இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலியில் உங்கள் மருந்துகளைக் கண்காணித்தல்

நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள், வைட்டமின்கள், சப்ளிமெண்ட்டுகள் ஆகியவற்றைக் கண்காணித்து நிர்வகிக்கலாம்.

Siri: ஆதரிக்கப்படும் மாடல்களில், இவற்றைச் சொல்லிப் பாருங்கள்: “Log my 6AM medications as taken.” அனைத்து மொழிகள் அல்லது வட்டாரங்களில் கிடைப்பதில்லை. Siriஐ எப்படி பயன்படுத்துவது என்பதை அறிக.

உடல்நலம் செயலியில் உள்ள “மருந்துகள்” திரை, தேதி மற்றும் மருந்துகளின் பதிவைக் காட்டும்.

குறிப்பு: சில அம்சங்கள் அனைத்து நாடுகள் அல்லது வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை. “மருந்துகள்” அம்சம் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு மாற்று இல்லை. உங்கள் மருந்துகளின் லேபிள்களில் கூடுதல் விவரங்கள் கிடைக்கும். உங்கள் உடல்நலம் தொடர்பாக எந்த முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு, மருத்துவச் சேவை வழங்குநருடன் நீங்கள் கலந்தாலோசிக்கவும்.

புதிய மருந்தைச் சேர்த்தல் மற்றும் உட்கொள்வதற்கான திட்டமிடுதல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. கீழே வலதுபக்கம் உள்ள “உலாவுக” என்பதைத் தட்டி, “மருந்துகள்” என்பதைத் தட்டவும்.

  3. உங்கள் பட்டியலைத் தொடங்க “ஒரு மருந்தைச் சேர்” என்பதை அல்லது உங்கள் பட்டியலில் சேர்க்க “மருந்தைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  4. மருந்தை அடையாளம் காண, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • பெயரை டைப் செய்ய: வார்த்தைப் புலத்தைத் தட்டி, பெயரை உள்ளிட்டு, “சேர்” என்பதைத் தட்டவும்.

      U.S.இல் மட்டும், நீங்கள் டைப் செய்யத் தொடங்கும்போது பரிந்துரைகள் தோன்றும். நீங்கள் ஒரு பரிந்துரையைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது பெயரைத் டைப் செய்து, “சேர்” என்பதைத் தட்டலாம்.

    • கேமராவைப் பயன்படுத்த: வார்த்தைப் புலத்திற்கு அடுத்துள்ள “கேமரா” பட்டன்-ஐத் தட்டி (U.S. மட்டும்; ஆதரிக்கப்படும் மாடல்களில்), திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

      பொருத்தம் கண்டறியப்படவில்லை எனில், “பெயரின்படி தேடு” என்பதைத் தட்டி, பெயரை டைப் செய்யவும் (மேலே விவரிக்கப்பட்டபடி).

  5. பின்வருவனவற்றைச் செய்யவும்:

    • மருந்து வகையைத் தேர்வுசெய்ய: ஒரு விருப்பத்தைத் தட்டி, “அடுத்து” என்பதைத் தட்டவும்.

    • மருந்துகளின் வலிமையைத் தேர்வுசெய்ய: ஒரு விருப்பத்தைத் தட்டி, “அடுத்து” என்பதைத் தட்டவும்.

    • அட்டவணையை அமைக்க: உங்கள் மருந்துகளின் திட்டமிடப்பட்ட எண்ணிக்கையையும் கால அளவையும் அமைக்க, திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, “அடுத்து” என்பதைத் தட்டவும்.

      “இதை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்?” என்பதன் கீழ் உள்ள “மாற்று” என்பதைத் தட்டவும். “சுழற்சி காலத் திட்டமிடலில்” அல்லது “சில நாட்களுக்கு ஒருமுறை” போன்ற வேறொரு அட்டவணை வகையைத் தேர்வுசெய்ய வேண்டும்.

    • வடிவத்தைத் தேர்வுசெய்ய (விருப்பத்தேர்வு): ஒரு விருப்பத்தைத் தட்டி, “அடுத்து” என்பதைத் தட்டவும்.

    • நிறங்களைத் தேர்வுசெய்ய (விருப்பத்தேர்வு): ஒரு விருப்பத்தைத் தட்டி, “அடுத்து” என்பதைத் தட்டவும்.

