இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் நண்பர்களுடன் விளையாட Game Centerஐப் பயன்படுத்துதல்

நீங்கள் Game Centerஇல் நட்புக் கோரிக்கைகளை அனுப்பலாம், உங்கள் பயனர் சுயவிவரத்தை நிர்வகிக்கலாம், சாதனைகளை அடையலாம், லீடர்போர்டுகளில் போட்டியிடலாம், FaceTime அழைப்பின்போது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடலாம். ஆதரிக்கப்படும் கேம்களை உங்கள் Apple சாதனங்கள் அனைத்திலும் அணுக Game Centerஐப் பயன்படுத்தலாம்.

உங்கள் Game Center சுயவிவரத்தை அமைத்தல்

  1. அமைப்புகள்  > Game Center என்பதற்குச் சென்று, உங்கள் Apple கணக்கில் உள்நுழையவும்.

  2. நீங்கள் ஒன்றாக சேர்ந்து கேம்களை விளையாடும்போது உங்கள் நண்பர்கள் பார்ப்பதற்கான ஒரு புனைபெயரைத் தேர்வுசெய்ய, புனைபெயரைத் தட்டி, ஒரு பெயரை உள்ளிடவும் அல்லது பரிந்துரைகளில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. உங்கள் அவதாரைப் பிரத்தியேகமாக்க, “அவதாரைத் திருத்து” என்பதைத் தட்டி, பின்னர் புதிய Memojiஐ உருவாக்க, ஏற்கனவே உள்ள Memojiஐப் பயன்படுத்தவும் அல்லது உங்கள் முதலெழுத்துக்கள் எப்படித் தோன்ற வேண்டும் என்பதைப் பிரத்தியேகமாக்கவும்.

உங்கள் Game Center சுயவிவரம், சாதனைகள், சமீபத்திய கேம்கள், நண்பர்கள் மற்றும் அவர்களில் செயல்பாடுகளைப் பார்க்க, அமைப்புகள் > Game Center > [உங்கள் சுயவிவரம்] என்பதற்குச் செல்லவும்.

நண்பர்களைச் சேர்த்தல்

  1. அமைப்புகள்  > Game Center என்பதற்குச் செல்லவும்.

  2. “நண்பர்களை அழை” என்பதைத் தட்டி, பரிந்துரைக்கப்படும் தொடர்புகளில் இருந்து தேர்வுசெய்யவும் அல்லது பெயரை உள்ளிட்டு தொடர்பைக் கண்டறியவும்.

  3. பின்வரும் வழிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் நட்புக் கோரிக்கைகளுக்கு பெறுநர்கள் பதிலளிக்கலாம்:

    • மெசேஜஸில் இணைப்பைத் தட்டவும்.

    • அமைப்புகள் > Game Center > நட்புக் கோரிக்கைகள் என்பதற்குச் செல்லவும்.

தொடர்புகள் செயலியிலும் நீங்கள் நண்பரைச் சேர்க்கலாம். தொடர்பு கார்டைத் திறந்து, “Game Centerஇல் நண்பரைச் சேர்” என்பதைத் தட்டவும்.

நட்புப் பரிந்துரைகளைப் பெறுதல் மற்றும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்று பார்த்தல்

App Storeஇல், Game Centerஇல் நண்பராவதற்கு உங்கள் தொடர்புகளை அழைக்கலாம், உங்கள் நண்பர்களின் சமீபத்திய செயல்பாடுகளைப் பார்க்கலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள App Store செயலிக்குச் செல்லவும்.

  2. கேம்ஸ் அல்லது Arcade (நீங்கள் Apple Arcadeக்குச் சந்தா சேர்ந்திருந்தால்) என்பதைத் தட்டவும்.

  3. நண்பர்கள் விளையாடுபவை, சமீபத்திய செயல்பாடுகள், நட்புப் பரிந்துரைகள் ஆகியவற்றைப் பார்க்க கீழே ஸ்க்ரால் செய்து Game Centerக்குச் செல்லவும்.

அமைப்புகள்  > Game Center > அனைத்து நண்பர்களும் என்பதற்குச் சென்றும் உங்கள் நண்பர்களின் சுயவிவரம், சமீபத்திய செயல்பாடுகளைப் பார்க்கலாம்.

SharePlayஐப் பயன்படுத்தி நண்பர்களுடன் விளையாடுதல்

App Storeஇல் Game Center மல்டிபிளேயர் கேமைக் கண்டறிந்துப் பதிவிறக்கலாம் மற்றும் FaceTime அழைப்பில நண்பர்களுடன் விளையாடலாம்.

அழைப்பின் போது, ஆதரிக்கப்படும் மல்டிபிளேயர் கேமைத் திறந்து, SharePlayஐத் தொடங்கு என்பதைத் தட்டி, திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

மற்றவர்களுடன் ஒன்றிணைந்து மீடியாவைப் பார்க்க, கேட்க, கேம் விளையாட SharePlayஐப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

மல்டிபிளேயர் கேமுக்கு நபர்களை அழைக்க AirDropஐப் பயன்படுத்துதல்

Game Centerஐ ஆதரிக்கும் மல்டிபிளேயர் கேம்களுக்கு அருகிலுள்ள நண்பர்களை அழைக்க, AirDropஐப் பயன்படுத்தலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் விளையாட விரும்பும் கேமைத் திறக்கவும்.

