இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள செயலியை லாக் செய்தல் அல்லது மறைத்தல்

குறிப்பிட்ட சில செயலிகளைத் திறந்துவிடுவாரோ என்ற கவலையின்றி உங்கள் iPhoneஇல் உள்ள எதையேனும் யாருக்காவது காட்ட விரும்பினால், செயலிகளை நீங்கள் லாக் செய்யலாம் அல்லது மறைக்கலாம். செயலியை லாக் செய்தால் அதைத் திறப்பதற்கு Face ID, Touch ID அல்லது பாஸ்கோடு தேவை. லாக் செய்யப்பட்ட செயலியில் உள்ள தகவல்கள் மற்ற இடங்களில் காட்டப்படாது. எடுத்துக்காட்டாக, CarPlay, அறிவிப்பு முன்னோட்டங்கள், தேடல், Siri பரிந்துரைகள், இதுவரையான அழைப்பு விவரங்கள் போன்றவை.

உங்கள் சாதனத்தில் ஒரு செயலியை லாக் செய்தால் அல்லது மறைத்தால், அது அந்தச் சாதனத்தில் மட்டுமே லாக் செய்யப்படும் அல்லது மறைக்கப்படும். ஒரு செயலியின் லாக் செய்யப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட நிலை iCloudஇல் ஒத்திசைக்கப்படாது.

குறிப்பு: குடும்பப் பகிர்வு குழுவில் உள்ள 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செயலிகளை லாக் செய்யவோ மறைக்கவோ முடியாது. குடும்பக் குழுவில் 13 முதல் 17 வயது வரை உள்ள எவரும் செயலியை லாக் செய்யலாம் அல்லது மறைக்கலாம். ஆனால் செயலி பதிவிறக்கப்பட்டதையும் அது எவ்வளவு நேரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் குடும்பக் குழுவில் உள்ள பெற்றொர் அல்லது பாதுகாவலரால் பார்க்க முடியும், மேலும் ஸ்கிரீன் டைமைப் பயன்படுத்தி அதற்கான அணுகலையும் வரம்பிட முடியும். (நாடு அல்லது பிராந்தியத்தைப் பொறுத்து இந்த வயது மாறுபடும்.)

செயலியை லாக் செய்தல்

செயலியை லாக் செய்தால் அதைத் திறப்பதற்கு Face ID, Touch ID அல்லது பாஸ்கோடு தேவை.

குறிப்பு: iPhoneஇல் இயல்பாகவே வரும் சில செயலிகளை லாக் செய்ய முடியாது. கால்குலேட்டர், கேமரா, கடிகாரம், இடம் அறி, மேப்ஸ், சுருக்கவழிகள், அமைப்புகள் ஆகியவை இதில் அடங்கும்.

  1. முகப்புத் திரைக்குச் செல்லவும்.

  2. நீங்கள் லாக் செய்ய விரும்பும் செயலியைக் கண்டறியவும்.

  3. விரைவுச் செயல்கள் மெனு திறக்கப்படும் வரை செயலி ஐகானைத் தொட்டுப் பிடிக்கவும்.

  4. “Face ID (அல்லது Touch ID அல்லது பாஸ்கோடு) தேவை” என்பதைத் தட்டவும்.

  5. “Face ID தேவை” (அல்லது Touch ID அல்லது பாஸ்கோடு) என்பதை மீண்டும் தட்டி, Face IDஐ (அல்லது Touch ID அல்லது பாஸ்கோடு) பயன்படுத்தி அங்கீகரிக்கவும்.

லாக் செய்யப்பட்டுள்ள செயலியைத் திறத்தல்

நீங்கள் லாக் செய்துள்ள செயலியைத் திறந்து பயன்படுத்தலாம்.

  1. முகப்புத் திரைக்குச் செல்லவும்.

  2. நீங்கள் திறக்க விரும்பும் செயலியைக் கண்டறியவும்.

  3. செயலியைத் தட்டி, Face IDஐ (அல்லது Touch ID அல்லது பாஸ்கோடு) பயன்படுத்தி அங்கீகரிக்கவும்.

செயலியை அன்லாக் செய்தல்

ஒரு செயலியை நீங்கள் அன்லாக் செய்ய முடியும் என்பதால் அதைத் திறக்க Face ID, Touch ID அல்லது பாஸ்கோடைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

  1. முகப்புத் திரைக்குச் செல்லவும்.

  2. நீங்கள் அன்லாக் செய்ய விரும்பும் செயலியைக் கண்டறியவும்.

  3. விரைவுச் செயல்கள் மெனு திறக்கப்படும் வரை செயலி ஐகானைத் தொட்டுப் பிடிக்கவும்.

  4. “Face ID தேவையில்லை” (Touch ID அல்லது பாஸ்கோடு) என்பதைத் தட்டி, Face IDஐ (Touch ID அல்லது பாஸ்கோடு) பயன்படுத்தி அங்கீகரிக்கவும்.