  6. நீங்கள் நிறைவுசெய்த பிறகு, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

பின்தொடர்வு நினைவூட்டல்கள் மற்றும் அதிமுக்கிய விழிப்பூட்டல்களை ஆன் செய்தல்

மருந்தை எடுத்துக்கொள்வதற்கான அட்டவணையை அமைத்தால், “உடல்நலம்” செயலியில் இருந்து மருந்தைப் பதிவுசெய்யும்படி நினைவூட்டும் அறிவிப்புகளைப் பெறுவீர்கள். திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்குப் பிறகும் ஒரு மருந்து எடுத்துக்கொள்ளப்பட்டதாகப் பதிவு செய்யப்படவில்லை எனில் பின்தொடர்வு நினைவூட்டல்களைப் பெறலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. கீழே வலதுபக்கம் உள்ள “உலாவுக” என்பதைத் தட்டி, “மருந்துகள்” என்பதைத் தட்டவும்.

  3. திரையின் கீழ்பகுதியில் உள்ள “விருப்பங்கள்” என்பதைத் தட்டி, “பின்தொடர்வு நினைவூட்டல்கள்” என்பதை ஆன் செய்யவும்.

    “பின்தொடர்வு நினைவூட்டல்கள்” என்பதை ஆன் செய்யும்போது, உங்கள் ஒவ்வொரு மருந்துக்கும் “அதிமுக்கிய விழிப்பூட்டல்கள்” என்பதையும் ஆன் செய்யலாம். அதிமுக்கிய விழிப்பூட்டல்கள் பூட்டுத்திரையில் தோன்றும். ஃபோகஸ் ஆன் செய்யப்பட்டிருந்தாலும் iPhone மியூட் செய்யப்பட்டிருந்தாலும் கூட ஒலியை பிளே செய்யும்.

  4. “அதிமுக்கிய விழிப்பூட்டல்கள்” என்பதைத் தட்டி, மருந்துக்கு அடுத்துள்ள பட்டனைத் தட்டி, “அனுமதி” என்பதைத் தட்டவும்.

    அதிமுக்கிய விழிப்பூட்டல்களை ஆஃப் செய்ய, அமைப்புகள்  > செயலிகள் > உடல்நலம் > அறிவிப்புகளுக்குச் சென்று, “அதிமுக்கிய விழிப்பூட்டல்கள்” என்பதற்கு அடுத்துள்ள பட்டனைத் தட்டவும்.

மருந்துக்கான அட்டவணையை மாற்றுதல் அல்லது பிற தகவல்களைப் புதுப்பித்தல்

உடல்நலம் செயலியில் உள்ள “மருந்துகள்” திரை மருந்து அட்டவணையில் மாற்றம் செய்வதற்கான விருப்பங்களைக் காட்டும்.
  1. உங்கள் iPhoneஇல் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. கீழே வலதுபக்கம் உள்ள “உலாவுக” என்பதைத் தட்டி, “மருந்துகள்” என்பதைத் தட்டவும்.

  3. “உங்கள் மருந்துகள்” என்பதற்குக் கீழே ஸ்க்ரால் செய்து, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • மருந்தை உட்கொள்வதற்கான திட்டமிடலை மாற்ற: ஒரு மருந்தைத் தட்டி, “திட்டமிடல்” என்பதற்கு ஸ்க்ரால் செய்து, “திருத்து” என்பதைத் தட்டி, அதை மாற்ற ஒரு புலத்தைத் தட்டவும்.

    • ஒரு மருந்தின் ஐகான், புனைபெயர் அல்லது குறிப்புகளை மாற்ற: ஒரு மருந்தைத் தட்டி, “விவரங்கள்” என்பதற்குக் கீழே ஸ்க்ரால் செய்து, ஐகானை மாற்ற “திருத்து” என்பதைத் தட்டவும் அல்லது வார்த்தைப் புலங்களில் ஒன்றைத் தட்டி, உங்கள் மாற்றங்களைச் செய்யவும்.

    • உங்கள் பட்டியலை மறுவரிசைப்படுத்த: உங்கள் மருந்துகளின் பட்டியலுக்கு மேலே உள்ள "திருத்து" என்பதைத் தட்டி, ஒரு மருந்துக்காக "மறுவரிசைப்படுத்து" பட்டன்-ஐத் தொட்டுப் பிடித்து, அதை ஒரு புதிய நிலைக்கு இழுக்கவும்.

    • மருந்தைக் காப்பகப்படுத்த: உங்கள் மருந்துகளின் பட்டியலில் உள்ள ஒரு மருந்தை அதன் பெயரின் இடதுபக்கமாக ஸ்வைப் செய்து, “காப்பகம்” என்பதைத் தட்டவும்.

    • காப்பகப்படுத்தப்பட்ட மருந்தை உங்கள் மருந்துகளின் பட்டியலில் மீண்டும் காட்ட: உங்கள் மருந்துகளின் பட்டியலுக்கு மேலே உள்ள "திருத்து" என்பதைத் தட்டி, மருந்தின் பெயருக்கு அடுத்துள்ள “சேர்” பட்டன்-ஐத் தட்டவும். நீங்கள் முன்பு அமைத்த எந்தவொரு திட்டமிடலும் பாதுகாக்கப்படாது.

