இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள மேப்ஸ் செயலியில் போக்குவரத்து நிலவரத்தைப் பார்த்தல் மற்றும் போக்குவரத்து சம்பவங்கள் குறித்துத் தெரிவித்தல்

போக்குவரத்து நிலவரத்தைப் பார்க்கலாம். விபத்துகள், அபாயங்கள், வேகச் சோதனைகள் (அனுமதிக்கப்படும் இடங்கள்) குறித்துத் தெரிவிக்கலாம். அவை சரிசெய்யப்பட்ட பிறகு, அது குறித்தும் நீங்கள் தெரிவிக்கலாம்.

நிகழ்வு குறித்துப் பெறப்படும் அறிக்கைகளை Apple மதிப்பீடு செய்யும். அந்த அறிக்கைகள் அதிக நம்பகத்தன்மையுடன் இருந்தால், “சம்பவ மார்க்கர்கள்” (அபாயங்கள் ஏற்பட்டிருந்தால் மற்றும் விபத்துகள் ஏற்பட்டிருந்தால் ) மேப்ஸ் செயலியின் பிற பயனர்களுக்கும் காட்டப்படும். ஒருவேளை சரிசெய்யப்பட்டிருந்தால் அதுகுறித்தும் காட்டப்படும்.

வேகச் சோதனைகள் அம்சம் ஆதரிக்கப்படும் இடங்களில், அவற்றுடன் சம்பவ மார்க்கர்கள் காட்டப்படாது. அதற்குப் பதிலாக, படிப்படியான டிரைவிங் வழிகளை நீங்கள் பின்தொடரும்போது வேகச் சோதனைகள் குறித்த அறிவிப்புகள் காட்டப்படும்.

குறிப்பு: சில அம்சங்கள் சில நாடுகளிலும் வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை. iOS மற்றும் iPadOS அம்சங்களின் கிடைக்கும்தன்மை குறித்த இணையப்பக்கத்தைப் பார்க்கவும்.

போக்குவரத்து நிலவரங்களைத் தெரிந்துகொள்ளுதல்

  1. உங்கள் iPhoneஇல் மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. மேப் காட்டப்படும்போது, மேல் வலதுபுறத்தில் உள்ள பட்டனைத் தட்டி, “டிரைவிங்” அல்லது “சாட்டிலைட்” என்பதைத் தேர்வுசெய்த பிறகு “மூடுக” பட்டன்-ஐத் தட்டவும்.

    வழக்கத்தைவிட மெதுவாகச் செல்லும் போக்குவரத்து மஞ்சள் நிறத்தில் காட்டப்படும், அவ்வப்போது நின்று செல்லும் போக்குவரத்து சிவப்பு நிறத்தில் காட்டப்படும்.

  3. நிகழ்வு அறிக்கையைப் பார்க்க, நிகழ்வு குறித்த மார்க்கரைத் தட்டவும்.

    பின்வருபவை மார்க்கர்கள் மூலம் குறிக்கப்பட்டிருக்கும்:

    • அபாயங்கள்

    • சாலை மூடல்கள்

    • சாலைக் கட்டமைப்புப் பணி

    • விபத்துகள்

போக்குவரத்து நிகழ்வுகள் குறித்துத் தெரிவித்தல்

Siri: இதுபோன்று சொல்லிப் பாருங்கள்:

  • “Report an accident”

  • “There’s something on the road”

  • “There’s a speed check here”

Siriஐ எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிக.

இல்லையெனில், Siriஐப் பயன்படுத்தாமல் இதைச் செய்யலாம்:

  1. உங்கள் iPhoneஇல் மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யலாம்:

    • படிப்படியான டிரைவிங் வழிகளைப் பின்தொடரும்போது: திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள வழித்தட கார்டைத் தட்டி, “நிகழ்வு குறித்துப் புகாரளியுங்கள்” என்பதைத் தட்டிய பிறகு, ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

    • வழிகளைப் பின்பற்றாதபோது: தேடல் புலத்திற்கு அடுத்துள்ள உங்கள் படம் அல்லது முதலெழுத்துகளைத் தட்டிய பிறகு “அறிக்கைகள்” என்பதைத் தட்டவும். “புதிய சிக்கல் குறித்துப் புகாரளியுங்கள்” என்பதைத் தட்டி, “நிகழ்வு குறித்துப் புகாரளியுங்கள்” என்பதைத் தட்டிய பிறகு, ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

      உங்கள் படம், முதலெழுத்துகள் ஆகிய இரண்டுமே காட்டப்படவில்லை என்றால், தேடல் புலத்திற்கு அடுத்துள்ள “ரத்துசெய்” என்பதைத் தட்டவும் அல்லது தேடல் புலத்தைத் தட்டிய பிறகு “ரத்துசெய்” என்பதைத் தட்டவும்.

விபத்து அல்லது அபாயத்தின் நிலை குறித்துத் தெரிவித்தல்

குறிப்பிட்ட சில நாடுகள் அல்லது வட்டாரங்களில், அத்தகைய நிகழ்வுகளுக்கு அருகில் இருக்கும்போது, அவற்றின் நிலை குறித்து நீங்கள் தெரிவிக்கலாம்.

Siri: இது போன்ற ஒன்றைச் சொல்லுங்கள்: “The hazard is gone” அல்லது “Clear the accident.” Siriஐ எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிக.

இல்லையெனில், Siriஐப் பயன்படுத்தாமல் இதைச் செய்யலாம்:

  1. உங்கள் iPhoneஇல் மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நிகழ்வு குறித்த மார்க்கரைத் தட்டவும்.

  3. “சரியாகிவிட்டது” அல்லது “இன்னும் சரியாகவில்லை” என்பதைத் தட்டவும்.

    (வேகச் சோதனைகளின் அறிக்கைகளை உங்களால் நீக்க முடியாது.)

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.