இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலியில் உங்கள் நினைவுகளைப் பிரத்தியேகமாக்குதல்

உங்கள் நினைவின் திரைப்படங்களை மேலும் பிரத்தியேகமாக மாற்ற அவற்றைத் திருத்தலாம். பொருத்தமான ஃபோட்டோகிராஃபிக் தோற்றத்துடன் வெவ்வேறு பாடல்களில் பயன்படுத்த அனுமதிக்கும் நினைவு மிக்ஸ்களை பயன்படுத்திப் பார்க்கவும். நீங்கள் புதிய பாடல்களைத் தேர்வுசெய்யலாம், நினைவு திரைப்படத்துக்கான தலைப்பைத் திருத்தலாம், நீளத்தை மாற்றலாம், புகைப்படங்களைச் சேர்க்கலாம், மறுவரிசைப் படுத்தலாம் அல்லது அகற்றலாம். Apple Music சந்தாதாரர்கள் நூற்றுக்கணக்கான பாடல்கள் இருக்கும் Apple Music கேட்டலாகில் இருந்து பாடல்களைச் சேர்க்கலாம்.

நினைவு, திரையின் நடுவில் பிளே செய்யப்படுகிறது. திரையின் கீழ்ப்பகுதியில், இடமிருந்து வலமாக நினைவுகளின் மிக்ஸ்கள், புகைப்படங்கள், திரைப்படம் ஆகிய பட்டன்கள் உள்ளன. மேலே வலதுபக்கத்தில் ஒலியளவு, மேலும், மூடுக ஆகிய பட்டன்கள் உள்ளன. மேல் இடதுபக்கத்தில் நினைவின் தலைப்பு மற்றும் பிளே ஆகும் பாடலின் பெயர், கலைஞரின் பெயர் ஆகியவை உள்ளன.

நினைவு மிக்ஸைச் சேர்த்தல்

நினைவு மிக்ஸ்கள் வெவ்வேறு பாடல்கள், பேசிங் மற்றும் ஸ்டைல்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட கலவையாகும். அவை நினைவின் தோற்றத்தையும் உணர்வையும் மாற்றுகின்றன.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நினைவுகளில் ஸ்க்ரால் செய்து, ஒரு நினைவை பிளே செய்ய அதைத் தட்டவும்.

  3. திரையைத் தட்டி, “நினைவு மிக்ஸ்கள்” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. வெவ்வேறு நினைவு மிக்ஸ்களைப் பார்க்க இடதுபக்கம் ஸ்வைப் செய்யவும்.

  5. நினைவு மிக்ஸைப் பயன்படுத்த திரையைத் தட்டவும்.

நினைவின் தோற்றத்தை மாற்றுதல்

நினைவில் உள்ள அனைத்து புகைப்படங்களுக்கும் நிலையான நிறம் மற்றும் ஸ்டைல் மாற்றங்களைப் பயன்படுத்த நினைவு தோற்றத்தைப் பயன்படுத்தவும்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நினைவுகளில் ஸ்க்ரால் செய்து, ஒரு நினைவை பிளே செய்ய அதைத் தட்டவும்.

  3. திரையைத் தட்டி, “நினைவு மிக்ஸ்கள்” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. “ஃபில்டர்கள்” பட்டன்-ஐத் தட்டி, “நினைவின் தோற்றம்” என்பதைத் தட்டி, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

இசையை மாற்றுதல்

நினைவு சவுண்ட்டிராக்குகளிலிருந்து அல்லது Apple Musicஇல் இருந்து பரிந்துரைக்கப்பட்ட பாடல்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நினைவின் இசையை மாற்றலாம். நினைவகத்தின் உள்ளடக்கம் அல்லது இசை முன்னுரிமைகளின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட பாடல்களைக் காட்ட Apple Music சந்தாதாரர்கள் அவர்களது Apple Music லைப்ரரியை அணுகலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நினைவுகளில் ஸ்க்ரால் செய்து, ஒரு நினைவை பிளே செய்ய அதைத் தட்டவும்.

  3. திரையைத் தட்டி, “நினைவு மிக்ஸ்கள்” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. “இசை” பட்டன்-ஐத் தட்டி, ஒரு பாடலைத் தட்டிய பிறகு “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

    Apple Music லைப்ரரியில் பாடல்களைத் தேட Apple Music சந்தாதாரர்கள் “தேடல்” பட்டன்-ஐத் தட்டலாம்.

புகைப்படங்களைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

நினைவில் தோன்றும் புகைப்படங்களில் இருந்து நீங்கள் தேர்வுசெய்யலாம். பரிந்துரைக்கப்பட்ட முன்னிலைப்படுத்தப்படும் புகைப்படங்களில் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம் அல்லது உங்கள் லைப்ரரியில் இருந்து நேரடியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தேர்வுசெய்யலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நினைவுகளில் ஸ்க்ரால் செய்து, ஒரு நினைவை பிளே செய்ய அதைத் தட்டவும்.

