இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

உங்கள் குடும்பத்தினருடன் அம்சங்களைப் பகிர்தல்

வாங்குதல்களைப் பகிர்வதற்கும், தொடர்பில் இருப்பதற்கும், உங்கள் தரவைப் பாதுகாப்பதற்கும், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பயன்படுத்தக்கூடிய சிறப்பு அம்சங்கள் உள்ளன. உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தால், உங்கள் பிள்ளைகள் Apple சாதனங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை நிர்வகிக்க, பெற்றோர் கட்டுப்பாடுகளையும் அமைக்கலாம்.

அமைப்புகளில் உள்ள “குடும்பப் பகிர்வு” திரை. ஐந்து குடும்ப உறுப்பினர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்களுக்குக் கீழே குடும்பப் பரிந்துரைகள், சந்தாக்கள் மற்றும் வாங்குதல் பகிர்வு விருப்பங்கள் உள்ளன.

“குடும்பப் பகிர்வு” அம்சத்தை அமைத்தல்

“குடும்பப் பகிர்வு” மூலம், நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் தகுதியான வாங்குதல்கள் மற்றும் சந்தாக்கள், உங்கள் இருப்பிடம் மற்றும் பலவற்றைப் பகிரலாம். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த சாதனத்தையும் Apple கணக்கையும் பயன்படுத்துவார்கள். ஆனால் iCloud சேமிப்பகம், Apple Music, Apple Arcade போன்ற சேவைகளுக்கான சந்தாக்கள் மற்றும் பிற உள்ளடக்கங்கள் பகிரப்படும்.

தொடங்குவதற்கு, அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > குடும்பம் என்பதற்குச் செல்லவும்.

நபர்களின் பட்டியலையும் மேப்பில் அவர்களின் இருப்பிடங்களையும் காட்டும் “இடம் அறி” செயலியின் திரை.

“இடம் அறி” செயலி மூலம் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்தல்

குடும்பப் பகிர்வை அமைத்தால், உங்கள் இருப்பிடத்தை உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம், மேலும் தொலைந்துபோன சாதனங்களைக் கண்டறிய “இடம் அறி” செயலி மூலம் அவர்களுக்கு உதவலாம்.

குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் இருப்பிடத்தைப் பகிர, அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > குடும்பம் என்பதற்குச் சென்று, “இருப்பிடப் பகிர்வு” என்பதைத் தட்டவும். உங்கள் இருப்பிடத்தை நீங்கள் பகிர விரும்பும் குடும்ப உறுப்பினரின் பெயரைத் தட்டவும். உங்கள் குடும்பப் பகிர்வுக் குழு உறுப்பினர்களுடன் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்ந்த பிறகு, தொலைந்த சாதனத்தைக் கண்டுபிடிக்க அவர்களால் உதவ முடியும்.

“உடல்நலம்” செயலியில் உள்ள “பகிர்வு” திரை.

உங்கள் உடல்நலத் தரவைப் பகிர்தல்

உங்கள் செயல்பாடு, நகர்வுநிலை, உடல்நல நிலவரம் போன்ற உங்கள் உடல்நலத் தரவுகளை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ள “உடல்நலம்” செயலியைப் பயன்படுத்தலாம்.

உடல்நலம் செயலியில், திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “பகிர்தல்” என்பதைத் தட்டி, “பிறருடன் பகிர்” என்பதைத் தட்டவும். நீங்கள் பகிர விரும்புவதையும், செயல்பாட்டில் ஏற்படும் திடீர் குறைவு போன்ற குறிப்பிடத்தக்க டிரெண்டுகளைப் பற்றி நீங்கள் பகிர்பவருக்கு அறிவிக்க வேண்டுமா என்பதையும் தேர்வுசெய்யலாம்.

ஃபோட்டோஸ் செயலியில் புகைப்படம் திறக்கப்பட்டுள்ளது. திரையின் மேல் வலப்புறம் இருப்பது, பகிர்ந்த லைப்ரரியில் புகைப்படத்தை நகர்த்துவதற்கான விருப்பம் ஆகும்.

குடும்பப் புகைப்பட லைப்ரரியைத் தொடங்குதல்

புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை அதிகபட்சம் ஐந்து குடும்ப உறுப்பினர்களுடன் பகிர, “iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரி” அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம். ஒவ்வொருவரும் தங்கள் நினைவுகள், சிறப்புப் புகைப்படங்கள் மற்றும் ஃபோட்டோஸ் விட்ஜெட்டில் புகைப்படங்களைச் சேர்க்கலாம், திருத்தலாம், தலைப்பிடலாம் மற்றும் பகிர்ந்த புகைப்படங்களைப் பார்த்து ரசிக்கலாம்.

தொடங்குவதற்கு, அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > iCloud > ஃபோட்டோஸ் என்பதற்குச் சென்று, “இந்த iPhoneஇல் ஒத்திசை” என்பதைத் தட்டி, “பகிர்ந்த லைப்ரரி” என்பதைத் தட்டவும்.

ரெகவரி தொடர்பாகத் தேர்ந்தெடுப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்ட தொடர்புகளையும், வேறொருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தையும் காட்டும் “ரெகவரி தொடர்பைச் சேர்” திரை.

ஏதேனும் ஒரு சமயம்

நீங்கள் எப்போதாவது கணக்கில் இருந்து வெளியேற்றப்பட்டால் அதற்கான அணுகலை மீண்டும் பெற உதவ, உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் மற்ற நம்பகமான நபர்களையும் கணக்கு மீட்டெடுப்பு தொடர்புகளாகச் சேர்க்கலாம். நீங்கள் இறந்தால் உங்கள் கணக்கு மற்றும் தனிப்பட்ட தகவல்களை அணுகுவதற்கு, நபர்களை லெகஸி தொடர்புகளாக அமைப்பதற்கு “டிஜிட்டல் லெகஸி” திட்டம் உங்களை அனுமதிக்கிறது.

நபர்களைச் சேர்க்க, அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > “உள்நுழைவு & பாதுகாப்பு” என்பதற்குச் சென்று, “கணக்கு மீட்டெடுப்பு” அல்லது “லெகஸி தொடர்பு” என்பதைத் தட்டவும்.

மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

அனைத்து அம்சங்களும் எல்லா நாடுகளிலும் வட்டாரங்களிலும் கிடைக்காது.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.