இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உடல்நலம் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்

iPhone சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலியில் பல்வேறு மூலங்களிலிருந்து பெறப்பட்ட உடல்நலன் குறித்தத் தரவுகள் சேமிக்கப்படுகின்றன: அவை உங்கள் iPhone, iPad, Apple Watch, இணக்கமான செயலிகள் மற்றும் மூன்றாம் தரப்பு சாதனங்கள் போன்றவை. நீங்கள் உறக்க அட்டவணையை அமைக்கலாம், உங்கள் ஹெட்ஃபோன் ஒலியளவுகளைச் சரிபார்க்கலாம், உங்கள் மருந்துகளை எப்போது உட்கொள்ள வேண்டும் என்பதைத் திட்டமிடலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.

“உடல்நலம்” செயலியில் சுருக்கவிவரத் திரை உள்ளது. செயல்பாடு, உயிர்க்கூறு அளவீடுகள், மனநிலை மற்றும் மருந்துகள் பற்றிய தகவல்கள் பின் செய்யப்பட்டவை பிரிவுக்குக் கீழே தோன்றும்.

உங்கள் உடல்நலத் தரவுகளை ஒரே இடத்தில் கண்டறியுங்கள்

உங்கள் மருத்துவசேவை வழங்குநர்களிடமிருந்து நகர்வுநிலைத் தரவு, உறக்க வரலாறு மற்றும் உடல்நலப் பதிவுகள் உட்பட முக்கியமான உடல்நலம் குறித்த விவரங்களை iPhone தானாகவேச் சேமித்து பகுப்பாய்வு செய்கிறது. நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள், உங்கள் மாதவிடாய் சுழற்சி மற்றும் பலவற்றைப் பற்றிய தகவல்களையும் நேரடியாகச் சேர்க்கலாம். உங்கள் உடல்நலத் தரவுகள் அனைத்தையும் காட்ட, உடல்நலம் செயலியைத் திறந்து, ஹைலைட்களைப் பார்க்க, கீழே ஸ்க்ரால் செய்யவும்.

பெயர், பிறந்த தேதி, இரத்த வகை மற்றும் பிற தகவல்களுக்கான புலங்கள் அடங்கிய “உடல்நல விவரங்கள்” திரை.

உங்கள் உடல்நலம் குறித்த விவரங்களை நிரப்புங்கள்

உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க, உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம் மற்றும் பிற அடிப்படைத் தகவல்களை “உடல்நல விவரங்கள்” பிரிவில் சேர்க்கவும். உங்கள் உடல்நலம் குறித்த விவரங்களைத் திருத்த, சுருக்கவிவரத்தைத் தட்டி, மேலே வலதுபக்கம் உங்கள் படம் அல்லது முதலெழுத்துக்களைத் தட்டி, “உடல்நல விவரங்கள்” என்பதைத் தட்டி, “திருத்து” என்பதைத் தட்டவும்.

உடல்நலம் செயலியில் உள்ள “மருந்துகள்” திரை, தேதி மற்றும் மருந்துகளின் பதிவைக் காட்டும்.

நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளுக்கான நேர அட்டவணை

நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பட்டியலை உருவாக்கி, எப்போது அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான நேர அட்டவணையை அமைத்து, நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது பதிவு செய்யலாம். புதிய மருந்தைச் சேர்க்க, “உலாவுக” என்பதைத் தட்டி, “மருந்துகள்” என்பதைத் தட்டிய பிறகு, “மருந்தைச் சேர்” என்பதைத் தட்டவும்.

திரையின் மேல் பகுதியில் ஒரு வாரத்திற்கான டைம்லைனை சுழற்சிக் கண்காணிப்பு திரை காட்டும். சிவப்பு நிற திட வட்டங்களும் ஊதா நிறப் புள்ளிகளும் டைம்லைனில் முதல் 5 நாட்களைக் குறிக்கின்றன. டைம்லைனுக்குக் கீழே மாதவிடாய், அறிகுறிகள் மற்றும் பலவற்றைப் பற்றிய தகவல்களைச் சேர்ப்பதற்கான விருப்பங்கள் உள்ளன.

உங்கள் மாதவிடாய் சுழற்சியைக் கண்காணியுங்கள்

“சுழற்சிக் கண்காணிப்பு” மூலம் உங்கள் மாதவிடாய் மற்றும் வயிற்றுப் பிடிப்புகள் போன்ற அறிகுறிகளைப் பதிவுசெய்யலாம், பாலூட்டுதல் போன்ற சுழற்சிக் காரணிகளைக் கண்காணிக்கலாம். உங்கள் அடுத்த மாதவிடாய் காலம் அல்லது கருவுறும் காலம் எப்போது தொடங்கும் என்பதைக் கணிக்க இதைப் பயன்படுத்தலாம். சுழற்சிக் கண்காணிப்பை அமைக்க, “உலாவுக” என்பதைத் தட்டி, “சுழற்சிக் கண்காணிப்பு” என்பதைத் தட்டி, “சுழற்சிக் கண்காணிப்பை அமை” என்பதைத் தட்டவும்.

மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.