இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் AssistiveTouchஐப் பயன்படுத்துதல்

iPhoneஇல் AssistiveTouch மூலம், தொடுதிரைச் செயல்பாடுகளை உங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கலாம். சில சைகைகளைச் செயல்படுத்த முடியவில்லை என்றால், அவற்றை ஒரு தட்டுதல் அல்லது வேறொரு சைகையைக் கொண்டு மாற்றலாம் அல்லது ஒரு எளிய ஒலியை நீங்கள் பயன்படுத்தலாம். iPhone பட்டன்களை அழுத்த வேண்டியிருக்கும்போதும் நீங்கள் AssistiveTouchஐப் பயன்படுத்தலாம். எந்த ஆக்சஸரியும் இல்லாமலோ இணக்கமான அடாப்டிவ் ஆக்சஸரியை (எ.கா., ஜாய்ஸ்டிக்) கொண்டோ நீங்கள் AssistiveTouchஐப் பயன்படுத்தலாம்.

அறிவிப்பு மையம், சாதனம், கட்டுப்பாட்டு மையம், முகப்பு, சைகைகள், பிரத்தியேகம் ஆகியவற்றுக்கான கட்டுப்பாடுகளைக் காட்டக்கூடிய AssistiveTouch மெனு உள்ள iPhone.

AssistiveTouchஐப் பயன்படுத்தி நீங்கள் பின்வருவம் செயல்களைச் செய்யலாம்:

  • முகப்புத் திரைக்குச் செல்லுதல்

  • இருமுறை தட்டுதல்

  • பல விரல் சைகைகளைச் செய்தல்

  • ஸ்க்ரால் சைகைகளைச் செய்தல்

  • Siriஐச் செயல்படுத்துதல்

  • கட்டுப்பாட்டு மையம், அறிவிப்புகள், பூட்டுத்திரை, செயலி மாற்றி போன்றவற்றை அணுகுதல்

  • iPhoneஇல் ஒலியளவைச் சரிசெய்தல்

  • iPhoneஐ அசைத்தல்

  • ஸ்கிரீன்ஷாட் எடுத்தல்

  • ஆதரிக்கப்படும் iPhone மாடல்களில் 3D Touchஐப் பயன்படுத்துதல்

  • Apple Payஐப் பயன்படுத்துதல்

  • அவசரகால SOSஐப் பயன்படுத்துதல்

  • திரையிலுள்ளதைச் சொல்லுதல்

  • டுவெல் அமைப்புகளை மாற்றுதல்

  • iPhoneஐ மீண்டும் தொடங்குதல்

AssistiveTouchஐ அமைத்தல்

Siri: இதுபோன்ற ஒன்றைச் சொல்லவும்: “AssistiveTouchஐ ஆன் செய்தல்” அல்லது ”AssistiveTouchஐ ஆஃப் செய்தல்.” Siriஐ எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிக.

இல்லையெனில் பின்வருவனவற்றைச் செய்யவும்:

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > தொடுதல் > AssistiveTouch என்பதற்குச் செல்லவும்.

  2. AssistiveTouchஐ ஆன் செய்யவும். AssistiveTouch மெனு பட்டன் திரையில் தோன்றும்.

  3. AssistiveTouchஐப் பிரத்தியேகமாக்க, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைத் தட்டவும்:

    • மேல்நிலை மெனுவைப் பிரத்தியேகமாக்க: ஐகானின் செயல்பாட்டை மாற்ற அதைத் தட்டவும். மெனுவில் உள்ள ஐகான்களின் எண்ணிக்கையை மாற்ற, “குறை” பட்டன் அல்லது “அதிகரி" பட்டன் பட்டனைத் தட்டவும். மெனுவில் எட்டு ஐகான்கள் வரை இருக்கலாம்.

