இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உங்கள் புகைப்படங்களிலோ வீடியோக்களிலோ உள்ள பொருட்களை அடையாளம் காண “விஷுவலாகக் கண்டுபிடி” அம்சத்தைப் பயன்படுத்துதல்

“விஷுவலாகக் கண்டுபிடி” அம்சம் மூலம், புகைப்படங்கள், படங்கள் மற்றும் வீடியோக்களில் தோன்றும் பிரபலமான அடையாளங்கள், தாவரங்கள், செல்லப்பிராணிகள் மற்றும் பலவற்றைக் கண்டறிந்து தெரிந்துகொள்ளலாம். “விஷுவலாகக் கண்டுபிடி” அம்சம் மூலம் புகைப்படத்தில் உள்ள உணவுகளைக் கண்டறிந்து அதனுடன் தொடர்புடைய சமையல் குறிப்புகளையும் வழங்கலாம்.

ஆதரிக்கப்படும் மாடல்களில் “விஷுவலாகக் கண்டுபிடி” அம்சம் கிடைக்கும். மேலும் ஃபோட்டோஸ், Safari, விரைவுப் பார்வை மற்றும் பலவற்றில் பயன்படுத்தப்படும்.

“ஃபோட்டோஸ்” செயலியின் லைப்ரரியில் புகைப்படம் திறக்கப்பட்டுள்ளது. திரையின் அடிப்பகுதியில் உள்ள “தகவல்கள்” பட்டன், “விஷுவலாகக் கண்டுபிடி” அம்சத்தின் தகவல்கள் கிடைப்பதைக் குறிக்கும் ஐகானைக் காட்டுகிறது.
  1. புகைப்படத்தையோ படத்தையோ முழு திரையில் திறக்கவும் அல்லது எந்த ஃபிரேமிலும் வீடியோவை இடைநிறுத்தவும்.

    தகவல் பட்டன் “கண்டறியப்பட்ட உணவு தகவல்” பட்டன் அல்லது “கண்டறியப்பட்ட நாய் தகவல்” பட்டன் போன்ற நட்சத்திரங்களுடன் கூடிய குறியீட்டைக் காட்டினால், “விஷுவலாகக் கண்டுபிடி” அம்சம் கிடைக்கும்.

  2. ஸ்டார் செய்யப்பட்ட தகவல் பட்டனைத் தட்டி, பிறகு “விஷுவலாகக் கண்டுபிடி” அம்சத்தின் முடிவுகளைப் பார்க்க, “புகைப்படத் தகவலின் மேலே பார்” என்பதைத் தட்டவும்.

  3. “விஷுவலாகக் கண்டுபிடி” அமத்தின் முடிவுகளை மூட “மூடுக” பட்டன்-ஐத் தட்டி, பிறகு புகைப்படத் தகவலை மூட புகைப்படம் அல்லது வீடியோ ஃபிரேமைக் கீழே ஸ்வைப் செய்யவும்.

“விஷுவலாகக் கண்டுபிடி” அம்சம் அனைத்துப் பிராந்தியங்களிலும் மொழிகளிலும் இல்லை. iOS மற்றும் iPadOS அம்சத்திற்கான கிடைக்கும்நிலையைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.