இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் அடிப்படை கால்குலேட்டரைப் பயன்படுத்துதல்

அடிப்படை கால்குலேட்டர் மூலம் எண்கணிதக் கணக்கீடுகளை நீங்கள் செய்யலாம்.

Siri: இதுபோன்ற எதையேனும் சொல்லுங்கள்: “What’s 74 times 9?” அல்லது “What’s 18 percent of 225?” Siriஐ எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிக.

iPhoneஇல் உள்ள அடிப்படை கால்குலேட்டர்.

அடிப்படை கால்குலேட்டருக்கு மாற்றுதல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள கால்குலேட்டர் செயலிக்குச் செல்லவும்.

  2. கால்குலேட்டர் பயன்முறை பட்டன்-ஐத் தட்டி, அடிப்படை என்பதைத் தட்டவும்.

டிஸ்ப்ளேவில் காட்டப்படுபவற்றை அழித்தல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள கால்குலேட்டர் செயலிக்குச் செல்லவும்.

  2. இலக்கத்தை அல்லது கணக்கீட்டை உள்ளிடவும்.

  3. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • கடைசி இலக்கத்தை நீக்குதல்: நீங்கள் எண்ணை உள்ளிடும்போது ஏதேனும் தவறுசெய்துவிட்டால், நீக்கு பட்டன்-ஐத் தட்டவும்.

    • கணிதக் கோவையை நீக்குதல்: அனைத்தையும் அழி (AC) பட்டனைத் தட்டவும் அல்லது நீக்கு பட்டன்-ஐத் தொட்டுப் பிடிக்கவும்.

மற்றொரு பயன்முறைக்கு மாறுதல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள கால்குலேட்டர் செயலிக்குச் செல்லவும்.

  2. கால்குலேட்டர் பயன்முறை பட்டன்-ஐத் தட்டி, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

கணக்கீட்டின் முடிவை நகலெடுத்தல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள கால்குலேட்டர் செயலிக்குச் செல்லவும்.

  2. கணக்கீட்டை உள்ளிடவும், டிஸ்ப்ளேவில் காட்டப்படும் கணக்கீட்டு முடிவைத் தொட்டுப் பிடித்து, பின்னர் “நகலெடு” என்பதைத் தட்டவும்.

  3. குறிப்பு அல்லது மெசேஜ் போன்ற பிற இடங்களில் முடிவை ஒட்டவும்.

முந்தைய கணக்கீடுகளையும் நீங்கள் நகலெடுக்கலாம்.

முந்தைய செயல்பாட்டை மீண்டும் செய்தல்

ஒரு கணக்கீட்டை முடித்த பிறகு பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • தற்போதைய முடிவில் முந்தைய கணக்குச் செயல்பாட்டைப் பயன்படுத்த: “சமன்” குறியீட்டைத் தட்டவும்.

    எடுத்துக்காட்டாக, நீங்கள் “1 × 2 =” என்று உள்ளிட்டால், “2” என்ற முடிவு காட்டப்படும். நீங்கள் “சமன்” குறியீட்டை ஒவ்வொரு முறை தட்டும்போதும், தற்போது காட்டப்படும் பதில் 2ஆல் பெருக்கப்பட்டு பின்வரும் முடிவுகள் காட்டப்படும்: 4, 8, 16, 32…

  • கடைசியாகச் செய்த கணக்குச் செயல்பாட்டைப் புதிய எண்ணில் பயன்படுத்த: புதிய எண்ணை உள்ளிட்டு, “சமன்” குறியீட்டைத் தட்டவும்.

    எடுத்துக்காட்டாக, நீங்கள் “100 + 15% =” என்று உள்ளிட்டால், 115 என்ற முடிவு காட்டப்படும். பிறகு, நீங்கள் “150 =” என்று உள்ளிட்டால், “150 + 15%” அல்லது “172.5” என்ற முடிவு காட்டப்படும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.