இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உள்ள பங்குகள் செயலியில் வணிகச் செய்திகளைப் படித்தல் அல்லது கேட்டல்

“பங்குகள்” செயலியில், பங்குச்சந்தையை வழிநடத்தும் வணிகச் செய்திகளைப் படிக்கவும் கேட்கவும் முடியும். Apple News கிடைக்கும் நாடுகளில், Apple News எடிட்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டச் செய்திகளையும் Apple News+இன் செய்திகளையும் நீங்கள் பார்க்கலாம்.

Apple News+ குறித்து மேலும் அறிந்துகொள்ள, Apple News+க்குச் சந்தாசேருதல் என்ற இணைப்பைப் பார்க்கவும்.

குறிப்பு: Apple News மற்றும் Apple News+ அனைத்து நாடுகள் அல்லது வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை. Apple மீடியா சேவைகள் கிடைக்கும் தன்மை என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

செய்தியைப் படித்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள பங்குகள் செயலிக்குச் செல்லவும்.

  2. செய்திகளைப் பார்க்க “வணிகச் செய்திகள்” அல்லது “முக்கிய செய்திகள்” மீது மேலே ஸ்வைப் செய்யவும் அல்லது உங்கள் விருப்பப் பட்டியலில் உள்ள குறியீட்டைத் தட்டி தொடர்புடைய செய்திகளைத் தேடிப்பார்க்கவும். “எனது குறியீடுகள்” விருப்பப் பட்டியலில் குறியீடுகளை நிர்வகித்தல் என்ற இணைப்பைப் பார்க்கவும்.

  3. செய்தியைப் படிக்க அதைத் தட்டவும். ஒரு செய்தியைப் பார்க்க, உங்களுக்கு பின்வரும் விருப்பங்கள் உள்ளன:

    • “பங்குகள்” செயலியில் உள்ள உங்கள் செய்தி ஊட்டத்திற்குச் செல்ல: மேல் இடது மூலையில் உள்ள “பின்செல்” பட்டன் அல்லது “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

    • Apple Newsஇல் செய்தி வெளியீட்டாளரிடமிருந்து மேலும் செய்திகளைப் பார்க்க: திரையின் மேலே உள்ள வெளியீட்டாளர் லோகோவைத் தட்டவும்.

    • Apple Newsஇல் செய்தியைச் சேமிக்க: திரையின் மேலே உள்ள “புக்மார்க்” பட்டன்-ஐத் தட்டவும்.

      குறிப்பு: Apple Newsஇல் செய்திகளைச் சேமிக்க, உங்கள் Apple கணக்கில் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்து, அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > iCloud என்பதற்குச் சென்று, iCloudஇல் சேமிக்கப்பட்டவை என்பதற்கு அடுத்துள்ள “அனைத்தையும் காட்டு” என்பதைத் தட்டி “News” என்பதை ஆன் செய்யவும்.

    • எழுத்தின் அளவை மாற்ற: உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

      • “எழுத்தின் அளவு” பட்டன்-ஐத் தட்டி, செய்தியில் உள்ள எழுத்தின் அளவை மாற்ற சிறிய அல்லது பெரிய எழுத்தைத் தட்டவும்.

      • “மேலும் செயல்கள்” பட்டன்-ஐத் தட்டி, “எழுத்தின் அளவு” என்பதைத் தட்டிய பிறகு, செய்தியில் உள்ள எழுத்தின் அளவை மாற்ற சிறிய அல்லது பெரிய எழுத்தைத் தட்டவும்.

    • ஸ்டோரியைப் பகிர: “பகிர்” பட்டன்-ஐத் தட்டி, மெசேஜஸ் அல்லது Mail போன்ற பகிர்வு முறையைத் தேர்வுசெய்யவும்.

    Apple Newsஇல் இருந்து ஒரு செய்திக் கட்டுரை. திரையின் மேல் இடது மூலையில் “பங்குகள்” செயலிக்குத் திரும்புவதற்கான பின்செல் பட்டனும் “புக்மார்க்” பட்டனும் உள்ளன. மேல் வலது மூலையில் “எழுத்தின் அளவு” மற்றும் “மேலும் செயல்கள்” பட்டன்கள் உள்ளன.

