இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneக்கான Qi-சான்றளிக்கப்பட்ட வயர்லெஸ் சார்ஜர்கள்

Qi-சான்றளிக்கப்பட்ட சார்ஜரை (தனியாக விற்கப்படுகிறது) பயன்படுத்தி உங்கள் iPhoneஐ வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யலாம். AirPodsஐ சார்ஜ் செய்ய நீங்கள் Qi-சான்றளிக்கப்பட்ட சார்ஜரையும் பயன்படுத்தலாம்.

Qi-சான்றளிக்கப்பட்ட சார்ஜர் மூலம் iPhone அல்லது AirPodsஐ சார்ஜ் செய்தல்

  1. சார்ஜரை மின்சக்தியுடன் இணைக்கவும். உங்கள் சார்ஜருடன் வந்த பவர் அடாப்டரைப் பயன்படுத்தவும் அல்லது உற்பத்தியாளரால் பரிந்துரைக்கப்படும் பவர் அடாப்டரைப் பயன்படுத்தவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • iPhone: iPhone மேல்நோக்கி இருக்கும் வகையில் சார்ஜரின் மையத்தில் வைக்கவும். iPhone சார்ஜருடன் சரியாகப் பொருத்தப்பட்டால், “பேட்டரி சார்ஜிங்” ஐகான் ஸ்டேட்டஸ் பாரில் காட்டப்படும்.

    • AirPods 2 (வயர்லெஸ் சார்ஜிங் கேஸுடன் கூடியது), AirPods 3, AirPods 4 (“ஆக்டிவ் இரைச்சல் நீக்கம்” அம்சத்துடன் கூடியது) மற்றும் AirPods Pro: உங்கள் AirPodsஐ சார்ஜிங் கேஸில் வைத்து மூடியை மூடிய பிறகு சார்ஜரின் மையத்தில் ஸ்டேடஸ் லைட் மேல்நோக்கி இருக்கும் வகையில் கேஸை வைக்கவும். சார்ஜருடன் சரியாக கேஸ் பொருத்தப்பட்டால், சில விநாடிகளுக்கு ஸ்டேட்டஸ் லைட் ஆன் செய்யப்பட்டு, தொடர்ந்து சார்ஜ் ஆகும்போது ஆஃப் செய்யப்படும்.

உங்கள் iPhoneஐ வயர்லெஸ் முறையில் எப்படி சார்ஜ் செய்வது?, உங்கள் AirPodsஐ மாற்றுதல், பேட்டரி நிலை குறித்து அறிந்துகொள்ளுதல் ஆகிய Apple உதவிக் கட்டுரைகளைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.