இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் “Mail தனியுரிமைப் பாதுகாப்பு” அம்சத்தைப் பயன்படுத்துதல்

Mail செயலியில் , “Mail தனியுரிமைப் பாதுகாப்பு” அம்சத்தை ஆன் செய்வதன் மூலம் அனுப்புநர்கள் உங்கள் Mail செயல்பாட்டைப் பற்றி தெரிந்துகொள்வதைக் கடினமாக்கலாம். “Mail தனியுரிமைப் பாதுகாப்பு” அம்சம் உங்கள் IP முகவரியை மறைக்கும், எனவே அனுப்புநர்களால் அதை உங்கள் மற்ற ஆன்லைன் செயல்பாட்டுடன் இணைக்கவோ அல்லது உங்கள் சரியான இருப்பிடத்தைத் தீர்மானிக்கவோ முடியாது. அவர்கள் உங்களுக்கு அனுப்பிய மெசேஜைத் திறந்து பார்த்தீர்களா என்பதை அனுப்புநர்கள் தெரிந்துகொள்ளாதபடி இது தடுக்கும்.

  1. அமைப்புகள்  > செயலிகள் > Mail என்பதற்குச் செல்லவும்.

  2. “தனியுரிமைப் பாதுகாப்பு” என்பதைத் தட்டி, “Mail செயல்பாட்டைப் பாதுகாத்தல்” அம்சத்தை ஆன் செய்யவும்.

    குறிப்பு: iCloud+இல் சந்தாசேரும்போது, உங்களது தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கிற்கு முன்னனுப்பப்படும் தனித்துவமான, தற்காலிக மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்குவதற்கும் “எனது மின்னஞ்சலை மறை” அம்சத்தைப் பயன்படுத்தலாம். எனவே இணையத்தில் படிவங்களை நிரப்பும்போதோ செய்திமடல்களுக்கு பதிவுசெய்யும்போதோ உங்களது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியைப் பகிர வேண்டியதில்லை. எனது மின்னஞ்சலை மறைத்தல் என்பதைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.