இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள மெசேஜஸில் தேடுதல்

தேவையான முடிவுகளை மட்டும் பெற, வெவ்வேறு நிபந்தனைகளைப் பயன்படுத்தி உரை மெசேஜ்களையும் இணைப்புகளையும் நீங்கள் தேடலாம்.

மெசேஜஸ் செயலியில் உள்ள தேடல் புலம். குறிப்பிட்ட நபர் அனுப்பிய புகைப்படங்கள் மட்டும் என்று வரம்பிடும் வகையில் தேடலை வரையறுக்கும் குறிச்சொல் தேடல் புலத்தில் இருக்கும்.
  1. உங்கள் iPhoneஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. உரையாடல் பட்டியலுக்கு மேலே உள்ள தேடல் புலத்தைத் தட்டவும். (தேடல் புலம் காட்டப்பட, நீங்கள் கீழே ஸ்வைப் செய்ய வேண்டியிருக்கலாம்.)

  3. நீங்கள் தேடுவதை உள்ளிடவும் (சொல், சொற்றொடர் போன்றவை).

    புகைப்படம், இணைப்பு, வாலெட் (பாஸ்களுக்காக), உரையாடல் அல்லது நபரின் பெயர் போன்ற தேடல் வார்த்தையை உள்ளிடும்போது, தேடல் புலத்திற்குக் கீழே ஒரு ஃபில்டர் தோன்றும். அதைத் தேடலில் ஃபில்டராகச் சேர்க்க அதைத் தட்டவும்.

    உதவிக்குறிப்பு: உங்கள் தேடலை ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது உரையாடலுக்கு மட்டும் என வரையறுக்க, ஒரு நபரின் பெயரை டைப் செய்து தொடங்கவும். பின்னர் “இவருடனான மெசேஜ்கள்” அல்லது “இதிலுள்ள மெசேஜ்கள்” என்பதைத் தட்டி, அதில் தோன்றும் பிற நிபந்தனைகளைத் தட்டலாம். இல்லையெனில், உங்கள் உரையாடலில் நீங்கள் கண்டுபிடிக்க விரும்பும் வார்த்தையைச் சேர்க்கலாம்.

    மெசேஜஸ் செயலியில் உள்ள தேடல் புலம். தேடல் புலத்தில் ஒரு நபரிடமிருந்து பெறப்பட்ட மெசேஜ்களுக்கு மட்டும் எனத் தேடலை வரையறுக்கும் ஒரு குறிச்சொல் உள்ளது. தேடல் புலத்தில் சேர்க்க வேண்டிய பிற குறிச்சொற்கள் (இணைப்பு, புகைப்படம், இருப்பிடம் மற்றும் ஆவணம்) விருப்பங்களாகக் காட்டப்படும்.
  4. தேடல் நிபந்தனைகளைச் சேர்த்துப் பயன்படுத்த, மற்றொரு தேடல் சொல் அல்லது ஃபில்டரைச் சேர்க்கவும்.

  5. தேடுக என்பதைத் தட்டி, முடிவுகளின் பட்டியலில் உள்ள மெசேஜைத் தட்டி, அதைப் படிக்கவும்.

உரையாடல்கள், புகைப்படங்கள், இருப்பிடங்கள், இணைப்புகள் போன்ற பரிந்துரைகளையும் தேடல் புலம் காட்டும். உரையாடலுக்கு விரைந்து செல்ல ஏதேனும் பரிந்துரையின் மீது தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.