இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் Apple News+இல் ரெசிபிகள் மற்றும் உணவுச் செய்திகளைக் கண்டறிதல்

iOS 18.4 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில், Apple News+ சந்தாதாரர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உணவு உள்ளடக்கத்தைப் பார்க்கலாம். அதில் ரெசிபிக்குத் தேவையான பொருட்களில் செயல்களை மேற்கொள்ளுதல், எளிதில் தொடங்கக்கூடிய டைமர்கள் போன்ற அம்சங்களுடன் பரந்த அளவிலான ரெசிபி கேட்டலாக் உள்ளடங்கியிருக்கும்.

Apple News+இல் ரெசிபி காட்டப்பட்டுள்ளது, அதில் ரெசிபி கேட்டலாக் மற்றும் சேமித்த ரெசிபிகளுக்கான பட்டன்கள் காட்டப்பட்டுள்ளன.

குறிப்பு: Apple News, Apple News+, உணவு அம்சங்கள் ஆகியவை சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் கிடைப்பதில்லை.

ரெசிபிகளைத் தேடுதல் மற்றும் ஃபில்டர் செய்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள News செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “பின்தொடர்பவை” என்பதைத் தட்டி, “உணவு” என்பதைத் தட்டி, செய்திகளையும் ரெசிபிக்களையும் பார்க்க கீழ்நோக்கி ஸ்க்ரால் செய்யவும்.

    உணவு சார்ந்த உள்ளடக்கங்களையும் ரெசிபிகளையும் எவ்வளவு அதிகம் படிக்கிறீர்களோ, பரிந்துரைகள் அவ்வளவு தனிப்பயனாக்கப்பட்டதாக வழங்கப்படும்.

  3. ஊட்டத்தின் மேல் பகுதி உள்ள ரெசிபி அட்டவணையைத் தட்டியோ மேல் வலது மூலையில் உள்ள “ரெசிபி கேட்டலாக்” பட்டன்-ஐத் தட்டியோ, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • ரெசிபி பெயர், தேவையான பொருள் அல்லது முக்கியச் சொல்லின்படி தேட: தேடல் புலத்தைத் தட்டி, ஒரு சொல்லை உள்ளிட்டு, தேடு என்பதைத் தட்டவும்.

    • வகையின்படி ஃபில்டர் செய்ய: சைவ உணவு போன்ற ஒரு வகையைத் தட்டவும்.

    • ஃபில்டர்களைச் சேர்க்க மற்றும் இணைக்க: “ஃபில்டர்” பட்டன்-ஐத் தட்டி ஒரு ஃபில்டரைத் தட்டி, “பயன்படுத்து” என்பதைத் தட்டவும்.

    • ஃபில்டரை அகற்ற: “அகற்று” பட்டன்-ஐத் தட்டவும்.

Apple News+இல் ரெசிபி தேடல்.

ரெசிபியைச் சேமித்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள News செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “பின்தொடர்பவவை” என்பதைத் தட்டி, “உணவு” என்பதைத் தட்டி, ரெசிபிக்களைப் பார்க்க அல்லது அவற்றைத் தேடி ஃபில்டர் செய்ய கீழ்நோக்கி ஸ்க்ரால் செய்யவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யலாம்:

    • தேடல் முடிவுகளில் தேடும்போது அல்லது பார்க்கும்போது: ரெசிபியின் படத்தைத் தொட்டுப் பிடித்து “ரெசிபியைச் சேமி” என்பதைத் தட்டவும்.

    • ரெசிபி திறந்திருக்கும்போது: “சேமி” என்பதைத் தட்டவும்.

  4. சேமித்த ரெசிபிகளை மீண்டும் பார்க்க, பின்தொடரும் பட்டியல் அல்லது உணவு ஊட்டத்தில் உள்ள “சேமித்த ரெசிபிகள்” என்பதைத் தட்டவும் அல்லது ரெசிபி கேட்டலாக்கில் “சேமித்த ரெசிபிகள்” பட்டன்-ஐத் தட்டவும்.

சேமித்த ரெசிபிகளில் இருந்து ஒரு ரெசிபியை அகற்ற, ரெசிபியைத் தொட்டுப் பிடித்து “சேமித்த ரெசிபியை நீக்கு” என்பதைத் தட்டவும்.

ரெசிபியைப் பார்த்துச் சமைத்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள News செயலிக்குச் செல்லவும்.

  2. ரெசிபியைத் தட்டி திறக்கவும். இல்லையெனில், உணவுச் செய்தியை வாசிக்கும்போது, கீழ் வலதுபுறத்தில் “ரெசிபி” என்பதைத் தட்டவும். செய்தியில் பல ரெசிபிகள் இருந்தால், “ரெசிபிகள்” என்பதைத் தட்டி, நீங்கள் சமைக்க விரும்பும் உணவின் பெயரைத் தட்டவும்.

  3. ரெசிபியில் உள்ள தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகளைப் பார்க்க ஸ்க்ரால் செய்யவும். பிறகு தேவையான பொருட்கள் அல்லது செய்முறைகளுக்கு இடையே மாற, திரையில் மேல் பகுதியில் உள்ள தேவையான பொருட்கள் அல்லது செய்முறைகள் என்பதைத் தட்டவும்.

  4. செய்முறையில் கவனம் செலுத்த, “சமைக்கும் முறை” என்பதைத் தட்டவும்.

    செய்முறை பெரிய எழுத்துருக்களில் காட்டப்படும். நீங்கள் ரெசிபியைப் பார்த்துச் சமைக்கும் வரை அது தொடர்ந்து காட்டப்படும்.

    ஒரு ரெசிபியில் குறிப்பிட்ட நேரத்திற்குச் சமைக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படும்போது (வேறு நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்டிருக்கும்) நீங்கள் சமையல் டைமரைத் தொடங்கலாம். எடுத்துக்காட்டாக, வெங்காயத்தை வதக்க வேண்டிய நேரம் அல்லது கேக்கை ரெஸ்ட்டில் வைக்க வேண்டிய நேரம். “டைமர்” பட்டன்-ஐத் தட்டி, நேரத்தை மாற்ற மேலே அல்லது கீழே ஸ்வைப் செய்த பிறகு “தொடங்கு” என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: செய்முறையைப் பார்க்கும்போது, குறிப்பிட்ட ஒரு பொருள் ஒரு ரெசிபியில் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தேவையான பொருட்களின் பட்டியலுக்குச் செல்லாமலேயே தேவையான பொருளைத் தட்டுவதன் மூலம் நீங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவற்றைத் தட்டுவதன் மூலம், நீங்கள் ஏற்கெனவே எந்தச் செயலைச் செய்துள்ளீர்கள் அல்லது பொருளைப் பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

குறிப்பு: ஆஃப்லைன் பயன்முறையில் உள்ளபோதும் உணவு ஊட்டம், ரெசிபி கேட்டலாக், சேமித்த ரெசிபிகள் ஆகியவற்றுக்கான அணுகல் உங்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனில், நீங்கள் ஆன்லைனில் உள்ளபோது அமைப்புகள் > செயலிகள் > News என்பதற்குச் சென்று, தானியங்குப் பதிவிறக்கங்கள் (News+ ஆஃப்லைன் பயன்முறை என்பதற்குக் கீழே உள்ளது) என்பதைத் தட்டி, உணவு & ரெசிபிகள் என்பதை ஆன் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.