இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் பாதுகாப்புச் சரிபார்ப்பு மூலம் தகவல் பகிர்வை நிர்வகித்தல்

நபர்கள், செயலிகள் மற்றும் சாதனங்களுடன் நீங்கள் பகிரும் தகவல்களை அவ்வப்போது மறுஆய்வு செய்து புதுப்பிக்க, பாதுகாப்புச் சரிபார்ப்பைப் பயன்படுத்தவும். பாதுகாப்புச் சரிபார்ப்பைப் பயன்படுத்தி, “இடம் அறிக” செயலியில் பிறருடன் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்வதை நிறுத்தலாம், புகைப்படங்கள், குறிப்புகள், கேலண்டர் போன்ற பகிர்ந்த உள்ளடக்கத்திற்கான பிறரின் அணுகலை அகற்றலாம், செயலிகளுக்கான சிஸ்டம் தனியுரிமை அனுமதிகளை மீட்டமைக்கலாம், நீங்கள் வைத்திருக்கும் சாதனத்தில் மெசேஜஸ் மற்றும் FaceTimeஐக் கட்டுப்படுத்தலாம்.

  1. அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு > பாதுகாப்புச் சரிபார்ப்பு என்பதற்குச் செல்லவும்.

  2. “பகிர்வு & அணுகலை நிர்வகிக்கவும்” என்பதைத் தட்டி “தொடர்க” என்பதைத் தட்டிய பிறகு திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

பாதுகாப்புச் சரிபார்ப்பால் மறுஆய்வு செய்யவோ மாற்றவோ முடியாத தகவல்களையும் நீங்கள் பகிரலாம்-எடுத்துக்காட்டாக, கணக்குகள் மற்றும் பாஸ்வேர்டுகள், சமூக ஊடகப் பகிர்வு மற்றும் மற்றொரு சாதனத்தில் இருந்து பகிரப்பட்ட தகவல்கள். நீங்கள் பகிரும் தகவல்களைக் குறைப்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ள, தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பான பயனர் வழிகாட்டியில் உள்ள பாதுகாப்புச் சரிபார்ப்பைப் பயன்படுத்தும்போது கூடுதலாகக் கவனிக்க வேண்டியவை என்ற பிரிவைப் பார்க்கவும்.

முக்கியம்: அவசரகாலத்தில், உங்கள் சாதனம் மற்றும் தனிப்பட்ட தகவல்களுக்கான அணுகலை விரைவாக மீட்டமைப்பதற்கும் பாதுகாப்புச் சரிபார்ப்பைப் பயன்படுத்தலாம். அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > பாதுகாப்புச் சரிபார்ப்பு என்பதற்குச் சென்று “அவசரகால மீட்டமைப்பு” என்பதைத் தட்டி திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

பாதுகாப்புச் சரிபார்ப்பு குறித்து மேலும் தெரிந்துகொள்ள, தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பான பயனர் வழிகாட்டியில் உள்ள iPhoneஇல் உங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக “பாதுகாப்புச் சரிபார்ப்பு” எப்படி வேலை செய்கிறது? என்ற பிரிவைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.