இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் குடும்பப் பகிர்வை அமைத்தல்

குடும்பப் பகிர்வு அம்சத்தின் மூலம் Apple சேவைகள், தகுதிபெறும் வாங்குதல்கள், iCloud சேமிப்பகத் திட்டம் மற்றும் பலவற்றுக்கான அணுகலை நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் (அதிகபட்சம் ஐந்து பேர்) பகிர்ந்துகொள்ள முடியும். தொலைந்துபோன சாதனங்களைக் கண்டறியவும் நீங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள முடியும்.

குடும்பத்தில் உள்ள ஒரு பெரியவர் (ஒருங்கிணைப்பாளர்) மற்ற குடும்ப உறுப்பினர்களைப் பங்கேற்க அழைப்பார். குடும்ப உறுப்பினர்கள் சேரும்போது, அனைவரின் சாதனங்களிலும் குடும்பப் பகிர்வு தானாகவே அமைக்கப்படும். எந்தெந்த சேவைகளையும் அம்சங்களையும் பயன்படுத்த விரும்புகிறார்கள் மற்றும் பகிர விரும்புகிறார்கள் என்பதை இந்தக் குழு தேர்வுசெய்யும்.

குடும்பப் பகிர்வு தகுதிபெறும் சாதனங்களில் கிடைக்கிறது. iCloudக்கான சிஸ்டம் தேவைகள் குறித்த Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

அமைப்புகளில் குடும்பப் பகிர்வு திரை உள்ளது. ஐந்து குடும்ப உறுப்பினர்கள் பட்டியலிடப்பட்டு 4 சந்தாக்கள் குடும்பத்துடன் பகிரப்படுகின்றன.

குடும்பப் பகிர்வு குழுவை உருவாக்குதல்

நீங்கள் ஒரு சாதனத்தில் மட்டுமே குடும்பப் பகிர்வை அமைக்க வேண்டும். பிறகு அதே Apple கணக்கில் உள்நுழைந்துள்ள உங்கள் அனைத்து சாதனங்களிலும் இது கிடைக்கும்.

  1. அமைப்புகள்  > [உங்கள் பெயர்] என்பதற்குச் சென்று “குடும்பம்” என்பதைத் தட்டவும். உங்கள் குடும்பப் பகிர்வுக் குழுவை அமைக்க, திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

  2. பரிந்துரைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு (பட்டியலில் இருந்தால்) அடுத்துள்ள “அழை” என்பதைத் தட்டவும் அல்லது “பிறரை அழை” என்பதைத் தட்டி பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    குடும்ப உறுப்பினர்களையும் பிறகு சேர்க்கலாம். iPhoneஇல் குடும்பப் பகிர்வு குழுவில் உறுப்பினரைச் சேர்த்தல் பிரிவைப் பார்க்கவும்.

  3. உங்கள் குடும்பப் பகிர்வுக் குழுவிற்கு நீங்கள் அமைக்க விரும்பும் அம்சத்தைத் தட்டி (எடுத்துக்காட்டாக, சந்தாக்கள்) திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

    ஒரு பிள்ளைக்குப் பெற்றோரின் கட்டுப்பாடுகள் அல்லது Apple Cash அமைக்க, அவர்களின் பெயரைத் தட்டவும், அம்சத்தைத் தட்டவும், பிறகு திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

    உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் பகிர்வதைப் பார்க்கலாம், எப்போது வேண்டுமானாலும் பகிர்வு அமைப்புகளைச் சரிசெய்யலாம்.

உங்கள் சாதனங்கள் அனைத்திலும் குடும்பப் பகிர்வுக் குழுவை அமைப்பது அல்லது அதில் சேருவது எப்படி என்பதை அறிய, குடும்பப் பகிர்வுக் குழுவை அமைத்தல் குறித்த Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

குடும்பப் பகிர்வு மூலம் நீங்கள் என்ன செய்ய முடியும்?

நீங்கள் பின்வருவனவற்றை அமைக்கலாம் அல்லது உங்கள் குடும்பப் பகிர்வுக் குழுவுடன் பகிரலாம்:

குடும்பப் பகிர்வு அம்சங்களுக்கான பரிந்துரைகளைப் பார்த்தல்

குடும்பப் பகிர்வில் இருந்து அதிகமான பயன்களைப் பெறுவதற்கான பரிந்துரைகளைப் பார்க்க, அமைப்புகள்  > குடும்பம் என்பதற்குச் சென்று “உங்கள் குடும்பத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டவை” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.