இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உள்ள இசைச் செயலியில் பாடல்களை ஷஃபிள் செய்தல் அல்லது மீண்டும் பிளே செய்தல்

உங்கள் லைப்ரரியில் உள்ள அனைத்து பாடல்கள் மற்றும் ஆல்பங்களின் வரிசையைக் கலைத்து இயக்கலாம் (அவற்றை சீரற்ற வரிசையில் பிளே செய்யலாம்) அல்லது ஒரு பிளேலிஸ்ட் அல்லது ஆல்பத்தை கலைத்து இயக்கலாம். தனிப் பாடல்கள், பிளேலிஸ்ட்கள் அல்லது ஆல்பங்களையும் நீங்கள் மீண்டும் பிளே செய்யலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள இசை செயலிக்குச் செல்லவும்.

  2. ஒரு பாடல் பிளே ஆகும்போது, “இப்போது பிளே ஆவது” திரையைத் திறக்க மினி பிளேயரைத் தட்டவும்.

  3. “அடுத்து பிளே செய்வது” பட்டன்-ஐத் தட்டி, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • உங்கள் பாடல்களை சீரற்ற வரிசையில் பிளே செய்ய (கலைத்து இயக்க): “கலைத்து இயக்கு” பட்டன்-ஐத் தட்டவும். கலைத்து இயக்குவதை ஆஃப் செய்ய மீண்டும் தட்டவும்.

    • ஆல்பம், பிளேலிஸ்ட் அல்லது முழு வரிசையையும் மீண்டும் பிளே செய்ய: “மீண்டும் செய்” பட்டன்-ஐத் தட்டவும்.

      குறிப்பு: பல பாடல்கள் மீண்டும் மீண்டும் பிளே செய்யப்படும்போது, எத்தனை பாடல்கள் மீண்டும் மீண்டும் செய்யப்படும் என்பதை நீங்கள் பார்க்கலாம். அதைப் பார்க்க வரிசையின் கீழ்ப்பகுதிக்கு ஸ்க்ரால் செய்யவும்.

    • ஒரு பாடலை மீண்டும் பிளே செய்ய: “மீண்டும் செய்” பட்டன்-ஐ இருமுறை தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.