இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

FCC இணக்க அறிக்கை

FCC விதிகளின் பிரிவு 15 உடன் இந்தச் சாதனம் இணங்குகிறது. செயல்பாடு பின்வரும் இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்: (1) இந்தச் சாதனம் தீங்கு விளைவிக்கும் குறுக்கீட்டை ஏற்படுத்தக்கூடாது, மற்றும் (2) விரும்பத்தகாத செயல்பாட்டை ஏற்படுத்தக்கூடிய குறுக்கீடு உட்பட, பெறப்படும் எந்தவொரு குறுக்கீட்டையும் இந்தச் சாதனம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பு: FCC விதிகளின் 15ஆம் பிரிவின்படி பரிசோதிக்கப்பட்டு, கிளாஸ் B டிஜிட்டல் சாதனத்திற்கான வரம்புகளுடன் இந்தச் சாதனம் இணங்குகிறது என கண்டறியப்பட்டுள்ளது. ரெசிடென்சியல் இன்ஸ்டாலேஷனில் தீங்கு விளைவிக்கும் குறுக்கீட்டில் இருந்து நியாயமான பாதுகாப்பை வழங்குவதற்காக இந்த வரம்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சாதனம் ரேடியோ அதிர்வெண் ஆற்றலை உருவாக்குகிறது, பயன்படுத்துகிறது மற்றும் கதிர்வீச்சை வெளியிடுகிறது. வழிமுறைகளின்படி நிறுவப்படாவிட்டால் அல்லது பயன்படுத்தப்படாவிட்டால், ரேடியோ தகவல்தொடர்புகளில் தீங்கு விளைவிக்கும் குறுக்கீடுகளை இது ஏற்படுத்தக்கூடும். எனினும், குறிப்பிட்ட நிறுவலில் குறுக்கீடு ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ரேடியோ அல்லது தொலைக்காட்சியின் ரிசப்ஷனில் இந்தச் சாதனம் தீங்கு விளைவிக்கும் குறுக்கீட்டை ஏற்படுத்துகிறது எனச் சந்தேகித்தால், இந்தச் சாதனத்தை ஆஃப் செய்து ஆன் செய்வதன் மூலம் அதை உறுதிப்படுத்த முடியும், பின்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அந்தக் குறுக்கீட்டைச் சரிசெய்ய பயனர் முயலலாம்:

  • ரிசீவிங் ஆன்டனாவின் திசையமைவை மாற்றவும் அல்லது இடத்தை மாற்றவும்.

  • சாதனம் மற்றும் ரிசீவருக்கு இடையே உள்ள இடைவெளியை அதிகரிக்கவும்.

  • ரிசீவர் இணைக்கப்பட்டிருக்கும் சர்க்யூட்டிலிருந்து வேறுபட்ட சர்க்யூட்டில் உள்ள ஓர் அவுட்லெட்டில் சாதனத்தை இணைக்கவும்.

  • உதவிக்கு டீலர் அல்லது அனுபவம் வாய்ந்த ரேடியோ/ TV தொழில்நுட்ப வல்லுநரைத் தொடர்புகொள்ளவும்.

Appleஆல் அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் அல்லது திருத்தங்களை இந்தத் தயாரிப்பில் செய்தால் மின்காந்த இணக்கத்தன்மை (EMC) மற்றும் வயர்லெஸ் இணக்கத்தன்மை செல்லாததாக மாறலாம், தயாரிப்பை இயக்க உங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் ரத்துசெய்யப்படலாம்.

இந்தத் தயாரிப்பின் EMC இணக்கம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இணக்கமான புறச் சாதனங்களைப் பயன்படுத்துவதும், சிஸ்டம் கூறுகளுக்கு இடையே காப்பிடப்பட்ட கேபிள்களைப் பயன்படுத்துவதும் இந்த நிபந்தனைகளில் அடங்கும். ரேடியோக்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற எலக்ட்ரானிக் சாதனங்களில் குறுக்கீடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்க, இணக்கமான புறச் சாதனங்களைப் பயன்படுத்துவதும் சிஸ்டம் கூறுகளுக்கு இடையே காப்பிடப்பட்ட கேபிள்களைப் பயன்படுத்துவதும் முக்கியமாகும்.

எண்ணெய் எடுக்கும் தளங்கள் மற்றும் விமானங்களில் Wi-Fi 6 GHzஐ ஆதரிக்கும் மாடல்களை இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளது. பெரிய விமானத்தில் 10,000 அடிக்கு மேல் பறக்கும்போது 5.925-6.425 GHzஇல் இயக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெளிப்புற நிலையான கட்டமைப்புகளில் நிறுவுவது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆளில்லா விமான அமைப்புகளின் கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்பிற்காக 5.925-7.125 GHZ பேண்ட்டில் டிரான்ஸ்மிட்டர்களை இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

பொறுப்பாளர் (FCC விவகாரங்களுக்கு மட்டும் தொடர்புகொள்ளவும்):

Apple Inc.

One Apple Park Way, MS 911-AHW

Cupertino, CA 95014

USA

apple.com/contact

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.