இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் பங்குகளைச் சரிபார்த்தல்

பங்குச்சந்தையின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும், நீங்கள் பின்தொடரும் பங்குகளின் செயல்திறனைப் பார்க்கவும் “பங்குகள்” செயலியைப் பயன்படுத்தவும்.

Siri: இவற்றைச் சொல்லிப் பாருங்கள்: “How are the markets doing?” அல்லது “How’s Apple stock today?” Siriஐ எப்படிப் பயன்படுத்துவது என அறிக.

பங்குகள் செயலியில் வெவ்வேறு பங்குகளின் பட்டியலைக் காட்டும் விருப்பப் பட்டியல். பட்டியலில் உள்ள ஒவ்வொரு பங்கிலும், இடமிருந்து வலமாக பங்கின் குறியீடு மற்றும் பெயர், செயல்திறன் விளக்கப்படம், பங்கின் விலை மற்றும் விலை மாற்றம் ஆகியவை காட்டப்படுகின்றன. திரையின் மேல்பகுதியில், “எனது குறியீடுகள்” விருப்பப் பட்டியல் தலைப்புக்கு மேலே, தேடல் புலம் உள்ளது. திரையின் கீழ்ப்பகுதியில் “வணிகச் செய்திகள்” உள்ளது. செய்திகளைக் காட்ட”வணிகச் செய்திகள்” என்பதை மேலே ஸ்வைப் செய்யவும்.

பங்குகளைச் சரிபார்த்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள பங்குகள் செயலிக்குச் செல்லவும்.

  2. மேலும் விவரங்களுக்கு “எனது குறியீடுகள்” விருப்பப் பட்டியலில் உள்ள டிக்கர் குறியீட்டைத் தட்டவும்.

  3. ஒரு குறிப்பிட்ட பங்கைத் தேடிப்பார்ப்பதற்கு திரையின் மேல்பகுதியில் உள்ள தேடல் புலத்தில் டிக்கர் குறியீடு, நிறுவனத்தின் பெயர், நிதியின்/ஃபண்டின் பெயர் அல்லது இன்டெக்ஸை உள்ளிட்ட பிறகு, தேடல் முடிவுகளில் காட்டப்படும் குறியீட்டின் மீது தட்டவும்.

விளக்கப்படங்கள், விவரங்கள் மற்றும் செய்திகளைக் காட்டுதல் என்ற இணைப்பைப் பார்க்கவும்.

“எனது குறியீடுகள்” விருப்பப் பட்டியலில் குறியீடுகளை நிர்வகித்தல்

பங்குகள் செயலியை முதன்முதலாகத் திறக்கும்போது, டிக்கர் குறியீடுகளின் பட்டியல் திரையில் தோன்றும். இது “எனது குறியீடுகள்” விருப்பப் பட்டியல் என்று அழைக்கப்படும். “எனது குறியீடுகள்” விருப்பப் பட்டியலைப் புதுப்பிக்கலாம் அல்லது நிர்வகிக்கலாம். மேலும் உங்களின் சொந்த விருப்பப் பட்டியல்களை உருவாக்கலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள பங்குகள் செயலிக்குச் செல்லவும்.

  2. குறியீடு மீது தட்டி அதன் மிக சமீபத்திய விலை, தினசரி சதவீத மாற்றம், சந்தை மூலதன மதிப்பு மற்றும் பலவற்றைப் பார்க்க அதைத் தட்டவும்.

  3. “எனது குறியீடுகள்” விருப்பப் பட்டியலில் மாற்றங்களைச் செய்ய, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • குறியீட்டைச் சேர்க்க: தேடல் புலத்தில், டிக்கர் குறியீடு, நிறுவனத்தின் பெயர், நிதியின் பெயர் அல்லது குறியீட்டை உள்ளிடவும். தேடல் முடிவுகளில் “சேர்” பட்டன்-ஐத் தட்டி, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

    • குறியீட்டை நீக்க: உங்கள் விருப்பப் பட்டியலில் உள்ள குறியீட்டில் இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.

      குறிப்பு: “எனது குறியீடுகள்” விருப்பப் பட்டியலில் இருந்து ஒரு குறியீட்டை நீங்கள் நீக்கினால், அந்தக் குறியீடு உங்களின் பிற விருப்பப் பட்டியல்களில் இருந்தும் நீக்கப்படும் (பல விருப்பப் பட்டியல்களை நிர்வகித்தல் என்பதைப் பார்க்கவும்).

    • குறியீடுகளை மறுவரிசைப்படுத்த: உங்கள் விருப்பப் பட்டியலில் ஒரு குறியீட்டைத் தொட்டுப் பிடித்து, அதை ஒரு புதிய இடத்திற்கு இழுக்கவும்.

    • நாணய வகையைக் காட்ட: “மேலும்” பட்டன்-ஐத் தட்டி வர்த்தகம் செய்யப்படும் பங்கின் நாணய வகையைக் காட்ட “நாணய வகையைக் காட்டு” என்பதைத் தட்டவும்.

    • குறியீட்டைப் பகிர: உங்கள் விருப்பப் பட்டியலில் உள்ள ஒரு குறியீட்டின் மீது இடதுபக்கம் ஸ்வைப் செய்து, “பகிர்” பட்டன்-ஐத் தட்டிய பிறகு, மெசேஜஸ் அல்லது Mail போன்ற பகிர்வு முறையைத் தேர்வுசெய்யவும்.

விளக்கப்படங்கள், விவரங்கள் மற்றும் செய்திகளைக் காட்டுதல்

டிக்கர் குறியீடுகளைப் பற்றிய ஊடாடும் விளக்க அட்டவணைகள், செயல்திறன் விவரங்கள் மற்றும் தொடர்புடைய செய்திகளை உங்கள் விருப்பப் பட்டியல் மற்றும் நீங்கள் தேடும் குறியீடுகளில் பார்க்கலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள பங்குகள் செயலிக்குச் செல்லவும்.

  2. மேலும் விவரங்களைப் பார்க்க விரும்பும் குறியீட்டின் மீது தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • காலப்போக்கில் பதிவான செயல்திறனைக் காட்ட: விளக்கப்பட அட்டவணையின் மேலே உள்ள நேர வரம்பு தேர்வுகளிலிருந்து விருப்பத்தைத் தட்டவும்.

    • குறிப்பிட்ட தேதி அல்லது நேரத்திற்கான மதிப்பைக் காட்ட: விளக்கப்படத்தை ஒரு விரலால் தொட்டு பிடிக்கவும்.

    • காலப்போக்கில் பதிவான மதிப்பில் உள்ள வேறுபாட்டைக் காட்ட: இரண்டு விரல்களால் விளக்கப்படத்தைத் தொட்டு பிடித்துக் கொள்ளவும்.

    • மேலும் விவரங்களைக் காட்ட: 52-வார உயர்வு மற்றும் தாழ்வு, பீட்டா, EPS மற்றும் சராசரி வர்த்தக அளவு போன்ற கூடுதல் விவரங்களைக் காண விளக்கப்பட அட்டவணைக்குக் கீழே உள்ள தரவை ஸ்வைப் செய்யவும்.

    • செய்திகளைப் படிக்க: கூடுதல் செய்திகளைப் பார்க்க, மேலே ஸ்வைப் செய்த பிறகு செய்தியைத் தட்டவும்.

  3. உங்கள் விருப்பப் பட்டியலுக்குத் திரும்ப, “நிராகரி ஓவர்லே” பட்டன்-ஐத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் விருப்பப் பட்டியலில் உள்ள குறியீட்டைத் தொட்டுப் பிடித்து அதன் செயல்திறனை விரைவாகப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.