இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

நண்பரைச் சந்திக்க, iPhoneஇல் “துல்லியமாகக் கண்டறிதல்” அம்சத்தைப் பயன்படுத்துதல்

நண்பரைச் சந்திக்க, “துல்லியமாகக் கண்டறிதல்” அம்சத்தை ஆதரிக்கும் iPhone மாடல்களில் உள்ள “இடம் அறி” செயலியைப் பயன்படுத்தலாம்.

குறிப்பு: “துல்லியமாகக் கண்டறிதல்” அம்சம் சில நாடுகளிலும் வட்டாரங்களிலும் கிடைக்காது. நீங்களும், நீங்கள் தேடும் நண்பரும், ஆதரிக்கப்படும் iPhone மாடலை வைத்திருக்க வேண்டும்.

வேறொரு iPhone மாடலைப் பயன்படுத்தி ஒருவரைக் கண்டறிய, நண்பரைக் கண்டறிதல் என்பதைப் பார்க்கவும்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழே உள்ள “நபர்கள்” என்பதைத் தட்டி, நீங்கள் சந்திக்க விரும்பும் நண்பரின் பெயரைத் தட்டவும்.

    நீங்கள் ஒருவருக்கொருவர் பின்தொடரவில்லை என்றால், உங்கள் இருப்பிடத்தைப் பகிர வேண்டியிருக்கும் அல்லது அவரின் இருப்பிடத்தைக் கேட்க வேண்டியிருக்கும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • மேப்ஸில் உங்கள் நண்பரைப் பார்க்க: நீங்கள் அருகில் இல்லையென்றால், அவரின் இருப்பிடத்திற்கு அருகில் செல்ல “வழிகள்” என்பதைத் தட்டவும்.

    • அருகிலுள்ள உங்கள் நண்பரைக் கண்டறிய: நீங்கள் ஒருவருக்கொருவர் அருகில் இருந்தால், நீங்கள் அவர்களைக் கண்டறிய முயல்கிறீர்கள் என்பதை உங்கள் நண்பருக்குத் தெரிவிக்கக் “கண்டறிக” விருப்பத்தைத் தட்டி, அவர்களின் இருப்பிடத்திற்கான வழிகளைப் பெற, திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

      நீங்கள் ஒருவருக்கொருவர் அருகில் இருக்கும்போது, அவர் எவ்வளவு தூரம் உள்ளார் என்பதைக் குறிக்கும் வகையில் ஓர் அம்புக்குறி அவர் இருப்பிடத்தின் திசையைச் சுட்டிக்காட்டும்.

      “துல்லியமாகக் கண்டறிதல்” அம்சத்தின் மூலம் கண்டறியப்பட வேண்டிய நபரின் பெயர் மேல் இடது மூலையில் காட்டப்பட்டுள்ளது. அவர் எவ்வளவு தூரத்தில் உள்ளார் என்பதைத் தோராயமாகக் குறிப்பிட்டு, ஓர் அம்புக்குறி அவரின் திசையைச் சுட்டிக்காட்டுகிறது. “துல்லியமாகக் கண்டறிதல்” அம்சத்தை மூடுவதற்கும் அந்த நபருக்கு மெசேஜ் அனுப்புவதற்கும் திரையின் கீழே பட்டன்கள் உள்ளன.

      நீங்கள் சரியான திசையில் நடந்து செல்லும்போது, திரை பச்சை நிறமாக மாறும்.

  4. நீங்கள் தேடும் நபரைக் கண்டறிந்ததும் “மூடுக” பட்டன்-ஐத் தட்டவும்.

    iPhone திரை நடுவில் பச்சை நிறத்தில் பெரிய டிக்மார்க் காட்டப்பட்டுள்ளது. சந்திப்பு வெற்றிகரமாக நடந்ததைக் குறிக்கும் வகையில், கண்டறியப்பட வேண்டிய நபரின் பெயர் மேல் இடது மூலையில் காட்டப்பட்டுள்ளது மற்றும் “இங்கே” என்ற வார்த்தை கீழ் இடது மூலையில் காட்டப்பட்டுள்ளது.

ஒரு நண்பர் உங்களைக் கண்டறிய முயல்கிறார் என்ற அறிவிப்பைப் பெற்றால், “பகிர்” என்பதைத் தட்டலாம், இதனால் உங்கள் இருப்பிடத்திற்கான வழியை அவர் எளிதாகக் கண்டறியலாம். உங்கள் இருப்பிடத்தை நீங்கள் ஏற்கெனவே அவருடன் பகிர்ந்திருந்தால், அவரின் இருப்பிடத்துடன் ஒப்பிடும்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அவர்கள் பார்ப்பார்கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் இருப்பிடப் பகிர்வை நிறுத்தலாம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.