    குறிப்பு: நீங்கள் Apple News+ சந்தாதாரராக இல்லாமல் இருந்து Apple News+ செய்தியைப் படிக்க விரும்பினால், “சந்தா சேர்” அல்லது “இலவச ட்ரையல்” பட்டனைத் தட்டி திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும். Apple News+ குறித்து மேலும் அறிந்துகொள்ள, Apple News+க்குச் சந்தாசேருதல் என்ற இணைப்பைப் பார்க்கவும்.

    Apple Newsஇல் நீங்கள் தடுத்துள்ள வெளியீட்டளரிடம் இருந்து வரும் செய்திகள் செய்தி ஊட்டத்தில் தோன்றாது. உங்களுக்காக மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகளைப் பாருங்கள் என்பதைப் பார்க்கவும்.

ஆடியோ செய்திகளைக் கோருதல்

சில செய்திக் கட்டுரைகள் “பங்குகள்” செயலியில் கேட்கக்கூடிய அல்லது பின்னர் News செயலியில் கேட்கக்கூடிய (எல்லா நாடுகளிலும் வட்டாரங்களிலும் கிடைக்காது) ஆடியோ பதிப்பைக் கொண்டிருக்கும்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள பங்குகள் செயலிக்குச் செல்லவும்.

  2. செய்தியின் ஆடியோ பதிப்பைக் கேட்க, “இப்போது பிளே செய்” என்பதைத் தட்டவும். அல்லது, செய்தியைப் படிக்க அதைத் தட்டி, செய்தியின் மேலே உள்ள “இப்போது பிளே செய்“ என்பதைத் தட்டவும்.

  3. செய்தியை இடைநிறுத்த அல்லது 15 விநாடிகளுக்குப் பின்னோக்கிச் செல்ல திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள மினி பிளேயரைப் பயன்படுத்தவும். பிளேயரை முழு திரையில் திறக்க, மினி பிளேயரைத் தட்டவும்.

  4. மினி பிளேயருக்குத் திரும்ப, முழு திரை பிளேயரைச் சிறிதாக்க கீழே ஸ்வைப் செய்யவும்.

  5. மினி பிளேயரை மூட, “மூடுக” பட்டன்-ஐத் தட்டவும்.

உங்கள் News வரிசையில் “பங்குகள்” செயலியிலிருந்து ஆடியோ செய்தியைச் சேர்த்தல்

நீங்கள் Apple News+க்கு சந்தா சேர்ந்திருந்தால், “பங்குகள்” செயலியில் இருந்து ஒரு ஆடியோ ஸ்டோரியை Newsஇல் உங்களின் “அடுத்து வருவது” வரிசையில் சேர்க்கலாம்.

  1. உங்கள் Apple கணக்கில் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்யவும்.

  2. அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > iCloud என்பதற்குச் சென்று, iCloudஇல் சேமிக்கப்பட்டவை என்பதற்கு அடுத்துள்ள “அனைத்தையும் காட்டு” என்பதைத் தட்டி “News” என்பதை ஆன் செய்யவும்.

  3. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள பங்குகள் செயலிக்குச் செல்லவும்.

  4. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • பங்குகள் செயலியின் செய்தி ஊட்டத்தில் இருந்து சேர்க்க: செய்தியின் மீது தட்டிப் பிடித்து, Newsஇல் “பிறகு பிளே செய்” என்பதைத் தட்டி, “அடுத்ததை பிளே செய்” அல்லது “முந்தயதை பிளே செய்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

    • செய்தியிலிருந்து சேர்க்க: செய்தியைத் திறந்து, செய்தியின் மேலே உள்ள “இப்போது பிளே செய்” என்பதைத் தொட்டுப் பிடிக்கவும். News இல் “பின்னர் பிளே செய்” என்பதைத் தட்டி, “அடுத்ததை பிளே செய்” அல்லது “முந்தையதை பிளே செய்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

குறிப்பு: Apple News மற்றும் Apple News+ அனைத்து நாடுகள் அல்லது வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை. Apple மீடியா சேவைகள் கிடைக்கும் தன்மை என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.