இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

உங்கள் iPhone பற்றிய தகவல்களைப் பெறுதல்

மொத்த சேமிப்பகத்தையும் பயன்படுத்தப்பட்ட சேமிப்பகத்தையும் செயலி வாரியாகப் பார்த்தல்

அமைப்புகள்  > பொது அமைப்புகள் > iPhone சேமிப்பகம் என்பதற்குச் செல்லவும்.

iPhone மற்றும் iPadஇல் சேமிப்பகத்தை எப்படிச் சரிபார்ப்பது?, உங்கள் iCloud சேமிப்பகத்தை நிர்வகித்தல் ஆகிய Apple உதவிக் கட்டுரைகளைப் பார்க்கவும்.

பேட்டரி பயன்பாட்டைப் பார்த்தல்

iPhone சார்ஜ் செய்யப்பட்ட பிறகு கடந்த நேரத்தையும், செயலி வாரியான பேட்டரி பயன்பாட்டையும் பார்க்க அமைப்புகள்  >பேட்டரி என்பதற்குச் செல்லவும்.

பேட்டரியின் அளவை சதவீதமாகக் காட்சிப்படுத்தலாம், குறைந்த ஆற்றல் பயன்முறையை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம், பேட்டரி ஆயுளையும் சரிபார்க்கலாம்.

iPhone பேட்டரி அளவைக் கண்காணித்தல் பிரிவைப் பார்க்கவும்.

அழைப்பு நேரம் மற்றும் மொபைல் சேவைப் பயன்பாட்டைப் பார்த்தல்

அமைப்புகள்  > மொபைல் சேவை என்பதற்குச் செல்லவும். iPhoneஇல் மொபைல் டேட்டா அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல் பிரிவைப் பார்க்கவும்.

உங்கள் IMEI எண்ணைக் கண்டறிதல்

உங்கள் iPhoneக்கான IMEI (சர்வதேச மொபைல் உபகரண அடையாளம்) எண்ணை அமைப்புகளில் பார்க்கலாம்.

  1. அமைப்புகள்  > பொது அமைப்புகள் > அறிமுகம் என்பதற்குச் செல்லவும்.

  2. உங்கள் IMEIஐக் கண்டறிய கீழ்ப்பகுதிக்கு ஸ்க்ரால் செய்யவும்.

பெயர், மாடல், iOS பதிப்பு, வரிசை எண் மற்றும் பலவற்றைப் பார்த்தல்

அமைப்புகள்  > பொது அமைப்புகள் > அறிமுகம் என்பதற்குச் செல்லவும். நீங்கள் பார்க்கக்கூடிய ஐட்டங்களில் அடங்குபவை:

  • பெயர்

  • OS மென்பொருள் பதிப்பு

  • மாடல் பெயர்

  • பாகம் மற்றும் மாடல் எண்கள். மாடலின் வலதுபுறத்தில், பாக எண் காட்டப்படும். மாடல் எண்ணைப் பார்க்க, பாக எண்ணைத் தட்டவும்.

  • வரிசை எண்

  • பாடல்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செயலிகளின் எண்ணிக்கை

  • திறன் மற்றும் கிடைக்கக்கூடிய சேமிப்பகம்

  • Wi-Fi மற்றும் Bluetooth® முகவரிகள்

  • மொபைல் நெட்வொர்க்

  • நெட்வொர்க் வழங்குநர் அமைப்புகள். நெட்வொர்க் வழங்குநருக்கு வலதுபுறத்தில், நெட்வொர்க் வழங்குநர் அமைப்புகளின் பதிப்பு எண் காட்டப்படும். நெட்வொர்க் வழங்குநர் சார்ந்த கூடுதல் தகவல்களைப் பார்க்க, பதிப்பு எண்ணைத் தட்டவும். மேலும் விவரங்களுக்கு உங்கள் நெட்வொர்க் வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.

  • GSM நெட்வொர்க்குகளுக்கான ICCID (ஒருங்கிணைந்த சர்க்யூட் கார்டு அடையாளத் தகவல் அல்லது ஸ்மார்ட் கார்டு)

  • CDMA நெட்வொர்க்குகளுக்கான MEID (மொபைல் உபகரண அடையாளத் தகவல்)

  • மோடம் ஃபர்ம்வேர்

வரிசை எண் மற்றும் பிற அடையாளத் தகவல்களை நகலெடுக்க, “நகலெடு” விருப்பம் காட்டப்படும் வரை அடையாளத் தகவலைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.

சட்ட மற்றும் ஒழுங்குமுறைத் தகவல்களையும் (சட்டப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் உரிமம், உத்தரவாதம் மற்றும் RF பாதிப்புத் தகவல்கள் உட்பட) ஒழுங்குமுறைக் குறியீடுகளையும் பார்க்க, அமைப்புகள் > பொது அமைப்புகள் > சட்டm & ஒழுங்குமுறை என்பதற்குச் செல்லவும்.

ஆதரிக்கப்படும் மாடல்களில், SIM கார்டு ட்ரேயில் IMEI இருக்கும், மேலும் SIM ட்ரே திறப்பில் மாடல் எண் இருக்கும்.

பழுதறிதல் தகவல்களைப் பார்த்தல் அல்லது ஆஃப் செய்தல்

அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு > பகுப்பாய்வுகள் & மேம்பாடுகள் என்பதற்குச் செல்லவும்.

Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்த உதவ, iPhone பிழைகண்டறிதல் மற்றும் பயன்பாட்டுத் தரவுகளை அனுப்புகிறது. இந்தத் தரவுகள் உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தாது, ஆனால் அதில் இருப்பிடத் தகவல்கள் இருக்கக்கூடும்.

இவற்றையும் பாருங்கள்iPhoneஐ ஆன் செய்து அமைத்தல்
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.