iPhone சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலியில் உங்கள் ஓய்வு நேரத்தின் கால வரம்பு மற்றும் உறக்க இலக்கை மாற்றுதல்

உங்கள் ஓய்வு நேரத்தின் கால அளவு, எத்தனை மணிநேரங்கள் உறங்க விரும்புகிறீர்கள் போன்ற மேலும் பல உறக்க விருப்பங்களை நீங்கள் மாற்றலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. கீழே வலதுபக்கம் உள்ள “உலாவுக” என்பதைத் தட்டி, “உறக்கம்” என்பதைத் தட்டவும்.

  3. “உங்கள் அட்டவணை” என்பதற்குக் கீழே ஸ்க்ரால் செய்து, “முழு அட்டவணை & விருப்பங்கள்” என்பதைத் தட்டவும்.

  4. கூடுதல் விவரங்கள் என்பதற்குக் கீழே ஸ்க்ரால் செய்து, உங்கள் மாற்றங்களைச் செய்யவும்:

    • ஓய்வு நேரத்தின் காலவரம்பு: “ஓய்வு நேரம்” என்பதைத் தட்டி, உங்கள் திட்டமிடப்பட்ட உறக்க நேரத்துக்கு முன்பு எத்தனை நிமிடங்கள் அல்லது மணிநேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஓய்வு நேரக் காலவரம்பின் தொடக்கத்தில் உங்கள் ஸ்லீப் ஃபோகஸ் ஆன் செய்யப்படும்.

    • உறக்க இலக்கு: “உறக்க இலக்கு” என்பதைத் தட்டி, நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் அமைத்துள்ள புதிய அட்டவணைகள் அனைத்தும் உங்கள் புதிய இலக்கைப் பிரதிபலிக்கும்.

    • உறக்க அறிவிப்புகள்: “உறக்க நினைவூட்டல்கள்” அல்லது “உறக்க முடிவுகள்” என்பதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

      குறிப்பு: “உறக்க முடிவுகள்” அறிவிப்புகளுக்கு Apple Watch அல்லது பிற உறக்கக் கண்காணிப்பு செயலிகள் மற்றும் வன்பொருள் தரவுகள் தேவை.

    முழு அட்டவணைத் திரையின் கூடுதல் விவரங்கள் பகுதி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.