இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள பேச்சுக்கான அணுகல்தன்மை அம்சங்கள்

நீங்கள் பேச முடியாதவராக இருந்தாலோ பேச்சுத் திறன் இழப்பு ஏற்படும் அபாயத்தில் இருந்தாலோ பேச்சு குறைபாடு உள்ளவராக இருந்தாலோ உங்களுக்குச் சிறந்த முறையில் தொடர்புகொள்வதற்கான உள்ளமைக்கப்பட்ட கருவிகளை iPhone கொண்டுள்ளது. நீங்கள் டைப் செய்வதை வாசித்துக் காட்டும்படிச் செய்யலாம், உங்களைப் போலவே பேசக்கூடிய செயற்கைக் குரலை உருவாக்கலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.

பேச்சுக்கான அணுகல்தன்மை அம்சங்களைக் கண்டறிய, அமைப்புகள் > அணுகல்தன்மை என்பதற்குச் சென்று “பேச்சு”என்ற பிரிவுக்கு ஸ்க்ரால் செய்யவும்.

பேச டைப் செய்தல்

நேரலைப் பேச்சு

உங்களால் பேச முடியாவிட்டால் அல்லது பேச்சுத்திறன் குறைபாடு இருந்தால், நீங்கள் சொல்ல விரும்புவதை டைப் செய்து iPhoneஇல் அதை வாசிக்கச் செய்யலாம்.

நேரலைப் பேச்சைப் பயன்படுத்தி பேசுவதற்கு டைப் செய்தல்

என் குரல்

நீங்கள் பேசும் திறனை இழக்கும் அபாயத்தில் இருந்தால், உங்களைப் போலவே பேசக்கூடிய செயற்கைக் குரலை உருவாக்கலாம்.

உங்களின் “என் குரலைப்” பதிவுசெய்தல்

Siriஇல் டைப் செய்தல்

உங்கள் Siri கோரிக்கைகளைக் கூறுவதற்குப் பதிலாக அவற்றை டைப் செய்யலாம்.

Siri உடன் பேசுவதற்குப் பதிலாகத் டைப் செய்தல்

உங்கள் குரலைப் பயன்படுத்தி iPhoneஐக் கட்டுப்படுத்துங்கள்

குரல் கட்டளைகளைப் பயன்படுத்துதல்

கட்டளைகளைச் சொல்லி, திரை முழுவதும் நகர்தல், அதில் உள்ளவற்றைப் பயன்படுத்துதல், வார்த்தையை டிக்டேட் செய்தல் மற்றும் திருத்துதல், மற்றும் மேலும் பலவற்றைச் செய்யலாம்.

iPhoneஐப் பயன்படுத்த குரல் கட்டுப்பாடு கட்டளைகளைப் பயன்படுத்துதல்

எளிமையான ஒலிகளைப் பயன்படுத்துதல்

குரல் உள்ள மற்றும் குரல் இல்லாத ஒலிகளை (“S” போன்ற ஒலியோ வாயால் பாப் என்று எழுப்பப்படும் ஒலியோ) பயன்படுத்தி, திரை முழுவதும் நகரலாம், அதில் உள்ளவற்றுடன் தொடர்புகொள்ளலாம்.

ஸ்விட்ச் கட்டுப்பாடு மூலம் ஒலிச் செயல்பாடுகளைப் பயன்படுத்துதல்

குரல்வழிச் சுருக்கவழிகள்

நீங்கள் தேர்ந்தெடுக்கும் சொல் அல்லது வேறொரு ஒலியை உச்சரிக்கும்போது iPhone ஒரு செயலைச் செய்யும்படி அமைத்தல்

குரல்வழிச் சுருக்கவழிகளைப் பயன்படுத்துதல்

வித்தியாசமான பேச்சை Siri கவனிக்கும்படிச் செய்தல்

பிறந்த பிறகு பேச்சுத்திறனில் பாதிப்பு ஏற்பட்டாலோ காலப்போக்கில் பேச்சுத்திறனில் குறைபாடு ஏற்பட்டாலோ, வழக்கத்திற்கு மாறாக உள்ள பல்வேறு பேச்சு வடிவங்களைக் கண்டறிய Siriஐப் பயன்படுத்தலாம்.

Siri அணுகல்தன்மை அமைப்புகளை மாற்றுதல்

நீங்கள் பேசி முடிக்கும் வரை Siri நீண்ட நேரம் காத்திருக்கும்படிச் செய்யலாம் அல்லது உங்கள் குரலைப் பயன்படுத்தி வார்த்தையை உள்ளிட டிக்டேஷன் அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

உதவிக்குறிப்பு: ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் அல்லது கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் நீங்கள் அடிக்கடிப் பயன்படுத்தும் அணுகல்தன்மை அம்சங்களையும் அமைப்புகளையும் கட்டுப்படுத்தலாம். அணுகல்தன்மைச் சுருக்கவழி மூலம் அம்சங்களை விரைவாகத் திறத்தல் என்ற பிரிவைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.