    • மருந்தை நீக்க: மருந்தைத் தட்டி, கீழே ஸ்க்ரால் செய்து, “மருந்தை நீக்கு” என்பதைத் தட்டவும்.

    • மருந்துகள் எடுத்துக்கொள்வது குறித்த அறிவிப்புகளைப் பெறுவதை மாற்ற: அறிவிப்புகளைப் பார்த்தல் மற்றும் அவற்றுக்குப் பதிலளித்தல் மற்றும் அறிவிப்பு அமைப்புகளை மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

  4. நீங்கள் நிறைவுசெய்த பிறகு, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

மருந்தை எடுத்துகொள்ளும்போது பதிவுசெய்தல்

நீங்கள் எடுத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்ட அல்லது திட்டமிடப்படாத மருந்துகளை எப்போது வேண்டுமானாலும் பதிவுசெய்யலாம். இயல்பாகவே, உடல்நலம் செயலியில் நீங்கள் உருவாக்கிய அட்டவணையின் அடிப்படையில் உங்கள் மருந்துகளைப் பதிவுசெய்ய வேண்டிய நேரம் வரும்போது உங்கள் iPhone உங்களுக்கு நினைவூட்டும்.

குறிப்பு: உடல்நலம் செயலியின் தரவுகள் உங்களின் எல்லாச் சாதனங்களிலும் ஒத்திசைக்கப்பட, அவை ஒரே Apple கணக்கில் உள்நுழைந்துள்ளதையும், இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதையும், சமீபத்திய OS பதிப்பிற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளதையும் உறுதிசெய்யவும்.

உடல்நலம் செயலியில் உள்ள “மருந்துகள்” திரை, மருந்துகளின் பதிவைக் காட்டும்.
  1. உங்கள் iPhoneஇல் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. கீழே வலதுபக்கம் உள்ள “உலாவுக” என்பதைத் தட்டி, “மருந்துகள்” என்பதைத் தட்டவும்.

  3. திரையின் மேற்பகுதியில் உள்ள ஒரு நாளைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • திட்டமிடப்பட்ட மருந்தை எடுத்துக்கொண்டீர்களா என்று பதிவுசெய்ய: “பதிவுசெய்” என்பதற்குக் கீழே உள்ள பட்டியலில் உள்ள மருந்தின் பெயரைத் தட்டி, மருந்துக்குக் கீழே “எடுத்துக்கொள்ளப்பட்டது” அல்லது “தவறியது” என்பதைத் தட்டவும்.

    • திட்டமிடப்படாத மருந்தைப் பதிவுசெய்ய: “பதிவுசெய்” என்பதற்குக் கீழே உள்ள பட்டியலில் உள்ள “தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளும் மருந்து” என்பதைத் தட்டி, மருந்துக்குக் கீழே “எடுத்துக்கொள்ளப்பட்டது” என்பதைத் தட்டவும்.

  5. நீங்கள் நிறைவுசெய்த பிறகு, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: எடுத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்ட மருந்தைப் பதிவுசெய்யும்படி அறிவிப்பைப் பெறும்போது, அறிவிப்பை அழுத்திப் பிடித்து, ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

நீங்கள் இதுவரை எடுத்துக்கொண்ட மருந்துகளைச் சரிபார்க்க கீழே வலதுபக்கம் உள்ள “உலாவுக” என்பதைத் தட்டி, “மருந்துகள்” என்பதைத் தட்டி, “மருந்து” (உங்கள் மருந்துகளின் பட்டியலில் உள்ளது) என்பதைத் தட்டவும்.

உங்கள் மருந்துகளின் பட்டியலைப் பகிர்தல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • உங்கள் பட்டியலை (அல்லது குறிப்பிட்ட மருந்துகள்) உங்கள் அன்புக்குரியவருடன் பகிர்ந்து கொள்ள: உடல்நலம் செயலியில் உங்கள் மருந்துகளின் பட்டியலைப் பகிர்தல் என்பதைப் பார்க்கவும்.

      உதவிக்குறிப்பு: நீங்கள் பகிரத் தொடங்கிய பிறகு ஒரு புதிய மருந்தைச் சேர்த்தால், உங்கள் பகிர்ந்தவை பட்டியலில் அதைச் சேர்க்கவும்.

    • உங்கள் பட்டியலை PDF ஆகப் பகிர: கீழே வலதுபக்கம் உள்ள “உலாவுக” என்பதைத் தட்டி, “மருந்துகள்” என்பதைத் தட்டி, கீழே ஸ்க்ரால் செய்து, “எக்ஸ்போர்ட் PDF” என்பதைத் தட்டி, “பகிர்” பட்டன்-ஐத் தட்டி, ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.