இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone கேமரா அடிப்படைகள்

உங்கள் iPhone கேமராவைப் பயன்படுத்தி, புகைப்படங்களை எப்படி எடுப்பது என அறிந்துகொள்ளுங்கள். உங்கள் ஷாட்டை ஃப்ரேம் செய்வதற்கு புகைப்படம், வீடியோ, சினிமேட்டிக், பனோ மற்றும் போர்ட்ரெய்ட், பெரிதாக்கு அல்லது சிறிதாக்கு போன்ற கேமரா பயன்முறைகளில் இருந்து தேர்வுசெய்யுங்கள்.

கேமராவைப் பயன்படுத்துதல்

உங்கள் iPhone கேமராவைத் திறக்க, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

குறிப்பு: உங்கள் பாதுகாப்பிற்காக, கேமரா பயன்பாட்டில் இருக்கும்போது திரையின் மேல் வலது மூலையில் பச்சை நிறப் புள்ளி தோன்றும். வன்பொருள் அம்சங்களுக்கான கட்டுப்பாட்டு அணுகல் என்ற இணைப்பைப் பார்க்கவும்.

புகைப்படம் எடுத்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள கேமரா செயலியைத் திறக்கவும்.

  2. ஷட்டர் பட்டனைத் தட்டவும் அல்லது ஒலியளவு பட்டனை அழுத்தவும்.

    வியூஃபைண்டருக்குக் கீழே இடது மற்றும் வலதுபுறத்தில் பிற பயன்முறைகளுடன் புகைப்பட பயன்முறையில் உள்ள கேமரா. ஃபிளாஷ், கேமரா கட்டுப்பாடுகள், Live Photos ஆகியவற்றுக்கான பட்டன்கள் திரையின் மேல்பகுதியில் தோன்றும். “புகைப்படம் மற்றும் வீடியோ வியூவர்” பட்டன் கீழ் இடது மூலையில் உள்ளது. “படமெடு” பட்டன் கீழ் மையத்திலும், “கேமரா தேர்வி - பின்பக்க கேமரா” பட்டன் கீழ்-வலது மூலையிலும் உள்ளது.

ஆதரிக்கப்படும் மாடல்களில், கேமராவைத் திறக்க கேமரா கட்டுப்பாடு என்பதை கிளிக் செய்து புகைப்படம் எடுக்க அதை மீண்டும் கிளிக் செய்யவும்.

கேமரா பயன்முறைகளுக்கு இடையே மாறுதல்

நீங்கள் முதலில் கேமராவைத் திறக்கும்போது புகைப்பட பயன்முறை தேர்ந்தெடுக்கப்பட்டது. ஸ்டில் புகைப்படங்கள், Live Photos எடுக்க புகைப்பட பயன்முறையைப் பயன்படுத்தலாம். மேலும் ஆதரிக்கப்படும் மாடல்களில், நீங்கள் புகைப்பட பயன்முறையில் போர்ட்ரெய்ட் படங்களை எடுக்கலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள கேமரா செயலியைத் திறக்கவும்.

  2. பின்வரும் கேமரா பயன்முறைகளில் ஒன்றிற்கு மாற, கேமரா திரையில் இடது அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்:

கேமராவைத் திறக்கும்போது புகைப்பட பயன்முறையத் தவிர இயல்புநிலை பயன்முறையாக வேறொரு பயன்முறையை அமைக்க, iPhone சாதனத்தில் கேமரா அமைப்புகளைச் சேமித்தல் என்பதைப் பார்க்கவும்.

பெரிதாக்குதல் அல்லது சிறிதாக்குதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள கேமரா செயலியைத் திறக்கவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • அனைத்து மாடல்களிலும், பெரிதாக்கி அல்லது அல்லது சிறிதாக்கிப் பார்க்க, திரையை பின்ச் செய்யவும்.

    • இரட்டை மற்றும் மூன்று கேமரா சிஸ்டம்களைக் கொண்ட iPhone மாடல்களில் 0.5x, 1x, 2x, 2.5x, 3x மற்றும் 5x ஆகியவற்றுக்கிடையே மாற்றி விரைவாக பெரிதாக்கி அல்லது சிறிதாக்கி (உங்கள் மாடல்களைப் பொறுத்து) பார்க்கவும். மேலும் துல்லியமான ஜூமுக்கு, ஜூம் கட்டுப்பாடுகளைத் தொட்டுப் பிடித்து, ஸ்லைடரை வலது அல்லது இடதுபக்கம் இழுக்கவும்.

    • ஆதரிக்கப்படும் மாடல்களில், கிடைக்கக்கூடிய கேமரா அமைப்புகளைக் காட்டும் ஓவர்லே ஒன்றைத் திறக்க கேமரா கட்டுப்பாட்டை லேசாக இருமுறை அழுத்தவும். உங்கள் விரலை கேமரா கட்டுப்பாட்டில் இருந்து ஜூம் அமைப்பிற்கு ஸ்லைடு செய்து, அதைத் தேர்ந்தெடுக்க லேசாக அழுத்தவும். பெரிதாக்கி அல்லது சிறிதாக்கிப் பார்க்க விரலால் ஸ்லைடு செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.