசெய்யலாம், ஃபில்டரைச் சேர்க்கலாம் மற்றும் பலவற்றைச் சேர்க்கலாம்.

நீங்கள் iCloud புகைப்படங்களைப் பயன்படுத்தும்போது, உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் நீங்கள் செய்யும் திருத்தங்கள் உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் சேமிக்கப்படும்.

உதவிக்குறிப்பு: திருத்து பயன்முறையின் பின்னணி நிறத்தைத் தேர்வுசெய்ய (உதாரணமாக, அதை எப்போதும் அடர் நிறமாக அமைக்க) திருத்து பயன்முறையின் பின்னணி நிறத்தை அமைத்தல்-ஐப் பார்க்கவும்.

ஒளி மற்றும் நிறத்தை சரிசெய்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. புகைப்படம் அல்லது வீடியோவைத் திறக்க அதைத் தட்டி, “திருத்து” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. நீங்கள் செய்யக்கூடிய லைட்டிங் மாற்றங்களைப் பார்க்க (உதாரணமாக, எக்ஸ்போஷர், பிரில்லியன்ஸ், ஹைலைட்கள் மற்றும் ஷாடோஸ்) புகைப்படத்தின் கீழே இடதுபக்கம் ஸ்வைப் செய்யவும்.

  4. நீங்கள் சரிசெய்ய விரும்பும் லைட்டிங் அமைப்பைத் தட்டி, துல்லியமான மாற்றங்களைச் செய்ய ஸ்லைடரை இழுக்கவும்.

    ஒவ்வொரு லைட்டிங் அமைப்புக்கும் நீங்கள் செய்யும் அட்ஜெஸ்ட்மெண்ட்டின் அளவு பட்டனைச் சுற்றியுள்ள அவுட்லைன் மூலம் குறிக்கப்படுகிறது, எனவே எந்த லைட்டிங் அமைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன அல்லது குறைக்கப்பட்டுள்ளன என்பதை ஒரே பார்வையில் பார்க்கலாம். திருத்தப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோவுக்கும் அசலுக்கும் இடையில் மாற லைட்டிங் பட்டனைத் தட்டுவதன் மூலம் நீங்கள் செய்த திருத்தங்களில் உள்ள வேறுபாட்டைக் காணலாம்.

    புகைப்படத்தின் மையத்தில் உள்ள “திருத்து” திரை. திரையின் கீழ்ப்பகுதியில், இடமிருந்து வலமாக சரிசெய், ஃபில்டர்கள், கிராப் செய் ஆகிய பட்டன்கள் உள்ளன. அட்ஜெஸ்ட் பட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் புகைப்படத்தின் பிரில்லியன்ஸைச் சரிசெய்ய ஒரு ஸ்லைடர் உள்ளது. “ரத்துசெய்” பட்டன் திரையின் மேல் இடது மூலையிலும், “முடிந்தது” பட்டன் திரையின் மேல் வலது மூலையிலும் உள்ளன.
  5. உங்கள் திருத்தங்களைச் சேமிக்க “முடிந்தது” என்பதைத் தட்டவும் அல்லது உங்கள் மாற்றங்கள் பிடிக்கவில்லை என்றால், “ரத்துசெய்” என்பதைத் தட்டி, “மாற்றங்களை நிராகரி” என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: புகைப்படம் அல்லது வீடியோவில் ஒளி மற்றும் நிறத்தை தானாக மேம்படுத்த “மேம்படுத்து” பட்டன்-ஐத் தட்டவும்.

ஒரு புகைப்படத்தின் ஃபோட்டோகிராஃபிக் ஸ்டைலைத் திருத்துதல்

இயல்புநிலை ஃபோட்டோகிராஃபிக் ஸ்டைலைத் தேர்வுசெய்த பிறகு, நீங்கள் ஸ்டைலைத் திருத்தலாம் அல்லது உங்கள் லைப்ரரியில் உள்ள புகைப்படங்களுக்குப் புதிய ஸ்டைலைப் பயன்படுத்தலாம். (iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, iPhone 16 Pro Max ஆகியவற்றில் கிடைக்கிறது.)

குறிப்பு: ஃபோட்டோஸ் செயலியில் ஃபோட்டோகிராஃபிக் ஸ்டைல்களைத் திருத்த, கேமரா படமெடுக்கும்போது “உயர் செயல்திறன்” முறையில் புகைப்படங்களை எடுக்க வேண்டும். உயர் செயல்திறன் முறையை ஆன் செய்ய, அமைப்புகள் > கேமரா > ஃபார்மெட்கள் என்பதற்குச் சென்று, "உயர் செயல்திறன்" என்பதைத் தட்டவும்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. ஃபோட்டோகிராஃபிக் ஸ்டைலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் திறந்து, “திருத்து” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. திரையின் கீழ்ப்புறத்தில் “ஸ்டைல்கள்” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்து, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • புதிய ஸ்டைலைத் தேர்வுசெய்தல்: படத்திற்குக் கீழே காட்டப்படும் ஸ்டைல் விருப்பங்களில் இடது அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்து தேர்வுசெய்யவும்.

    • டோனையும் நிறத்தையும் சரிசெய்ய: ஸ்டைல் தேர்வுக் கருவி-ஐத் தட்டி, டோனையும் நிறத்தையும் ஒரே நேரத்தில் சரிசெய்ய உங்கள் விரலால் இழுக்கவும். ஒளியளவைச் சரிசெய்ய உங்கள் விரலால் கீழே உள்ள ஸ்லைடரில் இழுக்கவும். சரிசெய்து முடித்த பிறகு, படத்தைத் தட்டவும்.

