இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

அடிப்படை விஷயங்களை அமைத்தல்

உங்கள் iPhoneஐ முதலில் ஆன் செய்யும்போது அதைப் பயன்படுத்துவதற்கு உதவும் வகையிலான எளிதான அமைவுச் செயல்முறையை அது கொண்டுள்ளது. நீங்கள் புதிதாகப் பயன்படுத்தத் தொடங்குகிறீர்கள் அல்லது அடிப்படை விஷயங்களை அமைத்திருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள்.

உங்கள் iPhoneஐ மற்றொரு iPhone அல்லது iPadக்கு அருகில் கொண்டு வருவதன் மூலமோ அல்லது மற்றொரு சாதனம் இல்லாமல் அமைப்பதன் மூலமோ உங்கள் iPhoneஐ அமைப்பதற்கான விருப்பங்களைக் கொண்ட “விரைவு தொடக்கத்” திரை.

செயலிகளையும் தகவல்களையும் உங்கள் புதிய iPhoneக்கு இடமாற்றுதல்

நீங்கள் முதலில் iPhoneஐ ஆன் செய்து, அமைவுச் செயல்முறையைத் தொடங்கும்போது உங்களின் முந்தைய iPhoneஇல் இருந்து பல செயலிகள், அமைப்புகள் மற்றும் உள்ளடக்கத்தை வயர்லெஸ் முறையில் உங்களின் புதிய iPhoneக்கு நேரடியாக மாற்றலாம். இரண்டு சாதனங்களையும் அருகருகே கொண்டு வந்து திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும்.

அமைப்புகளில் உள்ள Wi-Fi விருப்பங்கள் திரை. Wi-Fi ஆன் செய்யப்பட்டு நெட்வொர்க் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மொபைல் சேவையை அமைத்தல் மற்றும் Wi-Fi உடன் இணைத்தல்

உங்கள் மாடலைப் பொறுத்து, மொபைல் நெட்வொர்க்குடன் இணைப்பதற்கு உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் eSIMஐப் பயன்படுத்தவும் அல்லது SIM கார்டைச் செருகவும். உங்கள் iPhone, மொபைல் சேவைத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க, அமைப்புகள்  > மொபைல் சேவை என்பதற்குச் செல்லவும்.

உங்கள் iPhoneஐ உங்கள் வீட்டில் உள்ள Wi-Fi நெட்வொர்க்குடன் இணைக்க, அமைப்புகள்  > Wi-Fi என்பதற்குச் சென்று, Wi-Fiஐ ஆன் செய்த பிறகு உங்கள் நெட்வொர்க்கைத் தேர்வுசெய்யவும். நீங்கள் வீட்டில் இருக்கும்போதெல்லாம் iPhone தானாகவே உங்கள் Wi-Fi நெட்வொர்க்குடன் இணைக்கப்படும்.

Apple கணக்கு உள்நுழைவுத் திரை.

உங்கள் Apple கணக்கில் உள்நுழைதல்

App Store, iTunes Store, Apple Books, Apple Music, FaceTime, iCloud, iMessage போன்ற Apple சேவைகளை அணுக உங்கள் Apple கணக்கைப் பயன்படுத்தவும்.

உங்கள் Apple கணக்கில் உள்நுழைய, அமைப்புகள்  > Apple கணக்கு என்பதற்குச் செல்லவும். உங்களிடம் iPad இருந்தால் (iPadOS 17 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்ட) அல்லது மற்றொரு iPhone (iOS 17 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்ட) இருந்தால், உங்களின் இன்னொரு சாதனத்திற்கு அருகில் உங்கள் iPhoneஐக் கொண்டு வரவும். இல்லையெனில் நீங்களாகவே உள்நுழையலாம். நீங்கள் உள்நுழைந்திருப்பதைச் சரிபார்க்க, அமைப்புகள்  > [உங்கள் பெயர்] என்பதற்குச் செல்லவும்; அங்கு உங்கள் பெயருக்குக் கீழே உங்கள் Apple கணக்கு காட்டப்படும்.

