இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

உங்கள் iPhone மற்றும் பிற சாதனங்களுக்கு இடையே கோப்புகளை மாற்றுதல்

உங்கள் iPhone மற்றும் iPad, Mac, Windows சாதனம் போன்ற பிற சாதனங்களுக்கு இடையே புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற கோப்புகளை இடமாற்றுவதற்குப் பல வழிகள் உள்ளன. AirDrop போன்ற அம்சங்களின் மூலமோ, Mail, மெசேஜஸ் போன்ற செயலிகள் மூலமோ வயர்லெஸ் முறையில் நீங்கள் கோப்புகளை இடமாற்றலாம். இல்லையெனில், கம்ப்யூட்டர் அல்லது வெளிப்புறச் சேமிப்பகச் சாதனத்துடன் உங்கள் iPhoneஐ கேபிள் மூலம் இணைத்து கோப்புகளை இடமாற்றலாம் அல்லது ஒத்திசைக்கலாம்.

உங்கள் கோப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பலவற்றை நீங்கள் iCloudஐப் பயன்படுத்தியும் சேமிக்கலாம் மற்றும் ஒரே Apple கணக்கில் உள்நுழைந்திருக்கும் உங்கள் சாதனங்கள் அனைத்திலும் அனைத்துத் தரவுகளையும் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கலாம்.

முக்கியம்: செயலியின் தனித்துவமான வடிவமைப்பில் சேமிக்கப்பட்டிருக்கும் கோப்புகள், பழைய மென்பொருள் பதிப்புகளில் சேமிக்கப்பட்டிருக்கும் கோப்புகள், பதிப்புரிமைகளால் பாதுகாக்கப்பட்டிருக்கும் கோப்புகள் போன்ற சில வகையான தரவுகளுக்கு இடமாற்றுதல், பகிர்தல், ஒத்திசைத்தல் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம்.

உங்கள் iPhoneஇல் இருந்து கோப்புகளை வயர்லெஸ் முறையில் இடமாற்றுதல்

உங்கள் iPhoneஇல் இருந்து புகைப்படம், கோப்பு அல்லது பிற ஐட்டத்தை அருகிலுள்ள Apple சாதனத்துடன் விரைவாகப் பகிர, AirDropஐப் பயன்படுத்தலாம். அருகிலுள்ள Apple சாதனங்களுக்கு ஐட்டங்களை அனுப்ப AirDropஐப் பயன்படுத்தலாம் கட்டுரையைப் பார்க்கவும்.

Mail அல்லது மெசேஜஸ் செயலியில் கோப்பை இணைப்பாக அனுப்புவதன் மூலமும் உங்கள் iPhoneஇல் இருந்து கோப்புகளை வேறு சாதனத்திற்கு நீங்கள் இடமாற்றலாம்.

iPhoneஐ கேபிளுடன் இணைப்பதன் மூலம் கோப்புகளை மாற்றுதல்

கம்ப்யூட்டர், வெளிப்புறச் சேமிப்பகச் சாதனம் அல்லது கோப்புகளை ஒரு கோப்புச் சேவையகத்திற்குக் கோப்புகளை இடமாற்ற, உங்கள் iPhoneஐ உங்கள் Mac அல்லது Windows சாதனத்துடன் கேபிள் மூலம் இணைக்கலாம். Mac அல்லது Windows சாதனத்திற்குக் கோப்புகளை இடமாற்றும்போது, உங்கள் கம்ப்யூட்டரின் மாடல் மற்றும் ஆபரேட்டிங் சிஸ்டத்தைப் பொறுத்து Finder, Apple சாதனங்கள் அல்லது iTunesஐப் பயன்படுத்தலாம்.

குறிப்பு: கோப்புப் பகிர்வை ஆதரிக்கும் iPhone செயலிகளில் இருந்து மட்டுமே கோப்புகளைப் பரிமாற்றம் செய்ய முடியும்.

iPhoneஐ மற்ற சாதனங்களுடன் ஒத்திசைத்தல்

ஆதரிக்கப்படும் உள்ளடக்கத்தை ஒத்திசைக்க iPhoneஐ உங்கள் Mac அல்லது Windows சாதனத்துடனும் இணைக்கலாம். எடுத்துக்காட்டாக, iPhoneஇல் ஒரு திரைப்படத்தைச் சேர்க்கும்போது, உங்கள் கம்ப்யூட்டரிலும் திரைப்படம் காட்டப்படும் வகையில் ஒத்திசைக்கலாம். இசை, திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் இவற்றைப் போன்ற பல உள்ளடக்கங்களை நீங்கள் ஒத்திசைக்கலாம்.

உங்கள் Mac அல்லது Windows சாதனத்துடன் கோப்புகளை ஒத்திசைக்கும்போது, உங்கள் கம்ப்யூட்டரின் மாடல் மற்றும் ஆபரேட்டிங் சிஸ்டத்தைப் பொறுத்து Finder, Apple சாதனங்கள் அல்லது iTunesஐப் பயன்படுத்தலாம்.

உங்கள் கோப்புகளைத் தானாகவே iCloud உடன் ஒத்திசைவில் வைத்திருத்தல்

உங்கள் கோப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பலவற்றை iCloudஇல் சேமிக்கலாம் என்பதால் உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் ஆதரிக்கப்படும் இணைய உலாவிகளிலும் அவற்றை அணுகலாம் ஒத்திசைக்கலாம். உங்கள் Apple கணக்கில் உள்நுழைந்துள்ள சாதனத்தில் உள்ள கோப்பில் நீங்கள் செய்யும் எந்த மாற்றமும், அதே Apple கணக்கில் உள்நுழைந்துள்ள அனைத்துச் சாதனங்களிலும் காட்டப்படும். மேலும் தகவல்களுக்கு, iCloud பயனர் வழிகாட்டியில் உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் தகவல்களைச் சமீபத்திய நிலையில் iCloud எவ்வாறு வைத்திருக்கிறது என்பதைப் பார்க்கவும்.

தொடங்குவதற்கு, iCloud பயனர் வழிகாட்டியில் உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் iCloudஐ அமைத்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

குறிப்பு: OS X 10.10 (அல்லது அதற்கு பிந்தையவை) அல்லது Windows 7 (அல்லது அதற்குப் பிந்தையவை) தேவை. நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஆதரிக்கப்படும் இணைய உலாவிகளுடன் சேர்த்து, உங்கள் iPhone, கம்ப்யூட்டர் ஆகிய இரண்டிலும் நீங்கள் ஒரே Apple கணக்கில் உள்நுழைந்திருக்க வேண்டும். iCloudக்கான சிஸ்டம் தேவைகள் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.