இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உள்ள பதிவிறக்கப்பட்ட News உள்ளடக்கத்தைப் படிக்க ஆஃப்லைன் பயன்முறையைப் பயன்படுத்துதல்

Apple News+ சந்தாதாரர்கள் News உள்ளடக்கத்தை தானாகப் பதிவிறக்கி, Wi-Fi அல்லது மொபைல் சேவை இணைப்பு இல்லாதபோது (உதாரணமாக, விமானத்தில் செல்லும்போதோ, சுரங்கப்பாதையில் பயணிக்கும்போதோ) பின்னர் அதை அணுகலாம்.

குறிப்பு: செய்திகள், வெளியீட்டு இதழ்கள், ஆடியோ செய்திகள், ரெசிபிகள், புதிர்கள் போன்றவை ஆஃப்லைன் பயன்முறைக்காகப் பதிவிறக்கப்படும் உள்ளடக்கத்தில் இருக்கலாம். சில நாடுகள் மற்றும் வட்டாரங்களில் அனைத்து உள்ளடக்க வகைகளும் கிடைப்பதில்லை. Apple மீடியா சேவைகள் கிடைக்கும் தன்மை என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

Apple News+க்கான தானாகப் பதிவிறக்கப்படும் அம்சத்தை ஆன் செய்தல்

  1. உங்கள் Apple கணக்கில் உள்நுழையவும்.

  2. அமைப்புகள்  > செயலிகள் > News என்பதற்குச் செல்லவும்.

  3. பின்னணி செயலி ரிஃப்ரெஷ் விருப்பத்தை ஆன்செய்யவும்.

  4. தானியங்கு பதிவிறக்கங்கள் என்பதைத் தட்டி, “தானியங்கு பதிவிறக்கங்களை அனுமதி” என்பதை ஆன் செய்து, பின்வருவனவற்றில் ஒன்றை ஆன் செய்யவும்:

    • சமீபத்திய செய்திகள்: இன்றைய ஃபீட், News+இல் சிறந்தவை ஃபீட், விளையாட்டுகள் ஃபீட், உங்களுடன் பகிர்ந்தவை, வரலாறு ஆகியவற்றில் சமீபத்திய செய்திகள் பதிவிறக்கப்படும்.

    • சேமித்த செய்திகள்: உங்கள் “சேமித்த செய்திகள்” பட்டியலில் சமீபத்திய செய்திகள் பதிவிறக்கப்படும்.

    • பத்திரிக்கைச் செய்தி வெளியீடுகள்: நீங்கள் பின்தொடரும் பத்திரிக்கைகளின் சமீபத்திய செய்தி வெளியீடுகள் பதிவிறக்கப்படும்.

    • உணவு மற்றும் ரெசிபிகள்: உணவு ஊட்டம், ரெசிபி கேட்டலாக், சேமித்த ரெசிபிகள் ஆகியவற்றைப் பதிவிறக்குகிறது.

    • புதிர்கள்: ஒவ்வொரு புதிர் வகைக்கான ஃபீட் மற்றும் இந்த ஃபீட்களில் உள்ள புதிர்களைப் “புதிர்கள் ஃபீட்” பதிவிறக்கப்படும்.

    • ஆடியோ செய்திகள்: “இன்றைய ஃபீட்” மற்றும் ஆடியோ தாவலில் ஆடியோ செய்திகள் பதிவிறக்கப்படும்.

    குறிப்பு: செய்திகளில் உள்ள படங்களின் சிறிய பதிப்புகள் மற்றும் ரெசிபிகளைப் பதிவிறக்க, “சேமிப்பகத்தை உகந்ததாக்கு” அம்சத்தை ஆன் செய்யவும்.

உங்கள் iPhoneஇல் போதுமான சேமிப்பக இடம் இருந்து, Wi-Fi மற்றும் மின்சக்தியுடன் இணைக்கப்பட்டிருக்கும்போது அது News உள்ளடக்கத்தைப் பதிவிறக்கும். உங்களிடம் மொபைல் டேட்டா இணைப்பு இருந்து, ஆனால் Wi-Fi இல்லை எனில், “இன்றைய ஃபீட்” பிரிவில் உள்ள சிறந்த செய்திகள் மட்டுமே தானாகப் பதிவிறக்கப்படும்.

ஆஃப்லைன் பயன்முறையில் News செயலியைப் பயன்படுத்துதல்

உங்களிடம் Wi-Fi அல்லது மொபைல் டேட்டா இணைப்பு இல்லையெனில், “இணைய இணைப்பு இல்லை” என்ற வாசகம் திரையின் மேல்பகுதியில் தோன்றும், செயலியில் உள்ள பதிவிறக்கப்படாத எந்தவொரு உள்ளடக்கமும் மங்கலாகும். ஒவ்வொரு ஃபீடிலும் தற்போது ஏற்றப்பட்ட பதிப்பில் இருந்து பதிவிறக்கப்பட்ட பதிப்பிற்கு மாற, “ஆஃப்லைன் பயன்முறைக்காகப் பதிவிறக்கப்பட்ட செய்திகளைக் காட்டு” என்பதைத் தட்டவும்.

இணையத்துடன் மீண்டும் இணைக்கும்போது, திரையின் மேல்பகுதியில் உள்ள “புதிய செய்திகள் உள்ளன” என்பதைத் தட்டவும். செயலியில் உள்ள அனைத்து ஃபீட்களும் ரிஃப்ரெஷ் செய்யப்பட்டு சமீபத்திய உள்ளடக்கத்தைக் காட்டும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.