இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலியில் உங்கள் தரவைப் பகிர்தல்

உடல்நலம் செயலியில் சேமிக்கப்பட்டுள்ள “உடல்நல எச்சரிக்கைகள்” மற்றும் “டிரெண்டுகள்” போன்ற உடல்நலத் தரவுகளை உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உங்களைப் பராமரிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

அன்புக்குரியவருடன் உடல்நலத் தரவுகளைப் பகிர்தல்

அதிக இதயத்துடிப்பு மற்றும் சீரற்ற இதயத்துடிப்பு குறித்த அறிவிப்புகள் உட்பட நீங்கள் பெறும் உங்கள் உடல்நல அறிவிப்புகளை, நீங்கள் உடல்நலத் தரவுகளைப் பகிரும் நபர்களும் பார்க்க முடியும். செயல்பாட்டில் கடுமையான சரிவு போன்ற குறிப்பிடத்தக்க நிலவரங்களுக்கான அறிவிப்புகளையும் நீங்கள் பகிரலாம்.

குறிப்பு: உடல்நலத் தரவுகளைப் பிறருடன் பகிர, அவர்களை உங்கள் தொடர்புகளில் சேர்க்க வேண்டும்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள பகிர்தலைத் தட்டவும்.

  3. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • பகிர்தலை முதன்முறை அமைக்க: “பிறருடன் பகிர்” என்பதைத் தட்டவும்.

    • கூடுதல் தொடர்புடன் பகிர: “மற்றொருவரைச் சேர்” என்பதைத் தட்டி, “அடுத்து” என்பதைத் தட்டவும்.

  4. “தொடர்புகள்” பட்டியலில் உள்ளவர்களைக் கண்டறியத் தேடல் புலத்தைப் பயன்படுத்தி, அவர்களைத் தேர்ந்தெடுக்க, அவர்களின் தொடர்புத் தகவலைத் தட்டவும்.

  5. “பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகளைக் காட்டு” அல்லது “நேரடியாக அமை” என்பதைத் தட்டி, பகிர வேண்டிய தலைப்புகளைத் தேர்வுசெய்யவும்.

  6. திரையில் உள்ள அனைத்துத் தலைப்புகளையும் பார்க்க, கீழே ஸ்க்ரால் செய்து, அடுத்தத் திரையைப் பார்க்க “அடுத்து” என்பதைத் தட்டவும்.

  7. “பகிர்” என்பதைத் தட்டி, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

உங்கள் அழைப்பு ஏற்கப்படும்போது நீங்கள் ஒரு அறிவிப்பைப் பெறுவீர்கள்.

உடல்நலத் தரவுகளை உங்கள் மருத்துவருடன் பகிர்தல்

இதயத்துடிப்பு, உடற்பயிற்சி செய்த நிமிடங்கள், உறங்கிய நேரம், ஆய்வக முடிவுகள், இதய நல அறிவிப்புகள் போன்ற உடல்நலத் தரவுகளை உங்கள் மருத்துவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். உடல்நலப் பதிவுச் சிஸ்டத்தில் உள்ள டேஷ்போர்டில் மருத்துவர்கள் உடல்நலத் தரவைப் பார்க்கிறார்கள் (U.S.இல் மட்டும். வழங்குநருடன் உடல்நலச் செயலியின் தரவைப் பகிர்வதை ஆதரிக்கும் சிஸ்டங்களில் மட்டும்).

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள பகிர்தலைத் தட்டவும்.

  3. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • பகிர்தலை முதன்முறை அமைக்க: “உங்கள் மருத்துவருடன் பகிருங்கள்” என்பதைத் தட்டவும்.

    • கூடுதல் வழங்குநருடன் பகிர: “வேறொரு மருத்துவருடன் பகிர்” என்பதைத் தட்டவும்.

  4. “அடுத்து” என்பதைத் தட்டி, உங்கள் வழங்குநரைக் கண்டறிய, பரிந்துரைக்கப்பட்ட வழங்குநர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது “தேடுக” என்பதைப் பயன்படுத்தவும்.

  5. “கணக்குடன் இணை” என்பது தோன்றினால், அதைத் தட்டி, நோயாளி இணைய போர்ட்டலில் அந்த கணக்கிற்கு நீங்கள் பயன்படுத்தும் பயனர்பெயர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு, திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

    உங்கள் கணக்குடன் இணைப்பதால், உங்கள் உடல்நலத் தரவைப் பகிர்வதோடு மட்டுமல்லாமல், அந்தக் கணக்கிற்கான உங்கள் உடல்நலப் பதிவுகளும் உடல்நலம் செயலியில் பதிவிறக்கப்படும்.

  6. உங்கள் மருத்துவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய தலைப்புகளைத் தேர்வுசெய்யவும்.

  7. திரையில் உள்ள அனைத்துத் தலைப்புகளையும் பார்க்க, கீழே ஸ்க்ரால் செய்து, அடுத்தத் திரையைப் பார்க்க “அடுத்து” என்பதைத் தட்டவும்.

