இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

வெளிப்புற கீபோர்டைப் பயன்படுத்தி iPhoneஐக் கட்டுப்படுத்துதல்

நீங்கள் iPhoneஇல் Magic Keyboard அல்லது வேறொரு ஃபிசிக்கல் கீபோர்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், தொடுதிரைக்குப் பதிலாக கீபோர்டு சுருக்கவழியைப் பயன்படுத்தி உங்கள் சாதனத்தைக் கட்டுப்படுத்த “முழு கீபோர்டு அணுகல்” அம்சத்தைப் பயன்படுத்தலாம். “முழு கீபோர்டு அணுகல்” அம்சம் ஃபோகஸ் செய்யப்படும் திரையில் உள்ளதை ஹைலைட் செய்யும்.

“முழு கீபோர்டு அணுகல்” அம்சத்தைப் பயன்படுத்தி iPhoneஐக் கட்டுப்படுத்துதல்

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > கீபோர்டுகள் என்பதற்குச் சென்று, முழு கீபோர்டு அணுகல் என்பதைத் தட்டிய பிறகு, “முழு கீபோர்டு அணுகல்” என்பதை ஆன் செய்யவும்.

  2. பின்வரும் இயல்புநிலைக் கட்டளைகளைப் பயன்படுத்தி iPhone முழுவதும் நகரவும்.

    ஆக்‌ஷன்

    சுருக்கவழி

    கிடைக்கக்கூடிய முழு கீபோர்டு அணுகல் கட்டளைகளைக் காட்டுதல்

    டேப்-H

    முன்னோக்கி நகர்த்துதல்

    டேப்

    பின்னோக்கி நகர்த்துதல்

    ஷிஃப்ட்-டேப்

    தேர்ந்தெடுக்கப்பட்ட ஐட்டத்தைச் செயல்படுத்துதல்

    ஸ்பேஸ் பார்

    முகப்புத் திரைக்குச் செல்லுதல்

    Fn-H

    செயலி மாற்றியைத் திறக்கவும்

    Fn-மேல் அம்புக்குறி

    கட்டுப்பாட்டு மையத்தைத் திறத்தல்

    Fn-C

    அறிவிப்பு மையத்தைத் திறத்தல்

    Fn-N

“முழு கீபோர்டு அணுகல்” அம்சத்தைப் பிரத்தியேகமாக்குதல்

“முழு கீபோர்டு அணுகல்” கட்டளைகளுடன் தொடர்புடைய கீபோர்டு சுருக்கவழிகளை நீங்கள் மாற்றலாம், மேலும் முழு கீபோர்டு அணுகலின் தோற்றத்தையும் (எ.கா., ஹைலைட்டின் நிறம், கான்ட்ராஸ்ட், அளவு போன்றவை) பிரத்தியேகமாக்கலாம்.

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > கீபோர்டுகள் என்பதற்குச் சென்று, “முழு கீபோர்டு அணுகல்” என்பதைத் தட்டவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • “முழு கீபோர்டு அணுகல்” கட்டளைகளுக்கான முழுப் பட்டியலைப் பார்த்து அவற்றைப் பிரத்தியேகமாக்க: கட்டளைகளைத் தட்டவும்.

    • “முழு கீபோர்டு அணுகல்” அம்சத்தின் தோற்றத்தை மாற்ற: “தோற்றம்” என்பதற்குக் கீழே உள்ள விருப்பத்தைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.