iPhone சாதனத்தில் Siri சுருக்கவழிகளைச் சேர்த்தல்

நீங்கள் அடிக்கடி செய்யும் செயல்களுக்கான சுருக்கவழிகளை செயலிகளால் வழங்க முடியும். Siriஐப் பயன்படுத்தி உங்கள் குரம் மூலம் சுருக்கவழிகளைத் தொடங்கலாம்.

சில செயலிகள் Siri சுருக்கவழிகளை தானாகவே அமைத்துள்ளன. நீங்களும் ஒன்றை உருவாக்கலாம்.

பரிந்துரைக்கப்பட்ட சுருக்கவழியைச் சேர்த்தல்

சுருக்கவழிக்கான பரிந்துரை ஒன்றைப் பார்க்கும்போது “Siriஇல் சேர்” என்பதைத் தட்டி, அதைச் செயல்படுத்த உங்களுக்கு விருப்பமான ஒரு சொற்றொடரைப் பதிவுசெய்வதற்கு திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

சுருக்கவழிகள் செயலியைப் பயன்படுத்தி, Siriஐப் பயன்படுத்தும் புதிய சுருக்கவழியை உருவாக்கலாம், அல்லது ஏற்கனவே உள்ள Siri சுருக்கவழிகளை நிர்வகிக்கலாம், மீண்டும் பதிவுசெய்யலாம், நீக்கலாம். சுருக்கவழிகள் பயனர் வழிகாட்டி என்பதைப் பார்க்கவும்.

சுருக்கவழியைப் பயன்படுத்துதல்

Siriஐச் செயல்படுத்திய பிறகு சுருக்கவழிக்கு உங்கள் சொற்றொடரைப் பயன்படுத்தவும். Siriஐப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

உங்கள் வழக்கங்கள், செயலிகள் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், முகப்புத் திரை, பூட்டுத் திரை மற்றும் தேடலைத் தொடங்கும்போது சுருக்கவழிகளை Siri பரிந்துரைக்கும். செயலிகளுக்கான சுருக்கவழி பரிந்துரைகளை ஆஃப் செய்ய, iPhone சாதனத்தில் உள்ள Siri அமைப்புகளை மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

இவற்றையும் பாருங்கள்iPhone சாதனத்தில் Siri பரிந்துரைகள்
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.