இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் நண்பர்களுடன் இசையைப் பகிர்தல்

Apple Music சுயவிவரம் உருவாக்கிய பிறகு, உங்கள் நண்பர்களுடன் இசையைப் பகிரலாம். உங்களைப் பின்தொடர்பவர்கள் அல்லது நீங்கள் தேர்வுசெய்பவர்களை மட்டுமே அனுமதிக்கலாம், மற்றவர்களைத் தடுக்கலாம்.

உங்களைப் பின்தொடர்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள இசையைத் தேர்வுசெய்தல்

இயல்பாக, நீங்கள் உருவாக்கும் பிளேலிஸ்ட்களை உங்களைப் பின்தொடர்பவர்கள் பார்க்கிறார். ஆனால் அவர்களுக்குச் சில பிளேலிஸ்ட்களைப் பகிர வேண்டாம் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள இசை செயலிக்குச் செல்லவும்.

  2. “எனது கணக்கு” பட்டன் அல்லது உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.

  3. “சுயவிவரத்தைக் காட்டு” என்பதைத் தட்டி, “திருத்து” என்பதைத் தட்டி பகிரப்பட்ட பிளேலிஸ்ட்களை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

உங்களைப் பின்தொடராதவர்களுடன் பிளேலிஸ்ட்டைப் பகிர, பிளேலிஸ்ட்டைத் தொட்டுப் பிடித்து “பிளேலிஸ்ட்டைப் பகிர்” என்பதைத் தட்டவும்.

குறிப்பு: நீங்கள் பகிரும் இசையில் பிளேலிஸ்ட்டைத் திருத்துதல் அல்லது பகிர்வதை நிறுத்ததுதல் போன்ற மாற்றங்களைச் செய்தால் அந்த மாற்றங்கள் உங்கள் பின்தொடர்பவர்களின் சாதனங்களில் பிரதிபலிக்கும்.

உங்களைப் பின்தொடர்பவர்களிடமிருந்து இசையை மறைத்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள இசை செயலிக்குச் செல்லவும்.

  2. “எனது கணக்கு” பட்டன் அல்லது உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.

  3. “சுயவிவரத்தைக் காட்டு” என்பதைத் தட்டவும்.

  4. பிளேலிஸ்ட் அல்லது ஆல்பத்தை (கேட்கப்படுவதற்கு கீழே உள்ளது) தொட்டுப் பிடிக்கவும்.

  5. “சுயவிவரத்திலிருந்து மறை” என்பதைத் தட்டவும்.

இந்த ஐட்டம் இதுவரை பிளே செய்யப்பட்டது குறித்த விவரம் உங்கள் சுயவிவரத்தில் தோன்றாது அல்லது உங்களைப் பின்தொடர்பவர்களுக்குத் தெரியாது. நீங்கள் கேட்கும் இசையை உங்கள் உங்களைப் பின்தொடர்பவர்கள் பார்ப்பதை நீங்கள் விரும்பவில்லை என்றால், சுயவிவரத் திரையில் உள்ள “திருத்து” என்பதைத் தட்டி திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “கேட்கப்படுவது” என்பதை ஆஃப் செய்யவும்.

குறிப்பு: நீங்கள் மறைக்கும் இசையை 10 நிமிடங்களுக்கு பிறகு உங்களைப் பின்தொடர்பவர்களால் பார்க்க முடியாது.

Apple Musicஇல் நீங்கள் பிளே செய்யும் இசை அனைத்தையும் உங்களைப் பின்தொடர்பவர்களிடம் இருந்து மறைக்கஉங்கள் கேட்கும் பழக்கத்தைப் புறக்கணிக்கும்படி Apple Musicக்குத் தெரிவித்தல் என்ற இணைப்பைப் பார்க்கவும்.

உங்கள் சுயவிவரத்தைப் பகிர்தல்

மின்னஞ்சல், மெசேஜ்கள் அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கும் மற்றொரு செயலியைப் பயன்படுத்தி உங்கள் சுயவிவரத்தைப் பகிரலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள இசை செயலிக்குச் செல்லவும்.

  2. “எனது கணக்கு” பட்டன் அல்லது உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.

  3. “சுயவிவரத்தைக் காட்டு” என்பதைத் தட்டவும்.