    • ஒருமுறை தட்டுதல், இருமுறை தட்டுதல், நீண்ட நேரம் அழுத்துதல் அல்லது 3D Touchஐப் பயன்படுத்த: மெனு பட்டனுடன் நீங்கள் தொடர்புகொள்ளும்போது இயங்கக்கூடிய பிரத்தியேகச் செயல்களை ஒதுக்கவும். ஆதரிக்கப்படும் iPhone மாடல்களில் மட்டுமே 3D Touch கிடைக்கும்.

    • புதிய சைகையை உருவாக்க: உங்களுக்கு பிடித்த சைகைகளைச் சேர்க்கவும்.

    • செயலில் இல்லாதபோது வெளிப்படைத்தன்மை: பயன்பாட்டில் இல்லாதபோது மெனு பட்டனின் தெரிவுநிலை சரிசெய்யப்படும்.

    • AssistiveTouch மூலம் உறுதிசெய்ய: Face ID உள்ள iPhoneஇல், பக்கவாட்டு பட்டனை இருமுறை கிளிக் செய்வதற்குப் பதிலாக AssistiveTouchஐப் பயன்படுத்தி Face ID மூலம் பேமெண்ட்டுகளை உறுதிசெய்யவும்.

உதவிக்குறிப்பு: AssistiveTouchஐ ஆன் அல்லது ஆஃப் செய்ய, நீங்கள் அணுகல்தன்மைச் சுருக்கவழியை அமைத்து, பின்னர் பக்கவாட்டு பட்டனையோ முகப்பு பட்டனையோ மூன்று முறை கிளிக் செய்யவும்.

AssistiveTouchஐப் பயன்படுத்துதல்

AssistiveTouch ஆன் செய்யப்பட்டிருக்கும்போது AssistiveTouch மெனு பட்டனை தட்டவும், பின்னர் ஒரு செயல் அல்லது சைகையைத் தேர்வுசெய்யவும்.

முந்தைய மெனுவுக்குத் திரும்ப, மெனுவின் மையத்தில் உள்ள அம்புக்குறியைத் தட்டவும். சைகையைச் செய்யாமல் மெனுவிலிருந்து வெளியேற, மெனுவுக்கு வெளியே ஏதேனும் ஒரு இடத்தில் தட்டவும்.

AssistiveTouch மெனு பட்டனை நகர்த்த, அதைத் திரையில் ஒரு புதிய இடத்திற்கு இழுக்கவும்.

பல விரல் சைகைக்கு, பின்வருவனவற்றைச் செய்யவும்:

  • பிஞ்ச் செய்து சுழற்ற: “பிரத்தியேகமாக்கு” என்பதைத் தட்டி, “பிஞ்ச் செய்து சுழற்று” என்பதைத் தட்டவும். இரண்டு முறை பிஞ்ச் செய்யும்போது வட்டங்கள் தோன்றினால் பிஞ்ச் செய்யும்போது தோன்றும் வட்டங்களை நகர்த்த, திரையில் ஏதேனும் ஒரு இடத்தில் தொடவும், பின்னர் பிஞ்ச் செய்தல் அல்லது சுழற்றுதலுக்கான சைகையைச் செய்ய வட்டங்களை உள்ளே அல்லது வெளியே இழுக்கவும். முடித்ததும், மெனு பட்டனைத் தட்டவும்.

  • பல விரல்களில் ஸ்வைப் செய்ய அல்லது இழுக்க: சாதனம் > மேலும் > சைகைகள் என்பதைத் தட்டி, சைகைக்குத் தேவையான விரல்கள் எண்ணிக்கையைத் தட்டவும். வட்டங்கள் திரையில் தோன்றும்போது, சைகையைச் செய்யத் தேவையான திசையில் ஸ்வைப் செய்யவும் அல்லது இழுக்கவும். முடித்ததும், மெனு பட்டனைத் தட்டவும்.

பாயின்டர் சாதனம் மூலம் iPhone ஐக் கட்டுப்படுத்துதல்

டிராக்பேடுகள், கேம் கன்ட்ரோலர்கள், மவுஸ் சாதனங்கள் போன்ற Bluetooth® மற்றும் USB வசதியுள்ள பாயின்டர் சாதனங்களை நீங்கள் இணைக்கலாம்.

