இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் குரல் சுருக்கவழிகளைப் பயன்படுத்துதல்

குரல்வழிச் சுருக்கவழிகள் மூலம், நீங்கள் தேர்வுசெய்த ஒரு வார்த்தையை அல்லது மற்றொரு ஒலியை உச்சரிக்கும்போது ஒரு செயலைச் செய்ய iPhoneக்குக் கற்றுக்கொடுக்கலாம். உங்களுக்கு உள்ள வழக்கத்திற்கு மாறான பேச்சு வடிவம் மிதமானது முதல் கடுமையானது வரை தீவிரமாக இருந்தாலும் உங்களால் சிலவற்றைப் புரியக்கூடிய அளவில் பேச முடியும் என்றால், “குரல்வழி சுருக்கவழிகள்” உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். சாதனத்தில் ஆடியோ செயலாக்கப்படும்.

குரல்வழிச் சுருக்கவழிகளை அமைத்தல்

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > குரல்வழிச் சுருக்கவழிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. “அமைக்கவும்” என்பதைத் தட்டி “தொடர்க” என்பதைத் தட்டவும்

  3. சுருக்கவழியைக் கூறும்போது iPhone செய்யவேண்டிய செயலைத் தேர்வுசெய்யவும். Siriக்கான கோரிக்கையாக ஒரு செயல் இருக்கவேண்டுமென நீங்கள் விரும்பினால், “Siri கோரிக்கை” என்பதைத் தட்டி கோரிக்கையை உள்ளிடவும்.

  4. இந்தச் செயலை iPhone செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பும்போது கூறும் வாக்கியத்தை உள்ளிட்டு சத்தமாகப் படிப்பதற்காக திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும். இதன் மூலம் iPhone அதை அடையாளம் காண முடியும்.

“குரல்வழிச் சுருக்கவழிகள்” அம்சத்தை அமைத்த பிறகு, சுருக்கவழிகளைக் கேட்க குரல்வழிச் சுருக்கவழிகள் அம்சம் iPhone மைக்ரோஃபோனைப் பயன்படுத்தினால் ஸ்டேட்டஸ் பாரில் “மைக்ரோஃபோன் பயன்பாட்டில் உள்ளது” ஐகான் காட்டப்படும். “குரல்வழிச் சுருக்கவழிகள்” அம்சம் உங்கள் மைக்ரோஃபோனைப் பயன்படுத்த வேண்டாம் என நீங்கள் நினைத்தால், அமைப்புகள் > அணுகல்தன்மை > குரல்வழிச் சுருக்கவழிகள் என்பதற்குச் சென்று, “குரல்வழிச் சுருக்கவழிகள்” என்பதை ஆஃப் செய்யவும்.

குரல்வழிச் சுருக்கவழியைச் சேர்த்தல்

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > குரல்வழிச் சுருக்கவழிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. “செயலைச் சேர்” என்பதைத் தட்டி “தொடர்க” என்பதைத் தட்டவும்.

  3. சுருக்கவழியைக் கூறும்போது iPhone செய்யவேண்டிய செயலைத் தேர்வுசெய்யவும். Siriக்கான கோரிக்கையாக ஒரு செயல் இருக்கவேண்டுமென நீங்கள் விரும்பினால், “Siri கோரிக்கை” என்பதைத் தட்டி கோரிக்கையை உள்ளிடவும்.

  4. இந்தச் செயலை iPhone செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பும்போது கூறும் வாக்கியத்தை உள்ளிட்டு சத்தமாகப் படிப்பதற்காக திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும். இதன் மூலம் iPhone அதை அடையாளம் காண முடியும்.

குரல்வழிச் சுருக்கவழியைப் பயன்படுத்துதல்

குரல்வழிச் சுருக்கவழியை நீக்குதல்

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > குரல்வழிச் சுருக்கவழிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. “திருத்துக” என்பதைத் தட்டி நீங்கள் நீக்க விரும்பும் சுருக்கவழிக்கு அடுத்துள்ள “அகற்று” பட்டன்-ஐத் தட்டிய பிறகு “நீக்கு” என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: பிறந்த பிறகு பேச்சுத்திறனில் பாதிப்பு ஏற்பட்டாலோ காலப்போக்கில் பேச்சுத்திறனில் குறைபாடு ஏற்பட்டாலோ, வழக்கத்திற்கு மாறாக உள்ள பல்வேறு பேச்சு வடிவங்களைக் கவனிக்கவும் அடையாளம் காணவும் Siriஐ நீங்கள் பயன்படுத்தலாம். Siri அணுகல்தன்மை அமைப்புகளை மாற்றுதல் என்ற பிரிவைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.