  4. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “சுயவிவரத்தைப் பகிர்” என்பதைத் தட்டிய பிறகு பகிர்தல் விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

நீங்கள் பின்தொடருபவர்கள் அல்லது உங்களைப் பின்தொடர்பவர்களின் சுயவிவரத்தையும் நீங்கள் பகிரலாம்.

யாருடன் இசையைப் பகிரவேண்டும் என்பதைத் தேர்வுசெய்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள இசை செயலிக்குச் செல்லவும்.

  2. “எனது கணக்கு” பட்டன் அல்லது உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.

  3. “சுயவிவரத்தைக் காட்டு” என்பதைத் தட்டி, “திருத்து” என்பதைத் தட்டி நீங்கள் தேர்வுசெய்பவர்கள் மட்டுமே உங்களைப் பின்தொடர விரும்பினால் “நீங்கள் அங்கீகரிப்பவர்கள்” என்பதைத் தட்டவும். (அனைவரும் என்பதில் சுயவிவரத்தைக் கொண்டுள்ள Apple Music சந்தாதாரர்கள் அனைவரும் அடங்குவர்.)

கூடுதல் தனியுரிமை அமைப்புகளுக்கு, உங்களைப் பின்தொடர்பவர்களிடமிருந்து இசையை மறைத்தல் என்ற இணைப்பைப் பார்க்கவும்.

பின்தொடர்தல் கோரிக்கைகளுக்குப் பதிலளித்தல்

யாராவது உங்களைப் பின்தொடர விரும்பினால், நீங்கள் கோரிக்கையை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். உங்கள் சுயவிவரத்தில் “நீங்கள் அங்கீகரிப்பவர்கள்” என்பதைத் தேர்ந்தெடுத்திருந்தால் மட்டுமே கோரிக்கைகளைப் பெறுவீர்கள். யாருடன் இசையைப் பகிரவேண்டும் என்பதைத் தேர்வுசெய்தல் என்ற இணைப்பைப் பார்க்கவும்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள இசை செயலிக்குச் செல்லவும்.

  2. “எனது கணக்கு” பட்டன் அல்லது உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.

  3. பின்தொடர்தல் கோரிக்கைகளைத் தட்டி, கோரிக்கைகளை ஏற்கவும் அல்லது நிராகரிக்கவும்.

பிற வழிகளிலும் நீங்கள் பின்தொடர்தல் கோரிக்கைகளைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, மின்னஞ்சல் அல்லது மெசேஜில் உள்ள இணைப்பாகவும் அவை இருக்கலாம். ஏற்க, இணைப்பைத் தட்டவும்.

உங்கள் நண்பர்களின் செயல்பாடு குறித்த அறிவிப்புகளை ஆன் அல்லது ஆஃப் செய்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள இசை செயலிக்குச் செல்லவும்.

  2. “எனது கணக்கு” பட்டன் அல்லது உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.

  3. அறிவிப்புகளைத் தட்டி “நண்பரின் செயல்பாடு” என்பதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

    விருப்பம் ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, நண்பர்கள் உங்களைப் பின்தொடர்ந்து உங்கள் பிளேலிஸ்ட்களைச் சேர்க்கும்போது அது உங்களுக்கு அறிவிக்கப்படும்.

பயனர்கள் உங்களைப் பின்தொடர்வதைத் தடுத்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள இசை செயலிக்குச் செல்லவும்.

  2. “எனது கணக்கு” பட்டன் அல்லது உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.

  3. “சுயவிவரத்தைக் காட்டு” என்பதைத் தட்டி சுயவிவரப் படத்தைத் தொட்டுப் பிடித்து “தடு” என்பதைத் தேர்வுசெய்யவும்.

    நீங்கள் தடுக்கும் நபர்கள் உங்கள் இசையைப் பார்க்கவோ உங்கள் சுயவிவரத்தைக் கண்டறியவோ முடியாது. நீங்கள் பகிர்ந்த பிளேலிஸ்ட்களை அவர்கள் தங்களின் லைப்ரரியில் சேர்த்தாலும் அவற்றை பிளே செய்யலாம்.

சிக்கலைப் புகாரளித்தல்

பின்தொடர்பவர் குறித்து உங்களுக்குச் சிக்கல் இருந்தால், அவரது சுயவிவரப் படத்தைத் தொட்டுப் பிடித்து “சிக்கலைப் புகாரளி” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.