இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

உங்கள் iPhone மற்றும் பிற Apple சாதனங்களுக்கு இடையே நகலெடுத்து ஒட்டுதல்

உங்கள் Apple சாதனங்களில் ஒன்றிலிருந்து உள்ளடக்கத்தை நகலெடுத்து மற்றொன்றில் ஒட்டுவதற்கு யுனிவர்சல் கிளிப்போர்டு என்ற அம்சத்தைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் iPadஇல் வார்த்தையை நகலெடுத்து உங்கள் iPhoneஇல் உள்ள குறிப்பில் ஒட்டலாம் அல்லது உங்கள் iPhoneஇல் Safari இணையப் பக்கத்தில் உள்ள ஒரு படத்தை நகலெடுத்து உங்கள் Macஇல் உள்ள மின்னஞ்சல் மெசேஜில் அதை ஒட்டலாம்.

உங்கள் iPhone, iPad, Mac ஆகியவற்றில் யுனிவர்சல் கிளிப்போர்டைப் பயன்படுத்தலாம்.

தொடங்கும் முன்

பின்வருவனவற்றை உறுதிசெய்துகொள்ளவும்:

நீங்கள் VPN பயன்படுத்தினால், சில கன்டினியுட்டி அம்சங்களை அது பாதிக்கக்கூடும் என்பதால் அதன் உள்ளமைவு உள்ளூர் நெட்வொர்க்கிற்கு இடையூறு செய்யாத வகையில் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் iPhone மற்றும் பிற சாதனங்களுக்கு இடையில் நகலெடுத்து ஒட்டுதல்

யுனிவர்சல் கிளிப்போர்டு என்பது நீங்கள் பார்க்கக்கூடிய அம்சம் அல்ல. iPhoneஇல் நகலெடுத்து ஒட்டுவதைப் போன்ற அதே செயல்பாட்டையே யுனிவர்சல் கிளிப்போர்டு மூலம் மேற்கொள்வீர்கள். ஆனால் வேறுபாடு என்னவென்றால், நீங்கள் நகலெடுத்தவற்றை iPad, Mac போன்ற உங்களின் பிற Apple சாதனங்களில் ஒட்ட முடியும்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள வார்த்தை அல்லது படத்தைத் தேர்ந்தெடுத்து “நகலெடு” என்பதைத் தட்டவும்.

  2. உங்களின் மற்றொரு சாதனத்தில், ஒரு வார்த்தையையோ படத்தையோ ஒட்ட விரும்பும் இடத்தில் தட்டி (வேறொரு iPhone அல்லது iPadஇல்) அல்லது கிளிக் செய்து (Macஇல்), “ஒட்டு” என்பதை கிளிக் செய்யவும். கீபோர்டு சுருக்கவழிகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

    உங்கள் iPhone, iPad அல்லது Macஇல் எப்படி நகலெடுப்பது அல்லது ஒட்டுவது என்பது குறித்த கூடுதல் தகவல்களுக்கு, iPhone அல்லது iPadஇல் எப்படி நகலெடுத்து ஒட்டுவது? அல்லது Macஇல் எப்படி நகலெடுப்பது மற்றும் ஒட்டுவது? பிரிவைப் பார்க்கவும்.

    குறிப்பு: உள்ளடக்கத்தை நீங்கள் நகலெடுக்கும்போது, அது உங்கள் கிளிப்போர்டில் குறுகிய காலத்திற்குக் கிடைக்கும்.

iPhone அல்லது iPadஇல் எப்படி நகலெடுத்து ஒட்டுவது?

  • வார்த்தையைத் தேர்ந்தெடுத்து நகலெடுத்தல்: ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுக்க ஒரு விரலால் இருமுறை தட்டவும் அல்லது ஒரு பத்தியைத் தேர்ந்தெடுக்க ஒரு விரலால் மூன்று முறை தட்டவும். (உங்கள் தேர்வைச் சரிசெய்ய “கிராப்” புள்ளிகளையும் நகர்த்தலாம்.) பிறகு “நகலெடு” என்பதைத் தட்டவும்.