  8. “பகிர்” என்பதைத் தட்டி, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

நீங்கள் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் தரவைச் சரிபார்த்தல் அல்லது மாற்றுதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள பகிர்தலைத் தட்டவும்.

  3. ஒரு நபர் அல்லது மருத்துவச் சேவை வழங்குநரின் பெயரைத் தட்டவும்.

  4. கீழே ஸ்க்ரால் செய்த பிறகு, “பகிரப்பட்ட தரவைக் காட்டு” என்பதைத் தட்டவும்.

  5. ஏதேனும் மாற்றங்களைச் செய்து, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

தொடர்பு அல்லது வழங்குநருடன் தரவைப் பகிர்வதை நிறுத்துதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள பகிர்தலைத் தட்டவும்.

  3. ஒரு நபர் அல்லது மருத்துவச் சேவை வழங்குநரின் பெயரைத் தட்டவும்.

  4. “பகிர்வதை நிறுத்து” அல்லது “கணக்கை அகற்று” என்பதைத் தட்டவும்.

குறிப்பு: நீங்கள் ஒருவருடன் தரவைப் பகிரத் தொடங்கினால், தொடர்புகளிலிருந்து அவற்றை நீக்குவது மட்டுமே தகவல் பகிரப்படுவதைத் தடுக்காது.

செயலிகள் மற்றும் சாதனங்களுடன் உடல்நலம் மற்றும் ஃபிட்னஸ் தரவுகளைப் பகிர்தல்

உடல்நலம் மற்றும் ஃபிட்னஸ்த் தரவுகளை உடல்நலம் செயலியுடன் பகிர்ந்து கொள்ள பிற செயலிகளுக்கு நீங்கள் அனுமதி வழங்கலாம். உதாரணமாக, நீங்கள் “உடற்பயிற்சி” செயலியை நிறுவினால், அதன் உடற்பயிற்சித் தரவுகள் “உடல்நலம்” செயலியில் காட்டப்படும். பிற சாதனங்கள் மற்றும் செயலிகளால் பகிரப்படும் உங்கள் இதயத்துடிப்பு மற்றும் எடை போன்ற தரவுகளை உடற்பயிற்சி செயலியால் பெறவும் பயன்படுத்தவும் முடியும். செயலியை அமைத்தபோது “உடல்நலம்” செயலியுடன் தரவைப் பகிர ஒரு செயலிக்கு அனுமதி வழங்கவில்லை எனில், பிறகு அனுமதி வழங்கலாம். ஒரு செயலியிலிருந்து அனுமதியை அகற்றலாம்.

உங்கள் பதிவுகளை, மருத்துவ சேவை வழங்குநர்களிடமிருந்து பகிர்ந்து கொள்ள, பிற செயலிகளுடன் உங்கள் உடல்நலப் பதிவுகளைப் பகிர்தல் என்பதைப் பார்க்கவும்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. மேலே வலதுபக்கத்தில் உள்ள உங்கள் படம் அல்லது முதலெழுத்துக்களைத் தட்டவும்.

    உங்கள் படம் அல்லது முதலெழுத்துக்கள் தோன்றவில்லை எனில், திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “சுருக்கவிவரம்” அல்லது “உலாவுக” என்பதைத் தட்டி, திரையின் மேல்பகுதிக்கு ஸ்க்ரால் செய்யவும்.

  3. “தனியுரிமை” என்பதற்குக் கீழே, “செயலிகள் மற்றும் சேவைகள்” அல்லது “சாதனங்கள்” என்பதைத் தட்டவும்.

    திரை, உடல்நலத் தரவுகளை அணுகக் கோரிய ஐட்டங்களைப் பட்டியலிடும்.

  4. ஒரு ஐட்டத்திற்கான அணுகலை மாற்ற, அதைத் தட்டி, உடல்நலம் செயலியில் இருந்து தரவைப் படிக்க அல்லது எழுதுவதற்கான அனுமதியை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

உங்கள் உடல்நலம் மற்றும் ஃபிட்னஸ் தரவுகளை XML வடிவத்தில் பகிர்தல்

உடல்நலம் செயலியில் இருந்து உங்கள் உடல்நலம் மற்றும் ஃபிட்னஸ் தரவுகள் அனைத்தையும் செயலிகளுக்கு இடையே தரவைப் பகிர்வதற்கான பொதுவான வடிவமான XML வடிவத்தில் எக்ஸ்போர்ட் செய்யலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. மேலே வலதுபக்கத்தில் உள்ள உங்கள் படம் அல்லது முதலெழுத்துக்களைத் தட்டவும்.

    உங்கள் படம் அல்லது முதலெழுத்துக்கள் தோன்றவில்லை எனில், திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “சுருக்கவிவரம்” அல்லது “உலாவுக” என்பதைத் தட்டி, திரையின் மேல்பகுதிக்கு ஸ்க்ரால் செய்யவும்.

  3. “அனைத்து உடல்நலத் தரவுகளையும் எக்ஸ்போர்ட் செய்” என்பதைத் தட்டி, உங்கள் தரவைப் பகிர்வதற்கான முறையைத் தேர்வுசெய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.