இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் “உதவிக்குறிப்புகள்” செயலியைப் பயன்படுத்துதல்

உங்கள் iPhoneஇல் இருந்து அதிகப் பலன்களைப் பெற உதவும் “உதவிக்குறிப்புகள்” செயலியில் உதவிக்குறிப்புகளின் தொகுப்புகளைப் பார்க்கவும். நீங்கள் அவ்வப்போது அறிவிப்புகளைப் பெறலாம் என்பதால் நீங்கள் காலப்போக்கில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருக்கலாம்.

தொகுப்பில் உள்ள உதவிக்குறிப்புகளைப் பார்க்க நீங்கள் தொகுப்பைத் தட்டலாம் என்பதைக் குறிக்கும் அம்புக்குறிகளுடன் கூடிய, உதவிக்குறிப்புகளின் தொகுப்பைக் காட்டும் திரை.

உதவிக்குறிப்புகளைப் பெறுதல்

“உதவிக்குறிப்புகள்” செயலியில், உங்கள் பூட்டுத் திரையை எப்படிப் பிரத்தியேகப்படுத்துவது, பின்னர் அனுப்புவதற்கான மெசேஜை எப்படித் திட்டமிடுவது, உங்கள் AirPods மூலம் அழைப்புகளை எப்படி ஒலிமுடக்குவது போன்ற பலவற்றை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். புதிய உதவிக்குறிப்புகள் அவ்வப்போதே சேர்க்கப்படுகின்றன.

கற்றுக்கொள்ள, உதவிக்குறிப்புகள் செயலிக்குச் சென்று, தொகுப்பைத் தட்டி, உதவிக்குறிப்பைத் தட்டவும்.

புதிய உதவிக்குறிப்புகள் வரும்போது அறிவிப்பைப் பெறுதல்

  1. அமைப்புகள்  > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.

  2. “அறிவிப்பு ஸ்டைல்” என்பதற்குக் கீழே “உதவிக்குறிப்புகள்” செயலியைத் தட்டி, “அறிவிப்புகளை அனுமதி” என்பதை ஆன் செய்யவும்.

  3. உதவிக்குறிப்பு அறிவிப்புகளின் இருப்பிடம் மற்றும் ஸ்டைல், அவை எப்போது காட்டப்பட வேண்டும் மற்றும் பலவற்றுக்கான விருப்பங்களைத் தேர்வுசெய்யவும்.

உதவிக்குறிப்புகளைச் சேமித்தல்

உங்களின் தனிப்பட்ட “சேமிக்கப்பட்ட உதவிக்குறிப்புகள் தொகுப்பில்” உதவிக்குறிப்புகளைச் சேர்க்க முடியும் என்பதால், அவற்றை நீங்கள் பின்னர் விரைவாகக் கண்டறியலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உதவிக்குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • உதவிக்குறிப்பைச் சேர்த்தல்: “சேமி” பட்டன்-ஐத் தட்டவும்.

    • சேமிக்கப்பட்ட உதவிக்குறிப்புகளைப் பார்த்தல்: “உதவிக்குறிப்புகள் தொகுப்பில் இருந்து பின்செல்” பட்டன்-ஐ இருமுறை தட்டி, “சேமிக்கப்பட்ட உதவிக்குறிப்புகள்” என்பதைத் தட்டவும்.

    • சேமிக்கப்பட்ட உதவிக்குறிப்புகளில் இருந்து ஒன்றை அகற்றுதல்: “சேமிக்கப்பட்ட உதவிக்குறிப்புகளில் இருந்து அகற்று” பட்டன்-ஐத் தட்டவும்.

உதவிக்குறிப்பைப் பகிர்தல்

நீங்கள் ஒரு உதவிக்குறிப்பை மெசேஜஸ் மற்றும் Mail செயலி மூலம் நண்பருடன் பகிர்ந்துகொள்ளலாம் அல்லது AirDrop மூலம் அருகிலுள்ளவருக்கு அனுப்பலாம். குறிப்புகள், Freeform போர்டுகள் போன்ற ஆவணங்களிலும் உதவிக்குறிப்புகளைச் சேர்க்கலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உதவிக்குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “பகிர்” பட்டன்-ஐத் தட்டி, AirDrop, மெசேஜஸ் அல்லது Mail போன்ற பகிர்வு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

உங்களின் பிற Apple சாதனங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுதல்

Apple Watch, AirPods, HomePod போன்ற பிற Apple சாதனங்கள் உங்களிடம் இருந்தால், உதவிக்குறிப்புகள் செயலியில் அவற்றைப் பற்றி படிக்கலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உதவிக்குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. உதவிக்குறிப்புகள் செயலியின் கீழ்ப்பகுதிக்கு ஸ்க்ரால் செய்து, பின்னர் நீங்கள் உலாவ விரும்பும் பயனர் வழிகாட்டியைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.