      குறிப்பு: நீங்கள் மாற்றங்களைச் செய்யும்போது, டோன், நிறம் மற்றும் ஒளியளவுக்கான மதிப்புகள் திரையின் மேல்பகுதியில் காட்டப்படும். இந்த மதிப்புகளை மீட்டமைக்க வட்டவடிவ அம்புக்குறியைத் தட்டவும்.

  4. “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

ஃபில்டர் எஃபெக்ட்களைப் பயன்படுத்துதல்

iPhone 16e, iPhone 15 மாடல்கள் அல்லது அதற்கு முந்தைய மாடல்களில், ஃபில்டர் எஃபெக்ட்களைப் பயன்படுத்தி புகைப்படத்தின் நிறச்சாயலை மாற்றலாம்.

குறிப்பு: iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, iPhone 16 Pro Max ஆகியவற்றில், ஃபில்டர்களுக்குப் பதிலாக சமீபத்திய ஜெனரேஷன் ஃபோட்டோகிராஃபிக் ஸ்டைல்களைப் பயன்படுத்தி உங்கள் புகைப்படங்களுக்குத் பிரத்தியேகமான தோற்றத்தை வழங்கலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. புகைப்படம் அல்லது வீடியோவைத் திறந்து, “திருத்து” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. விவிட் அல்லது டிராமாடிக் போன்ற ஃபில்டர் எஃபெக்ட்களைப் பயன்படுத்த “ஃபில்டர்கள்” பட்டன்-ஐத் தட்டவும்.

    நீங்கள் புகைப்படம் எடுத்தபோது பயன்படுத்தப்பட்ட ஃபில்டரை அகற்ற, “அசல்” என்பதைத் தட்டவும்.

    புகைப்படத்தின் மையத்தில் உள்ள “திருத்து” திரை. திரையின் கீழ்ப்பகுதியில், இடமிருந்து வலமாக சரிசெய், ஃபில்டர்கள், கிராப் செய் ஆகிய பட்டன்கள் உள்ளன. ஃபில்டர்கள் பட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டு ஃபில்டரின் தீவிரத்தை சரிசெய்ய ஒரு ஸ்லைடர் உள்ளது.
  4. பில்டரைத் தட்டி, எஃபெக்ட்டைச் சரிசெய்ய ஸ்லைடரை இழுக்கவும்.

    திருத்தப்பட்ட புகைப்படத்தை அசல் புகைப்படத்துடன் ஒப்பிட, புகைப்படத்தைத் தட்டவும்.

  5. உங்கள் திருத்தங்களைச் சேமிக்க “முடிந்தது” என்பதைத் தட்டவும் அல்லது உங்கள் மாற்றங்கள் பிடிக்கவில்லை என்றால், “ரத்துசெய்” என்பதைத் தட்டி, “மாற்றங்களை நிராகரி” என்பதைத் தட்டவும்.

பல புகைப்படங்களில் திருத்தங்களை நகலெடுத்து ஒட்டுதல்

நீங்கள் செய்த திருத்தங்களை ஒரு புகைப்படத்தில் (அல்லது வீடியோவில்) நகலெடுத்து ஒரே நேரத்தில் மற்றொரு புகைப்படத்தில் அல்லது புகைப்பட தொகுப்பில் அல்லது புகைப்படங்களில் ஒட்டலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் நகலெடுக்க விரும்பும் திருத்தங்களைக் கொண்ட புகைப்படம் அல்லது வீடியோவைத் திறக்கவும்.

  3. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “திருத்தங்களை நகலெடு” என்பதைத் தட்டவும்.

  4. நீங்கள் நகலெடுக்க விரும்பாத திருத்தங்களைச் சரிபார்த்து அவற்றை ஆஃப் செய்த பிறகு “நகலெடு” என்பதைத் தட்டவும்.

  5. உங்கள் லைப்ரரிக்குத் திரும்ப, “மூடுக” பட்டன்-ஐத் தட்டவும்.

  6. “தேர்ந்தெடு” என்பதைத் தட்டி, நீங்கள் திருத்தங்களை ஒட்ட விரும்பும் புகைப்படங்களின் சிறுபடத்தைத் தட்டவும் அல்லது ஒரு புகைப்படம் அல்லது வீடியோவைத் திறக்கவும்.

  7. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “திருத்தங்களை ஒட்டு” என்பதைத் தட்டவும்.

குறிப்பு: ஒரு சிறந்த பொருத்தத்தை உருவாக்கவும், புகைப்படங்கள் இன்னும் ஒத்ததாக இருக்கவும், திருத்தப்பட்ட புகைப்படங்களின் வொயிட் பேலன்ஸையும் எக்ஸ்போஷரையும் ஃபோட்டோஸ் செயலி தானாகவேச் சரிசெய்யும்.

புகைப்படத்தில் ஸ்டிக்கர்கள், எழுத்துகள் மற்றும் பலவற்றைச் சேர்த்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. புகைப்படத்தைத் திறக்க அதைத் தட்டவும்.

  3. “திருத்து” பட்டன்-ஐத் தட்டிய பிறகு “மார்க்-அப்” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. ஸ்டிக்கர்கள், காட்சித் தலைப்புகள், எழுத்துகள், வடிவங்கள் அல்லது உங்கள் கையொப்பத்தை கூட சேர்க்க “குறிப்புகளைச் சேர்” பட்டன்-ஐத் தட்டவும்.

  5. உங்கள் திருத்தங்களைச் சேமிக்க “முடிந்தது” என்பதைத் தட்டவும் அல்லது நீங்கள் செய்த மாற்றங்கள் பிடிக்கவில்லை என்றால், “ரத்துசெய்” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.