செயலியை மறைத்தல்

செயலிகளை மறைப்பது அதைப் பிறர் பார்ப்பதையோ திறப்பதையோ தடுக்கிறது (Face ID, Touch ID அல்லது பாஸ்கோடைப் பயன்படுத்தி உங்கள் iPhoneஐ அங்கீகரிக்காத வரை).

ஒரு செயலியை நீங்கள் மறைத்தாலும் சில இடங்களில், அதாவது ஸ்கிரீன் டைம், செயலி வாரியான பேட்டரி பயன்பாடு (அமைப்புகளில்), App Storeஇல் இதுவரை நீங்கள் வாங்கியவை போன்றவற்றில் அதன் பெயர் காட்டப்படும்.

குறிப்பு: iOS 18 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயல்பாகவே நிறுவப்பட்டிருக்கும் செயலிகளை மறைக்க முடியாது. App Storeஇல் இருந்து நீங்கள் தனியாகப் பதிவிறக்கும் செயலிகளை மட்டுமே மறைக்க முடியும். இயல்புநிலை இணைய உலாவியாகப் பயனரால் அமைக்கப்படும் செயலிகளையும் செயலி மார்க்கெட்பிளேஸையும் (EUஇல் மட்டும் கிடைக்கும்) மறைக்க முடியாது.

  1. முகப்புத் திரைக்குச் செல்லவும்.

  2. நீங்கள் மறைக்க விரும்பும் செயலியைக் கண்டறியவும்.

  3. விரைவுச் செயல்கள் மெனு திறக்கப்படும் வரை செயலி ஐகானைத் தொட்டுப் பிடிக்கவும்.

  4. “Face ID (அல்லது Touch ID அல்லது பாஸ்கோடு) தேவை” என்பதைத் தட்டவும்.

  5. “மறை” மற்றும் “Face ID தேவை” (அல்லது Touch ID அல்லது பாஸ்கோடு) என்பதைத் தட்டை, Face IDஐ (அல்லது Touch ID அல்லது பாஸ்கோடு) பயன்படுத்தி அங்கீகரித்த பிறகு “செயலியை மறை” என்பதைத் தட்டவும்.

    உங்கள் முகப்புத் திரையில் மறைக்கப்படும் செயலி, செயலி லைப்ரரியின் அடிப்பகுதியில் உள்ள “மறைக்கப்பட்டவை” கோப்புறைக்குச் செல்லும்.

உதவிக்குறிப்பு: மறைக்கப்பட்ட செயலிகளின் பட்டியலைப் பார்க்க, அமைப்புகள்  > செயலிகள் > மறைக்கப்பட்ட ஆப்ஸ் என்பதற்குச் சென்று, Face IDஐ (அல்லது Touch ID அல்லது பாஸ்கோடு) பயன்படுத்தி அங்கீகரிக்கவும்.

மறைக்கப்பட்ட செயலியைத் திறத்தல்

நீங்கள் மறைத்த செயலியைத் திறந்து பயன்படுத்தலாம்.

  1. முகப்புத் திரைக்குச் செல்லவும்.

  2. செயலி லைப்ரரிக்குச் செல்ல உங்கள் முகப்புத் திரைப் பக்கங்கள் அனைத்தையும் இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.

  3. செயலி லைப்ரரியின் கீழ்ப்பகுதியில் உள்ள மறைக்கப்பட்ட கோப்புறையைத் தட்டி Face IDஐ (அல்லது Touch ID அல்லது பாஸ்கோடு) பயன்படுத்தி அங்கீகரிக்கவும்.

    “மறைக்கப்பட்டவை” கோப்புறையில் செயலி காட்டப்படும்.

  4. செயலியைத் தட்டி, Face IDஐ (அல்லது Touch ID அல்லது பாஸ்கோடு) பயன்படுத்தி அங்கீகரிக்கவும்.

மறைக்கப்பட்ட செயலியைக் காட்டுதல்

ஒரு செயலியை மறைப்பதை நிறுத்துவதன் மூலம் அதை நீங்கள் பார்க்கலாம், பயன்படுத்தலாம்.

  1. முகப்புத் திரைக்குச் செல்லவும்.

  2. செயலி லைப்ரரிக்குச் செல்ல உங்கள் முகப்புத் திரைப் பக்கங்கள் அனைத்தையும் இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.

  3. செயலி லைப்ரரியின் கீழ்ப்பகுதியில் உள்ள மறைக்கப்பட்ட கோப்புறையைத் தட்டி Face IDஐ (அல்லது Touch ID அல்லது பாஸ்கோடு) பயன்படுத்தி அங்கீகரிக்கவும்.

  4. “மறைக்கப்பட்டவை” கோப்புறையில் இருந்து செயலிகளை அகற்ற, செயலியைத் தொட்டுப் பிடித்து “Face ID தேவையில்லை” (அல்லது Touch ID அல்லது பாஸ்கோடு) என்பதைத் தட்டிய பிறகு Face IDஐ (அல்லது Touch ID அல்லது பாஸ்கோடு) பயன்படுத்தி அங்கீகரிக்கவும்.

    செயலி லைப்ரரியின் மேற்புறத்திற்கு அருகில் செயலி காட்டப்படும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.