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > தொடுதல் > AssistiveTouch என்பதற்குச் செல்லவும்.

  2. AssistiveTouchஐ ஆன் செய்யவும்.

  3. பாயின்டர் சாதனங்களுக்குக் கீழே, பின்வரும் ஒன்றைத் தட்டவும்:

    • சாதனங்கள்: சாதனங்களை இணைத்து அல்லது இணைப்பு நீக்கி, பட்டன்களைப் பிரத்தியேகமாக்கும்.

    • மவுஸ் கீக்கள்: கீபோர்டைப் பயன்படுத்தி AssistiveTouch பாயின்டரைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும்.

    • பாயின்டர் ஸ்டைல்: அளவு, நிறம் மற்றும் தானாக மறைக்கும் அமைப்புகள் மாற்றப்படும்.

    • திரையில் உள்ள கீபோர்டைக் காட்டு: திரையில் உள்ள கீபோர்டு காட்டப்படும்.

    • கிளிக் செய்யும்போதான ஒலி: பாயின்டர் சாதனம் கிளிக் செய்யப்படும்போது ஒலி பிளே செய்யப்படும்.

    • எப்போதும் மெனுவைக் காட்டு: பாயின்டர் சாதனம் இணைக்கப்பட்டிருக்கும்போது AssistiveTouch மெனு காட்டப்படும்.

    • கண்காணிப்பு உணர்திறன்: டிராக்பேடில் மவுஸ் அல்லது உங்கள் விரலை இழுக்கும்போது பாயின்டர் எந்த வேகத்தில் நகரும் என்பதை மாற்றும்.

நீங்கள் பாயின்டர் சாதனத்தின் தோற்றத்தையும் மாற்றலாம்.

டுவெல் கட்டுப்பாட்டை அமைத்தல்

திரையில் இருப்பவை மீதோ திரையில் உள்ள ஒரு பகுதியிலோ கர்சரை அசைக்காமல் வைத்திருக்கும்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட செயலை iPhone செய்யும்.

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > தொடுதல் > AssistiveTouch என்பதற்குச் சென்று, “டுவெல் கட்டுப்பாடு” என்பதை ஆன் செய்யவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் சரிசெய்யவும்:

    • ஃபால்பேக் செயல்: செயலை நிறைவேற்றிய பிறகு, டுவெல் செயல்பாடானது தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபால்பேக் செயலுக்குத் திரும்ப ஆன் செய்யவும்.

    • நகரக்கூடிய தூரம்: ஒரு ஐட்டத்தின்மீது கர்சரை நகர்த்தாமல் வைக்கும்போது, கர்சர் நகரக்கூடிய தூரத்தைச் சரிசெய்யவும்.

    • ஹாட் கார்னர்கள்: திரையின் ஒரு மூலையில் கர்சரை நகர்த்தாமல் வைக்கும்போது, ஸ்கிரீன் ஷாட்டை எடுப்பது, கட்டுப்பாட்டு மையத்தைத் திறப்பது, Siriஐச் செயல்படுத்துவது, ஸ்க்ரால் செய்வது, சுருக்கவழியைப் பயன்படுத்துவது போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட செயலைச் செய்யவும்.

    • டுவெல் செயல்பாட்டைத் தொடங்கத் தேவையான நேரம்: “குறை” பட்டன் அல்லது “அதிகரி" பட்டன்-ஐத் தட்டவும்.

சைகைகளைச் செய்ய எளிய ஒலிகளைப் பயன்படுத்துதல்

வாயில் பாப் அல்லது S எனும் ஒலியை எளிதில் உருவாக்கும்போது, AssistiveTouchஐப் பயன்படுத்தி iPhone சைகையையோ பிற செயல்களையோ மேற்கொள்ளச் செய்யலாம்.

