இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள புகைப்படத்திலோ வீடியோவிலோ உள்ள உள்ளடக்கத்துடன் தொடர்புகொள்ள நேரலை உரையைப் பயன்படுத்துதல்

ஆன்லைனில் நீங்கள் பார்க்கும் உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் படங்களுக்குள் இருக்கும் உரையை நேரலை உரை அங்கீகரிக்கிறது. இந்த உரையுடன் நீங்கள் பல வழிகளில் தொடர்புகொள்ளலாம். நகலெடுக்கவும், பகிரவும் அல்லது மொழிபெயர்க்கவும் உரையைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது ஃபோன் அழைப்பு மேற்கொள்வது, இணையதளத்தைத் திறப்பது அல்லது நாணயங்களை மாற்றுவது போன்ற பணிகளைச் செய்ய விரைவான செயல்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

ஆதரிக்கப்படும் மாடல்களில் நேரலை உரை கிடைக்கும். மேலும் Safari, ஃபோட்டோஸ், கேமரா, விரைவுப் பார்வை மற்றும் பலவற்றில் பயன்படுத்தபடும்.

நேரலை உரையை ஆன் செய்தல்

நேரலை உரையைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன், அது அனைத்து ஆதரவு மொழிகளுக்கும் ஆன் செய்யப்பட்டுள்ளதா என உறுதிசெய்யவும்.

  1. அமைப்புகள்  > பொது அமைப்புகள் > மொழி & பிராந்தியம் என்பதற்குச் செல்லவும்.

  2. நேரலை உரையை ஆன் செய்யவும் (பச்சை நிறம் ஆன் செய்யப்பட்டுள்ளது).

புகைப்படத்திலோ வீடியோவிலோ உரையை நகலெடுத்தல், மொழிபெயர்த்தல், பார்த்தல்

  1. ஒரு புகைப்படத்தைத் திறக்கவும் அல்லது உரையைக் கொண்ட வீடியோவை இடைநிறுத்தவும்.

  2. “உரையைக் கண்டறி” பட்டன்-ஐத் தட்டி, பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட உரையைத் தொட்டுப் பிடிக்கவும்.

  3. குறிப்பிட்ட உரையைத் தேர்ந்தெடுக்க, கிராப் புள்ளிகளைப் பயன்படுத்தி பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • உரையை நகலெடுக்க: “குறிப்புகள்” அல்லது “மெசேஜஸ்” போன்ற மற்றொரு செயலியில் ஒட்ட உரையை நகலெடுக்கவும்.

    • அனைத்தையும் தேர்ந்தெடுக்க: ஃபிரேமிற்குள் உள்ள அனைத்து உரையையும் தேர்ந்தெடுக்கவும்.

    • பார்க்க: பிரத்தியேகமான இணையப் பரிந்துரைகளைப் பார்க்கவும்.

    • மொழிபெயர்க்க: உரையை மொழிபெயர்க்கவும்.

    • இணையத்தில் தேட: இணையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உரையைப் பார்க்கவும்.

    • பகிர: AirDrop, மெசேஜஸ், Mail அல்லது மற்ற கிடைக்கக்கூடிய விருப்பங்களைப் பயன்படுத்தி உரையைப் பகிரவும்.

  4. புகைப்படம் அல்லது வீடியோவுக்குத் திரும்ப, “தேர்ந்தெடுக்கப்பட்ட உரையைக் கண்டறி” பட்டன்-ஐத் தட்டவும்.

விரைவான செயல்களுடன் புகைப்படம் அல்லது வீடியோவுக்குள் பணிகளைச் செய்தல்

புகைப்படம் அல்லது வீடியோவின் உள்ளடக்கத்தைப் பொறுத்து, ஃபோன் அழைப்பு, திசைகளைப் பெறுதல், மொழிகளை மொழிபெயர்த்தல், நாணயங்களை மாற்றுதல் மற்றும் பலவற்றைச் செய்ய, திரையின் அடிப்பகுதியில் உள்ள விரைவான செயலை நீங்கள் தட்டலாம்.

  1. ஒரு புகைப்படத்தைத் திறக்கவும் அல்லது உரையைக் கொண்ட வீடியோவை இடைநிறுத்தவும்.

  2. “உரையைக் கண்டறி” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. திரையின் அடிப்பகுதியில் உள்ள விரைவான செயலைத் தட்டவும்.

  4. புகைப்படம் அல்லது வீடியோவுக்குத் திரும்ப, “தேர்ந்தெடுக்கப்பட்ட உரையைக் கண்டறி” பட்டன்-ஐத் தட்டவும்.

நேரலை உரை அனைத்துப் பிராந்தியங்களிலும் அல்லது மொழிகளிலும் இல்லை. iOS மற்றும் iPadOS அம்சத்தின் கிடைக்கும்நிலையைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.