  • படத்தைத் தேர்ந்தெடுத்து நகலெடுத்தல்: ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்க தொட்டுப் பிடித்து “நகலெடு” என்பதைத் தட்டவும்.

  • வார்த்தை அல்லது படத்தை ஒட்டுதல்: வார்த்தை அல்லது படத்தை ஒட்ட விரும்பும் இடத்தில் தட்டி “ஒட்டு” என்பதைத் தட்டவும்.

நீங்கள் நகலெடுத்து ஒட்டுவதை அனுமதிக்கும் கூடுதல் சைகைகளைக் கண்டறிய, iPhoneஇல் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல், வெட்டுதல், நகலெடுத்தல் மற்றும் ஒட்டுதல் மற்றும் iPadஇல் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல், வெட்டுதல், நகலெடுத்தல் மற்றும் ஒட்டுதல் என்ற பிரிவைப் பார்க்கவும்.

Macஇல் எப்படி நகலெடுப்பது மற்றும் ஒட்டுவது?

  • வார்த்தை அல்லது படத்தைத் தேர்ந்தெடுத்தல்: பாயின்டரைப் பயன்படுத்தி, நீங்கள் நகலெடுக்க விரும்பும் வார்த்தை அல்லது படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  • வார்த்தை அல்லது படத்தை நகலெடுத்தல்: கமாண்ட்-C பட்டன்களை அழுத்தவும் அல்லது மெனு பாரில் உள்ள திருத்து > ஒட்டு என்பதைத் தேர்வுசெய்யவும்.

  • வார்த்தை அல்லது படத்தை ஒட்ட: வார்த்தை அல்லது படத்தை ஒட்ட விரும்பும் இடத்திற்கு பாயின்டரை நகர்த்தி கிளிக் செய்த பிறகு, கமாண்ட்-V பட்டன்களை அழுத்தவும் அல்லது மெனு பாரில் உள்ள திருத்து > ஒட்டு என்பதைத் தேர்வுசெய்யவும்.

நீங்கள் நகலெடுத்து ஒட்டுவதை அனுமதிக்கும் கூடுதல் சைகைகளைக் கண்டறிய, iPhoneஇல் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல், வெட்டுதல், நகலெடுத்தல் மற்றும் ஒட்டுதல் மற்றும் iPadஇல் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல், வெட்டுதல், நகலெடுத்தல் மற்றும் ஒட்டுதல் என்ற பிரிவைப் பார்க்கவும்.

யுனிவர்சல் கிளிப்போர்டு வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது?

  • இரண்டு சாதனங்களிலும் ஒரே Apple கணக்கில் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்யவும்.

  • உங்கள் iPhone மற்றும் Macஇல் Wi-Fi, Bluetooth மற்றும் Handoff ஆன் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

  • உங்கள் சாதனங்கள் ஒன்றுக்கொன்று 30 அடி (10 மீட்டர்) தூரத்திற்குள் இருக்க வேண்டும்.

  • யுனிவர்சல் கிளிப்போர்டைப் பெறுவதில் சிரமமாக இருந்தால், உங்கள் சாதனங்களை மீண்டும் தொடங்கி மீண்டும் முயலவும்.

சாதனங்களுக்கு இடையே வார்த்தை அல்லது நகலெடுக்கப்பட்ட படங்களின் சிறிய தேர்வுகளைப் பகிர்வதற்கு யுனிவர்சல் கிளிப்போர்டு சிறந்ததாகும். உங்கள் Mac மற்றும் பிற Apple சாதனங்களுக்கு இடையே பல கோப்புகளைப் பகிர, iPhoneஇல் இருந்து சேமிப்பகச் சாதனம், சர்வர் அல்லது கிளவுடிற்குக் கோப்புகளை மாற்றுதல் பிரிவைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.