Face ID அங்கீகார அமைவுத் திரை. திரையில் வட்டத்திற்குள் முகம் காட்டப்படும். முகத்திற்குக் கீழே உள்ள வார்த்தை, வட்டத்தை நிறைவுசெய்ய பயனரின் தலையை மெதுவாக நகர்த்துமாறு அறிவுறுத்துகிறது.

Face ID அல்லது Touch IDஐ அமைத்தல்

உங்கள் iPhoneஐ அன்லாக் செய்வதற்கும், பல்வேறு செயலிகளில் உள்நுழைவதற்கும், வாங்குதல்களை மேற்கொள்வதற்கும், Face ID (முகமறிதல்) அல்லது Touch IDஐ (உங்கள் கைரேகை) பயன்படுத்தலாம். உங்கள் பாதுகாப்பிற்காக, Face ID மற்றும் Touch ID தரவு உங்கள் சாதனத்தில் மட்டுமே இருக்கும், மேலும் வேறு எங்கும் அது சேமிக்கப்படாது.

உங்கள் iPhone மாடலைப் பொறுத்து, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • Face IDஐ அமைத்தல்: அமைப்புகள்  > Face ID & பாஸ்கோடு என்பதற்குச் சென்று, “Face IDஐ அமை” என்பதைத் தட்டி, திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

  • Touch IDஐ அமைத்தல்: அமைப்புகள்  > Touch ID & பாஸ்கோடு என்பதற்குச் சென்று, “கைரேகையைச் சேர்” என்பதைத் தட்டி, திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

வீட்டில் உள்ள இரண்டு சாதனங்களைக் காட்டும் “இடம் அறி” செயலியின் திரை.

“எனது iPhoneஐக் கண்டறி” அம்சத்தை ஆன் செய்தல்

உங்கள் iPhone தொலைந்துவிட்டாலோ திருடப்பட்டாலோ அதைக் கண்டறியலாம்.

அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > “இடம் அறி” என்பதற்குச் சென்று, “எனது iPhoneஐக் கண்டறி” என்பதைத் தட்டி, “எனது iPhoneஐக் கண்டறி” அம்சத்தை ஆன் செய்யவும். “இடம் அறி” செயலியில் உங்கள் சாதனங்களின் இருப்பிடத்தைப் பார்க்கலாம். உங்கள் iPhone தொலைந்துவிட்டிருந்து உங்களால் “இடம் அறி” செயலியை அணுக முடியவில்லை என்றால், iCloud.com தளத்தில் “இடம் அறி” செயலியைப் பயன்படுத்தி உங்கள் சாதனத்தைக் கண்டறியலாம்.

iCloud சேமிப்பக மீட்டரையும் செயலிகள் மற்றும் அம்சங்களின் பட்டியலையும் காட்டும் iCloud அமைப்புகளின் திரை. iCloud உடன் பயன்படுத்தக்கூடிய ஃபோட்டோஸ், iCloud Drive, iCloud Mail ஆகியவை அந்தப் பட்டியலில் அடங்கும்.

உங்கள் தரவை iCloudஇல் சேமித்தல்

iCloud உங்கள் முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உங்கள் சாதனங்கள் அனைத்திலும் ஒத்திசைக்கவும் உதவுகிறது. உங்கள் iPhoneஐ மாற்றினால் அல்லது அது தொலைந்துவிட்டால் அல்லது அது சேதமடைந்தால் அல்லது திருடப்பட்டால், உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பலவற்றை iCloudஇல் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.

iCloudஇல் நீங்கள் பயன்படுத்த விரும்பும் அம்சங்களை ஆன் செய்ய, அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > iCloud என்பதற்குச் செல்லவும்.

மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

அனைத்து அம்சங்களும் எல்லா iPhone மாடல்களுக்கும் கிடைக்காது.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.