  2. நீங்கள் நண்பர்களை அழைக்கும் திரைக்குச் செல்லவும்.

  3. உங்கள் iPhoneஇன் டிஸ்ப்ளேவை மற்றவரின் iPhone அல்லது Apple Watchஇன் மேலிருந்து சில சென்டிமீட்டர் தூரத்தில் வைத்திருக்கவும்.

    இணைக்கப்படுவதைக் குறிக்க இரு சாதனங்களிலிருந்தும் ஒரு வெளிச்சம் வெளிப்படுகிறது.

  4. மற்றொருவரின் திரையில் கேம் தோன்றும் வரை உங்கள் சாதனங்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாக வைத்திருப்பதைத் தொடரவும்.

பயனரைப் புகாரளித்தல் அல்லது நண்பரை அகற்றுதல்

ஒரு பயனர் ஏமாற்றுவது, பொருத்தமற்ற படம் அல்லது புனைபெயர் அல்லது வேறு சிக்கல் குறித்து நீங்கள் புகாரளிக்கலாம். உங்கள் நண்பர்கள் பட்டியலில் இருந்து ஒருவரை நீக்கலாம்.

  1. அமைப்புகள்  > Game Center > அனைத்து நண்பர்களும் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் புகாரளிக்க அல்லது அகற்ற விரும்பும் நண்பரைத் தட்டி, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “பயனரைப் புகாரளி” அல்லது “நண்பரை அகற்று” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Game Center அமைப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை நிர்வகித்தல்

நீங்கள் நண்பர்களைப் பார்க்கலாம், நட்புக் கோரிக்கைகளை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம், தனியுரிமை அமைப்புகளை நிர்வகிக்கலாம், கட்டுப்பாடுகளை அமைக்கலாம்.

  1. அமைப்புகள்  > Game Center என்பதற்குச் சென்று, பின்வருவனவற்றைச் செய்யவும்:

    • நண்பர்களைப் பார்த்தல்: “அனைத்து நண்பர்களும்” என்பதைத் தட்டவும்.

    • நட்புக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது நிராகரித்தல்: “நட்புக் கோரிக்கைகள்” என்பதைத் தட்டவும்.

    • உங்கள் Game Center நண்பர்களின் பட்டியலை அணுக செயலிகளுக்கு அனுமதி வழங்குதல் அல்லது மறுத்தல்: “நண்பர்கள் பட்டியலைப் பகிர்” என்பதைத் தட்டவும்.

    • உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியையும் ஃபோன் எண்ணையும் பயன்படுத்தி உங்களைக் கண்டறிய Game Center நண்பர்களை அனுமதித்தல்: “உங்களைக் கண்டறிய நண்பர்களுக்கு உதவுங்கள்” என்பதை ஆன் செய்யவும்.

    • செயல்பாட்டுப் பகிர்வை நிர்வகித்தல்: உங்கள் சுயவிவரம், சாதனையின் செயல்நிலை, லீடர்போர்டு புதுப்பிப்புகள், சமீபத்தில் விளையாடிய கேம்கள் ஆகியவற்றைப் யாரெல்லாம் பார்க்கலாம் என்பதைக் குறிப்பிட “அனைவரும்”, “நண்பர்கள் மட்டும்” அல்லது “நீங்கள் மட்டுமே” என்பதைத் தேர்வுசெய்யவும்.

    • அருகிலுள்ள பிளேயர்களிடம் இருந்து அழைப்புகளை அனுமதித்தல்: அதே கேமை விளையாடும் அருகிலுள்ள Game Center பிளேயர்கள் Wi-Fi அல்லது Bluetooth மூலம் மல்டிபிளேயர் கேம் விளையாட உங்களை அழைப்பதை அனுமதிக்க “அருகிலுள்ள பிளேயர்கள்” என்பதை ஆன் செய்யவும்.

  2. அமைப்புகள்  > ஸ்க்ரீன் டைம் > உள்ளடக்கம் & தனியுரிமைக் கட்டுப்பாடுகளுக்குச் சென்று, “உள்ளடக்கம் & தனியுரிமைக் கட்டுப்பாடுகள்” என்பதை ஆன் செய்யவும்.

  3. “App Store, மீடியா, இணையம் & கேம்கள்” என்பதைத் தட்டி, Game Centerக்கு ஸ்க்ரால் செய்து, பின்வரும் ஏதேனும் கட்டுப்பாடுகளை அமைக்கவும்:

    • மல்டிபிளேயர் கேம்கள்

    • நண்பர்களைச் சேர்த்தல்

    • நண்பர்களுடன் இணைதல்

    • திரைப் பதிவு

    • அருகிலுள்ள மல்டிபிளேயர்

    • தனிப்பட்ட மெசேஜிங்

    • சுயவிவரத் தனியுரிமை மாற்றங்கள்

    • அவதார் & புனைபெயர் மாற்றங்கள்

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.