இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் புகைப்பட ஆல்பங்களை உருவாக்கி அவற்றில் பணிபுரிதல்

ஃபோட்டோஸ் செயலியில் ஆல்பங்களைப் பயன்படுத்தி உங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஒழுங்கமைத்துப் பார்க்கலாம். நீங்கள் ஆல்பங்களை மறுபெயரிடலாம், மறுவரிசைப்படுத்தலாம், நீக்கலாம். அத்துடன் பல ஆல்பங்களைச் சேமிக்கும் வகையிலான கோப்புறைகளையும் உருவாக்கலாம்.

ஃபோட்டோஸ் செயலியில் ஆல்பங்கள் திறந்துள்ளன. பிரத்தியேக தாவல் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்குக் கீழே ஆல்பங்களின் பட்டியல் உள்ளது.

நீங்கள் iCloud புகைப்படங்களைப் பயன்படுத்தினால், ஆல்பங்கள் iCloudஇல் சேமிக்கப்படும். நீங்கள் அதே Apple கணக்கில் உள்நுழைந்துள்ள சாதனங்களில் அவை புதுப்பிக்கப்பட்டு அணுகக்கூடியதாக உள்ளன. உங்கள் புகைப்படங்களை iCloud மூலம் பேக்-அப் செய்து ஒத்திசைத்தல் என்பதைப் பார்க்கவும்.

புதிய ஆல்பத்தை உருவாக்குதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. ஆல்பங்களைத் தட்டி, “உருவாக்கு” என்பதைத் தட்டவும்.

  3. புதிய ஆல்பம் என்பதைத் தட்டி, ஆல்பத்திற்கு பெயரிடவும், புகைப்படங்களைச் சேர்க்கவும், ஆல்பத்தைக் குறிப்பிட்டுக் காட்டும் முக்கியப் புகைப்படத்தைத் தேர்வுசெய்யவும்.

  4. “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

ஒரு ஆல்பத்தை உருவாக்கி அதைப் பிறருடன் சேர்ந்து பார்க்க, பகிர்ந்த ஆல்பங்களை உருவாக்குதல் என்பதைப் பார்க்கவும்.

ஆல்பங்களை மறுவரிசைப்படுத்துதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “ஆல்பங்கள்” என்பதைத் தட்டி, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, வரிசைப்படுத்துதல் விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

    “பிரத்தியேக ஆர்டரின்படி வகைப்படுத்து” என்பதைத் தேர்வுசெய்தால், நீங்கள் விரும்பும் வரிசையில் ஆல்பங்களை இழுக்கலாம்.

  3. ஆல்பங்களை மட்டும் அல்லது கோப்புறைகளை மட்டும் பார்க்க, “ஃபில்டர்” என்பதைத் தட்டி ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

பட்டியலின் வடிவமைப்பை மாற்ற, “பட்டியல் காட்சி” அல்லது “முக்கியப் புகைப்படம்” என்பதைத் தட்டவும்.

ஆல்பத்திற்கு மறுபெயரிடுதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “ஆல்பங்கள்” என்பதைத் தட்டி, நீங்கள் மறுபெயரிட விரும்பும் ஆல்பத்தைத் தட்டவும்.

  3. “மேலும்” பட்டன்-ஐத் தட்டிய பிறகு “கம்போஸ் செய்” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. உரை புலத்தில் புதிய பெயரை உள்ளிட்ட பிறகு, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

ஆல்பத்தில் உள்ள அனைத்துப் புகைப்படங்களையும் பகிர்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “ஆல்பங்கள்” என்பதைத் தட்டி, நீங்கள் பகிர விரும்பும் ஆல்பத்தைத் தட்டவும்.

  3. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, "பகிர்" என்பதைத் தட்டி, AirDrop, மெசேஜஸ் அல்லது Mail போன்ற பகிர்தல் விருப்பங்களில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்.

ஆல்பத்தை நீக்குதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “ஆல்பங்கள்” என்பதைத் தட்டி, நீங்கள் நீக்க விரும்பும் ஆல்பத்தைத் தொட்டுப் பிடிக்கவும்.

  3. “ஆல்பத்தை நீக்கு” என்பதைத் தட்டவும்.

குறிப்பு: நீங்கள் ஒரு ஆல்பத்தை நீக்கும்போது, அதில் சேமிக்கப்பட்டுள்ள புகைப்படங்களும் வீடியோக்களும் உங்கள் புகைப்பட லைப்ரரியிலும், அவை சேர்க்கப்பட்டுள்ள வேறு ஆல்பங்களிலும் தொடர்ந்து இருக்கும்.

கோப்புறைகளில் ஆல்பங்களை ஒழுங்கமைத்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. ஆல்பங்களைத் தட்டி, “உருவாக்கு” என்பதைத் தட்டி, புதிய கோப்புறையைத் தேர்வுசெய்யவும்.

  3. கோப்புறைக்குப் பெயரிட்ட பிறகு,“சேர்” பட்டன்-ஐத் தட்டவும்.

ஒரு கோப்புறையில் இருந்து ஒரு ஆல்பத்தை அகற்ற, அந்தக் கோப்புறையைத் தட்டி அதைத் திறக்கவும், பிறகு ஆல்பத்தைத் தொட்டுப் பிடித்து, “[பெயர்] என்பதில் இருந்து ஆல்பத்தை நகர்த்து” என்பதைத் தட்டவும்

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.