இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் Freeform போர்டில் வரைபடங்களைச் சேர்த்தல்

நீங்கள் Freeform போர்டில் வரைபடங்களைச் சேர்க்கலாம்.

வரைபடத்தை உருவாக்குதல்

Freeform செயலியில் கனெக்டர்கள் மற்றும் வடிவத் தேர்ந்தெடுப்பானைப் பயன்படுத்தி ஃப்ளோசார்ட் போன்ற இணைக்கப்பட்ட வரைபடத்தை நீங்கள் எளிதாக உருவாக்கலாம்.

  1. உங்கள் iPhoneஇல் Freeform செயலிக்குச் செல்லவும்.

  2. ஒரு போர்டைத் திறக்கவும் அல்லது புதிதாகத் தொடங்க, “புதிய போர்டு” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. “விருப்பங்களைக் காட்டு” பட்டன்-ஐத் தட்டி, “கனெக்டர்களைக் காட்டு” என்பதைத் தட்டவும். (“விருப்பங்களைக் காட்டு” பட்டன் காட்டப்படவில்லை என்றால், “மேலும்” பட்டன்-ஐத் தட்டி “விருப்பங்களைக் காட்டு” என்பதைத் தட்டவும், பிறகு “கனெக்டர்களைக் காட்டு” என்பதைத் தட்டவும்.)

    Freeform போர்டில் உள்ள வரைபடத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவத்தில் கனெக்டர்கள் காட்டப்பட்டுள்ளன. திரையின் கீழே வடிவமைப்புக் கருவிகள் காட்டப்பட்டுள்ளன.
  4. “வடிவத்தைச் சேர்” பட்டன், “ஸ்டிக்கி நோட்ஸைச் சேர்” பட்டன், “உரைப் பெட்டியைச் சேர்” பட்டன் அல்லது “மீடியா” பட்டன்-ஐத் தட்டி ஓர் ஐட்டத்தைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் வரைபடத்தைத் தொடங்கவும்.

  5. உங்கள் வரைபடத்தின் அடுத்த பகுதி இருக்க வேண்டிய இடம் வரை கனெக்டர் அம்புக்குறியை இழுக்கவும். அம்புக்குறியை இழுப்பதை நிறுத்தினால், வடிவங்களுக்கான சிறு மெனு திறக்கப்படும். நீங்கள் சேர்க்க விரும்பும் அடுத்த வடிவத்தைத் தட்டித் தேர்ந்தெடுக்கவும்.

    (மற்ற வடிவங்களைப் பார்க்க “மேலும்” பட்டன்-ஐத் தட்டவும்.)

    புதிய வடிவம் சேர்க்கப்பட்டுள்ள வரைபடம் காட்டப்பட்டுள்ளது.

ஒரு வரியையோ பல ஐட்டங்களையோ தேர்ந்தெடுத்தால் கனெக்டர் அம்புக்குறிகள் காட்டப்படாது.

உதவிக்குறிப்பு: கனெக்டர்களின் மூலம் சீரான இடைவெளியுடன் ஒழுங்கமைக்கப்பட்ட வடிவங்களை நீங்கள் விரைவாகச் சேர்க்கலாம். ஒரு வடிவத்தைத் தட்டித் தேர்ந்தெடுத்து, ஒரு கனெக்டரின் அம்புக்குறியைத் தொட்டுப் பிடித்திருக்கவும். நீங்கள் பிடித்திருக்கும்போது, வடிவம் மற்றும் கோட்டின் முன்னோட்டம் காட்டப்படும். பிடித்திருப்பதை நிறுத்தினால், போர்டில் வடிவமும் கோடும் சேர்க்கப்படும்.

ஒரு கோட்டில் இரண்டு ஐட்டங்களை இணைத்தல்

Freeform போர்டில் இரண்டு ஐட்டங்களைச் சேர்த்த பிறகு, அவற்றுக்கிடையே ஒரு கோட்டைச் சேர்க்கலாம்.

  1. போர்டில் இரண்டு ஐட்டங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “இணைப்புக் கோட்டைச் சேர்” என்பதைத் தட்டவும்.

    • “வடிவத்தைச் சேர்” பட்டன்-ஐத் தட்டி, “இணைப்புக் கோட்டை அமை” பட்டன்-ஐத் தட்டவும்.

இணைப்புப் புள்ளிகளை மாற்றுதல்

Freeform போர்டில் உள்ள வரைபடத்தில் இணைப்புக் கோட்டைச் சேர்த்த பிறகு, அது இணைக்கப்பட வேண்டிய விதத்தை நீங்கள் மாற்றலாம்.

  1. இணைப்புக் கோட்டைத் தட்டித் தேர்ந்தெடுத்து, அதன் இறுதிப் புள்ளிகளில் ஒன்றை (நீல நிறப் புள்ளிகள்) இழுக்கவும்.

  2. போர்டில் உள்ள மற்றொரு ஐட்டத்துடன் புதிய இணைப்புப் புள்ளியில் இறுதிப் புள்ளியை இணைக்கவும்.

    ஓர் ஐட்டத்துடனோ (சில ஆப்ஜெக்ட் வகைகளுக்கு) அதற்கு அருகிலோ கோட்டை நீங்கள் இணைக்கலாம். இணைப்பிற்கான சாத்தியம் இருந்தால், நிரப்பப்பட்ட வட்டம் ஒன்று காட்டப்படும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.