iPhoneஇல் FaceTime அழைப்பில் உங்கள் தோற்றத்தை மாற்றுதல்

FaceTime  செயலியில் உள்ள வீடியோ அழைப்புகளில், உங்களுக்குப் பிடித்த Memojiஆக நீங்கள் மாறலாம் (Face ID உடன் கூடிய iPhoneஇல்). ஆதரிக்கப்படும் மாடல்களில், உங்கள் தோற்றத்தை மாற்ற உள்ளமைந்த ஃபில்டரைப் பயன்படுத்தலாம், மேலும் ஸ்டிக்கர்கள், லேபிள்கள், வடிவங்களைச் சேர்க்கலாம்.

Memojiஆக மாறுதல்

Face ID உடன் கூடிய iPhoneஇல் உள்ள மெசேஜஸில், உங்கள் FaceTime அழைப்புகளில் பயன்படுத்த Memoji கதாபாத்திரத்தை உருவாக்கலாம். iPhone உங்கள் அசைவுகள், முகபாவனைகள், குரல் ஆகியவற்றைப் பதிவுசெய்து அவற்றை உங்கள் கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தும். (நீங்கள் நாவை வெளியே நீட்டியபடி காட்டினாலும் உங்கள் கதாபாத்திரம் அப்படியே உங்களைப் பிரதிபலிக்கும்!)

iPhoneஇல் உள்ள மெசேஜ்களில் ஸ்டிக்கர்களை அனுப்பதல் என்பதைப் பார்க்கவும்.

  1. FaceTime அழைப்பின்போது, “எஃபெக்ட்கள்” பட்டன் மீது தட்டவும். (நீங்கள் “எஃபெக்ட்கள்” பட்டன் என்பதைப் பார்க்கவில்லை என்றால், திரை மீது தட்டவும்.)

  2. Memoji பட்டன் மீது தட்டி, ஒரு Memojiஐத் தேர்வுசெய்யவும் (கீழே உள்ள கதாபாத்திரங்கள் மீது ஸ்வைப் செய்து, ஒன்றன் மீது தட்டவும்).

    மற்ற அழைப்பாளர் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள், ஆனால் உங்கள் Memoji பேசுவதைப் பார்க்கிறார்.

உங்கள் தோற்றத்தை மாற்ற ஃபில்டரைப் பயன்படுத்துதல்

  1. FaceTime வீடியோ அழைப்பின்போது உங்கள் டைல் மீது தட்டி, “எஃபெக்ட்கள்” பட்டன் மீது தட்டவும் (ஆதரிக்கப்படும் மாடல்களில்).

  2. ஃபில்டர்களைத் திறக்க “ஃபில்டர்கள்” பட்டன் மீது தட்டவும்.

  3. கீழே உள்ள ஃபில்டரைத் தட்டி உங்கள் தோற்றத்தைத் தேர்வுசெய்யவும் (அவற்றை முன்னோட்டமிட இடது அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும்).

உரை லேபிளைச் சேர்த்தல்

  1. அழைப்பின்போது திரை மீது தட்டி, “எஃபெக்ட்கள்” பட்டன் மீது தட்டவும்.

  2. உரை பட்டன் மீது தட்டி, உரை லேபிளைத் தட்டவும்.

    மேலும் லேபிள் விருப்பங்களைப் பார்க்க, உரை சாளரத்தின் மேலே இருந்து மேல் நோக்கி ஸ்வைப் செய்யவும்.

  3. லேபிளைத் தேர்ந்தெடுக்கும்போது, லேபிளில் தோன்ற வேண்டிய வார்த்தையை டைப் செய்து அதற்கு வெளியே தட்டவும்.

  4. லேபிளை நீங்கள் வைக்க விரும்பும் இடத்திற்கு இழுக்கவும்.

    லேபிளை நீக்க, அதைத் தட்டி, “திருத்தப்பட்டது” பட்டன் மீது தட்டவும்.

ஸ்டிக்கர்களைச் சேர்த்தல்

  1. அழைப்பின்போது உங்கள் டைல் மீது தட்டி, “எஃபெக்ட்கள்” பட்டன் மீது தட்டி, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • Memoji ஸ்டிக்கரைச் சேர்க்க “Memoji ஸ்டிக்கர்கள்” பட்டன் மீது தட்டவும் அல்லது இமோஜி ஸ்டிக்கரைச் சேர்க்க “Memoji ஸ்டிக்கர்கள்” பட்டன் மீது தட்டவும்.

    • உரை பட்டன் மீது தட்டி, மேலே ஸ்வைப் செய்து “இமோஜி” பட்டன் மீது தட்டவும்.

  2. ஸ்டிக்கர் மீது தட்டி அதை அழைப்பில் சேர்க்கவும்.

    மேலும் விருப்பங்களைப் பார்க்க, இடதுபுறமாக அல்லது மேலே ஸ்வைப் செய்யவும்.

  3. ஸ்டிக்கரை நீங்கள் விரும்பும் இடத்தில் வைக்க அதை இழுத்துச் செல்லவும்.

    ஸ்டிக்கரை நீக்க, அதைத் தட்டி, “திருத்தப்பட்டது” பட்டன் மீது தட்டவும்.

வடிவங்களைச் சேர்த்தல்

  1. அழைப்பின்போது உங்கள் டைல் மீது தட்டி, “எஃபெக்ட்கள்” பட்டன் மீது தட்டவும்.

  2. வடிவங்கள் பட்டன் என்பதைத் தட்டி, அழைப்பில் சேர்ப்பதற்கான வடிவம் மீது தட்டவும்.

    மேலும் விருப்பங்களைப் பார்க்க, வடிவங்கள் சாளரத்தின் மேலே இருந்து மேல் நோக்கி ஸ்வைப் செய்யவும்.

  3. வடிவத்தை நீங்கள் வைக்க விரும்பும் இடத்திற்கு இழுக்கவும்.

    வடிவத்தை நீக்க, அதைத் தட்டி, “திருத்தப்பட்டது” பட்டன் மீது தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.