  3. திரையைத் தட்டி, ஃபோட்டோஸ் செயலியைத் தட்டி, “மேலும்” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. “தலைப்பு மற்றும் புகைப்படங்களைத் திருத்து” என்பதைத் தட்டி, “புகைப்படங்களைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  5. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • உங்கள் புகைப்பட லைப்ரரியில் இருந்து ஒரு புகைப்படத்தைச் சேர்க்க: “அனைத்தும்” என்பதைத் தட்டி, உங்கள் லைப்ரரியில் ஸ்க்ரால் செய்து, நீங்கள் சேர்க்க விரும்பும் புகைப்படங்களைத் தட்டவும்.

    • புகைப்படங்களை அகற்ற: நினைவில் இருந்து புகைப்படத்தை அகற்ற அதைத் தேர்வுநீக்கவும்.

    • உங்கள் புகைப்பட லைப்ரரியில் புகைப்படங்களைத் தேட: தேடல் புலத்தைத் தட்டி, ஒரு நபரின் பெயர், இடம் அல்லது தேதியை அதில் டைப் செய்யவும். தேடல் முடிவுகளைத் தட்டி, நீங்கள் சேர்க்க விரும்பும் புகைப்படங்களைத் தட்டவும்.

  6. “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

ஒரு புகைப்படத்தை அகற்றுவதற்குப் பதிலாக அதை மறைக்க, ஃபோட்டோஸ் செயலியைத் தட்டி, ஒரு புகைப்படத்தைத் தொட்டுப்பிடித்து “மறை” என்பதைத் தட்டவும்.

தலைப்பு, வசனங்கள் மற்றும் முக்கியப் புகைப்படத்தைத் திருத்துதல்

நினைவுகளின் திரைப்படத்தின் தலைப்பு அல்லது வசனத்தை நீங்கள் திருத்தலாம் அல்லது நினைவு திரைப்படத்தின் தலைப்புடன் தோன்றும் முக்கிய புகைப்படத்தை மாற்றலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நினைவுகளில் ஸ்க்ரால் செய்து, ஒரு நினைவை பிளே செய்ய அதைத் தட்டவும்.

  3. திரையைத் தட்டி, ஃபோட்டோஸ் செயலியைத் தட்டி, “மேலும்” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. “திரைப்படத் தலைப்பைத் திருத்து”என்பதைத் தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • நினைவின் தலைப்பு அல்லது சப்டைட்டிலைத் திருத்த: புதிய தலைப்பு அல்லது வசனத்தை உரை புலங்களில் உள்ளிடவும்.

    • முக்கிய புகைப்படத்தை மாற்ற: “முக்கிய புகைப்படத்தைத் திருத்து” என்பதைத் தட்டி, புகைப்படத்தைத் தட்டவும்.

  5. “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

நினைவில் புகைப்படங்களை மறுவரிசைப்படுத்துதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நினைவுகளில் ஸ்க்ரால் செய்து, ஒரு நினைவை பிளே செய்ய அதைத் தட்டவும்.

  3. நினைவு பிளே ஆகும்போது, திரையைத் தட்டி, “மேலும்” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. “திரைப்படத்தின் காலவரிசையைத் திருத்து” என்பதைத் தட்டி, புகைப்படத்தைத் தொட்டுப் பிடித்து, அதை கிரிட்டில் ஒரு புதிய நிலைக்கு இழுக்கவும்.

  5. நினைவுக்குச் செல்ல, “பின்செல்” பட்டன்-ஐத் தட்டவும்.

நினைவின் நீளத்தை மாற்றுதல்

நினைவில் உள்ள புகைப்படங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, நினைவின் நீளத்தை குறுகியதாக, நடுத்தரமாக அல்லது நீளமாக மாற்றலாம். சேர்க்கப்பட்டுள்ள புகைப்படங்களின் எண்ணிக்கையை உங்கள் விருப்பம் தானாகவே சரிசெய்யும்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நினைவுகளில் ஸ்க்ரால் செய்து, ஒரு நினைவை பிளே செய்ய அதைத் தட்டவும்.

  3. திரையைத் தட்டி, “மேலும்” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. குறுகியது, நடுத்தரம் அல்லது நீளம் என்பதைத் தட்டவும்.

    புகைப்படங்களைச் சேர்ப்பது அல்லது நீக்குவதன் மூலம் திரைப்படத்தின் நீளத்தை நீங்களே பிரத்தியேகமாக்கினால், “பிரத்தியேகம்” என்பது நீளமாக தேர்ந்தெடுக்கப்படும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.