இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள மெசேஜஸ் செயலியில் உள்ளடக்கத்தைப் பகிர்தல்

மெசேஜஸ் செயலியைப் பயன்படுத்தி படங்கள், லிங்க்குகள் மற்றும் பிற உள்ளடக்கத்தைப் பகிரலாம். வேறொருவர் உங்களுடன் உள்ளடக்கத்தைப் பகிரும்போது, தொடர்புடைய செயலிகளில் உள்ள “உங்களுடன் பகிர்ந்தவை” பிரிவில் அதைக் காணலாம். “உங்களுடன் பகிர்ந்தவை” பிரிவை ஆதரிக்கும் செயலிகளில் ஃபோட்டோஸ், இசை, News மற்றும் பல அடங்கும்.

உள்ளடக்கத்தை மற்றவர்களுடன் பகிர்தல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. புதிய மெசேஜைத் தொடங்கவும் அல்லது உரையாடலைத் திறக்கவும்.

  3. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • படம் அல்லது லிங்க்கை நகலெடுத்து உங்கள் மெசேஜில் ஒட்டவும்.

    • “செயலிகள்” பட்டன்-ஐத் தட்டி, சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உலாவ புகைப்படங்களைத் தட்டி, சேர்க்கத் தட்டவும்.

    • மெசேஜ் இணைப்பு மீது தட்டி, “பகிர்” பட்டன்-ஐத் தட்டவும், பின்னர் தொடர்பைத் தட்டவும் அல்லது மெசேஜஸ் செயலி ஐகான்-ஐத் தட்டவும்.

      உதவிக்குறிப்பு: “பகிர்” பட்டன்-ஐத் தட்டும்போது, உங்கள் இணைப்பை நகலெடுக்கலாம், சேமிக்கலாம் அல்லது அச்சிடலாம்.

  4. மெசேஜைச் சேர்த்து (விருப்பத்திற்குரியது), “அனுப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

மற்றொரு செயலியிலிருந்து (பாட்காஸ்ட்கள், News, அல்லது இசை போன்றவை) நீங்கள் பகிர விரும்பும் உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுத்து, மேலும் பார்ப்பதற்கான பட்டன்-ஐத் தட்டி, “பகிர்” என்பதைத் தட்டி, மெசேஜ்களைத் தேர்வுசெய்யவும்.

வேறொருவர் உங்களுடன் பகிர்ந்த உள்ளடக்கம் அனைத்தையும் கண்டறிதல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் பார்க்க விரும்பும் உள்ளடக்க உரையாடலைத் திறக்கவும்.

  3. உரையாடலின் மேலே உள்ள, நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் அல்லது குழுவின் பெயரைத் தட்டவும்.

  4. “உங்களுடன் பகிர்ந்தவை” பிரிவைப் பார்க்க கீழ் ஸ்க்ரால் செய்யவும்.

குறிப்பு: உள்ளடக்கத்தை அனுப்பிய நபர் உங்கள் தொடர்புகளில் இருந்தால் மட்டுமே அந்த உள்ளடக்கம் “உங்களுடன் பகிர்ந்தவை”பிரிவில் காட்டப்படும்.

“உங்களுடன் பகிர்ந்தவை” பிரிவை ஃபோட்டோஸ், Safari, இசை, பாட்காஸ்ட்கள் மற்றும் பிற ஆதரிக்கப்படும் செயலிகளில் நீங்கள் கண்டறியலாம்.

புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை மறுஆய்வு செய்து சேமித்தல்

ஒரே நேரத்தில் பல புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பெற்றால், அவை தானாகவே ஒரு படத்தொகுப்பாக (இரண்டு முதல் மூன்று ஐட்டங்கள்) அல்லது ஒரு ஸ்டேக்காக (நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவை) தொகுக்கப்படும்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • ஸ்டேக்கிற்குள் பார்த்தல்: திறக்க தட்டவும், பின்னர் ஒவ்வொரு புகைப்படம் அல்லது வீடியோவையும் தனித்தனியாகப் பார்க்க, பதிலளிக்க அல்லது தொடர்புகொள்ள ஒரு ஸ்டேக் மீது ஸ்வைப் செய்யவும்.

    • புகைப்படம் அல்லது வீடியோவைச் சேமித்தல்: புகைப்படம் அல்லது ஸ்டேக்கிற்கு அருகில் உள்ள “புகைப்படத்தைச் சேமி” பட்டன்-ஐத் தட்டவும்.

பகிரந்த உள்ளடக்கத்தை பின் செய்தல்

குறிப்பாக சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை யாராவது பகிர்ந்தால், நீங்கள் அதை மெசேஜஸில் விரைவாக பின் செய்யலாம், மேலும் அது ஆதரிக்கப்படும் செயலிகள், மெசேஜஸ் தேடல், உரையாடல் விவரங்கள் (உரையாடலின் மேலே உள்ள பெயரைத் தட்டும்போது நீங்கள் பார்க்கும் தகவல்) ஆகியவற்றில் “உங்களுடன் பகிர்ந்தவை” பிரிவில் ஏற்றப்படும்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் பின் செய்ய விரும்பும் உள்ளடக்கத்துடன் உரையாடலைத் திறக்கவும்.

  3. லிங்க்கைக் கொண்ட மெசேஜ் பபுளைத் தொட்டுப் பிடித்து, “பின் செய்” என்பதைத் தட்டவும்.

குறிப்பு: புகைப்படங்களை உங்கள் லைப்ரரியில் சேமிக்கலாம், ஆனால் பின் செய்ய முடியாது.

பகிரந்த உள்ளடக்கத்தை மறைத்தல்

ஒரு செயலியின் “உங்களுடன் பகிர்ந்தவை” பிரிவை மறைக்க உங்கள் அமைப்புகளை மாற்றலாம்.

  1. அமைப்புகள்  > செயலிகள் > மெசேஜஸ் என்பதற்குச் செல்லவும்.

  2. “உங்களுடன் பகிர்ந்தவை” என்பதைத் தட்டி, “தானாகப் பகிர்தல்” அம்சத்தை ஆஃப் செய்யவும் அல்லது ஒரு குறிப்பிட்ட செயலிக்கு “உங்களுடன் பகிர்ந்தவை” என்பதை ஆஃப் செய்யவும்.

குறிப்பு: உங்கள் (அல்லது ஒரு குடும்ப உறுப்பினரின்) iPhoneஇல் உணர்பூர்வ உள்ளடக்கம் குறித்த எச்சரிக்கைகளைப் பெற முடியும், அவ்வகை உள்ளடக்கத்தை அனுப்பப்படுவதற்கு அல்லது பெறப்படுவதற்கு முன்பு நீங்கள் எச்சரிக்கையைப் பெறலாம். உணர்வைப் பாதிக்கக்கூடிய உள்ளடக்கம் குறித்த எச்சரிக்கையைப் பெறுதல் அல்லது உணர்வைப் பாதிக்கக்கூடிய படங்கள் உள்ளனவா என்று சரிபார்த்தல் என்பதைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.