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > தொடுதல் > AssistiveTouch என்பதற்குச் சென்று, AssistiveTouchஐ ஆன் செய்யவும்.

  2. “ஒலிச் செயல்பாடுகள்” என்பதைத் தட்டிய பிறகு ஒரு ஒலியைத் தட்டவும்.

  3. ஒலியை எழுப்பும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய சைகையையோ வேறு செயலையோ தேர்ந்தெடுக்கவும்.

  4. சைகை அல்லது செயலைச் செய்ய, ஒலியை எழுப்பினால் போதும்.

பிரத்தியேகச் சைகைகளை உருவாக்குதல்

AssistiveTouch மெனுவில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சைகைகளை (அதாவது தொட்டுப் பிடி அல்லது இரண்டு விரல்களை சுழற்றுதல் போன்றவற்றை) சேர்க்கலாம். நீங்கள் வெவ்வேறு கோணங்களில் சுழற்றியும்கூட பல சைகைகளை உருவாக்கலாம்.

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > தொடுதல் > AssistiveTouch > புதிய சைகையை உருவாக்கு என்பதற்குச் செல்லவும்.

  2. பதிவுசெய்யும் திரையில் உங்கள் சைகையை மேற்கொள்ளவும். எடுத்துக்காட்டாக:

    • தொட்டுப் பிடித்தல் சைகை: பதிவுசெய்வதைக் காட்டும் பார் பாதி தூரத்தை அடையும் வரை உங்கள் விரலை ஒரே இடத்தில் தொட்டுப் பிடிக்கவும், பிறகு விரலை எடுக்கவும். பதிவுசெய்யும் போது உங்கள் விரலை நகர்த்தாமல் கவனமாக இருங்கள், இல்லையெனில் சைகை ஒரு இழுத்தலாகப் பதிவுசெய்யப்படும்.

    • இரண்டு விரல்களால் சுழற்றுதல் சைகை: iPhone திரையில் இரு விரல்களுக்கு இடையே உள்ள ஒரு புள்ளியைச் சுற்றி இரண்டு விரல்களைச் சுழற்றவும். (இதை ஒரு விரலாலோ ஸ்டைலஸாலோ செய்யலாம்-ஒவ்வொரு வளைவையும் தனித்தனியே, ஒன்றன் பின் ஒன்றாக உருவாக்கலாம்.)

    தொடர்ச்சியான தட்டுதல் அல்லது இழுத்தல் சைகைகளை நீங்கள் பதிவுசெய்தால், அவை அனைத்தும் ஒரே நேரத்தில் மீண்டும் பிளே செய்யப்படும். உதாரணத்திற்கு, ஒரு விரல் அல்லது ஸ்டைலஸைப் பயன்படுத்தி திரையில் நான்கு இடங்களில் நான்கு தனித்தனியான தட்டுதல்களை, தொடர்ச்சியாகத் தட்டிப் பதிவுசெய்தால், ஒரே நேரத்தில் நான்கு விரல்களால் தட்டுவதற்கான செயல்பாடு உருவாக்கப்படும்.

  3. சைகையைச் சரியாகச் செய்ய முடியவில்லை என்றால், ரத்துசெய் என்பதைத் தட்டிய பிறகு மீண்டும் முயலவும்.

  4. சைகையைத் திருப்தியாகச் செய்து முடித்தால் “சேமி” என்பதைத் தட்டிய பிறகு சைகைக்குப் பெயரிடவும்.

உங்கள் பிரத்தியேகச் சைகையைப் பயன்படுத்த, AssistiveTouch மெனு பட்டனை தட்டி, “பிரத்தியேகமாக்கு” என்பதைத் தட்டவும், பின்னர் சைகையைத் தேர்வுசெய்யவும். உங்கள் சைகையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீல நிற வட்டங்கள் தோன்றும்போது, சைகையைப் பயன்படுத்த விரும்பும் இடத்திற்கு அவற்றை இழுத்துச் சென்று விட்டுவிடுங்கள்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.